Wednesday, October 31, 2018

“தோழர்”

எங்கள் பெயருக்கு பின்னால் எந்த சாதிய, மத அடையாளங்களும் இல்லை.
ஆனால் எங்கள் பெயருக்கு முன்னால் அணுகுண்டைவிட வலிமையான “தோழர்” என்ற சொல் உண்டு

தமிழ்தேசிய விடுதலையை முன்னெடுப்பது மார்க்கிசிய கொள்கைக்கு முரணானதா?

தமிழ்தேசிய விடுதலையை முன்னெடுப்பது
மார்க்கிசிய கொள்கைக்கு முரணானதா?
நல்லவேளை லெனின் இப்போது உயிரோடு இல்லை.
இருந்திருந்தால் அவரையும் புலித் தேசியம் பேசுவதாக முத்திரை குத்தியிருப்பார்கள்.
“தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதன்பின்பே அவர்களை பிரிவினையை கைவிட்டு ஜக்கியத்திற்கு வருமாறு அழைக்க முடியும்” என தோழர் சண்முகதாசன் கூறினார்.
லெனின் கூறியதையே தோழர் சண்முகதாசன் கூறினார். தோழர் சண்முகதாசன் கூறியதையே நாம் கூறுகிறோம்.
ஆனால் எம்மை மட்டும் பயங்கரவாதிகள் என்றும் புலிவால் பிடிக்கும் தேசிய வெறியர்கள் என்றும் முத்திரை குத்துகின்றனர்.
சரி. அப்படியென்றால் மண்ணுக்கேத்த மார்க்சியத்தை முன்வைத்து தமிழ்தேசிய போராட்டத்தை முன்னெடுத்து காட்டுங்களேன்!
உங்கள் பின்னாடி வருவதில் எமக்கு ஒன்றும் தயக்கம் இல்லையே!

வெல்லும்வரை வீண் முயற்சி என்று கூறுவார்கள்

•வெல்லும்வரை வீண் முயற்சி என்று கூறுவார்கள்
வென்ற பின் விடாமுயற்சி என்று பாராட்டுவார்கள்!
மார்க்ஸ் மார்க்சியத்தை எழுதி வெளியிட்டபோது “இது நடைமுறைக்கு உதவாது. நூலகங்களில் அடக்கி வைப்பதற்குத்தான் லாயக்கு” என்றார்கள்.
அதன்பின் லெனின் மார்க்சியத்தை முன்வைத்து ரஸ்சிய புரட்சியை செய்தபோது “ தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை. முழு உலகப் புரட்சி செய்ய வேண்டும்” என்றார்கள்.
அப்புறம் மாசேதுங் தேசிய முதலாளிகளை உள்ளடக்கி புதிய ஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்தபோது “இது மார்க்சியத்திற்கு விரோதமானது” என்றார்கள்.
தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன் மார்க்சிய லெனிய மாசேதுங் சிந்தனையில் தமிழ்தேசிய விடுதலையை முன்வைத்து போராடிய போது அவரைப் “பயங்கரவாதி” என்றார்கள்.
இலங்கையில் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதை “புலித் தேசியம்” என்று முத்திரை குத்த முனைகின்றனர்.
இவ்வாறு வரலாறு முழுவதும் தம்மை மார்க்கியவாதிகள் எனக்கூறும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்கள் தாம் போராடாமல் இருப்பதற்கே இத்தகைய காரணங்களை கூறிவருகின்றனர்.
இவர்களுக்கு நாம் கொடுக்கும் பதில் விரைந்து வெற்றியைப் பெறுவதே!

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றால்

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றால்
பாராளுமன்ற உறுப்பினர்கள் பன்றிகள் தானே?
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார் தோழர் லெனின். அப்படியென்றால் அங்கு உள்ள எம்.பி மார் பன்றிகள்தானே?
எமது எம்.பிமாரை பன்றிகள் என்றால் அவர்களுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ ஆனால் அவர்களின் செம்புகளுக்கு வந்துவிடுகிறது.
அன்று லெனின் கூறியது உண்மைதான் என்பதை இன்று எமது எம்பி மார்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்று ஒரு எம்.பி யின் விலை 60 கோடி ரூபா என்கிறார்கள். எங்கிருந்து இந்த பணம் வருகிறது? எல்லாம் திருட்டு பணம்தானே?
இப்படி எழுதியவுடன் உடனே ஓடிவந்து நாலு லைக் வேண்டத்தான் இப்படி எழுதுவதாக கூறுவார்கள்.
இப்ப எனது கவலை என்னவென்றால் தோழர் லெனினும் நாலு லைக் வேண்டத்தான் கூறியதாக எழுதிவிடப் போகிறார்களே என்பதுதான்.
ஏனெனில் பாவம் அவர்களுக்கு லெனின் செத்துவிட்டார் என்பதுகூட தெரியாது. லெனினையும் யாரோ ஒரு முகநூல் போராளி என்றுதான் நினைப்பார்கள்.
சரி, இப்ப நான் இன்னொரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். “தேர்தல் பாதை திருடர் பாதை” என்று புரட்சியாளர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகள் திருடர்கள் என்றுதானே அர்த்தம்.
சாதாரண திருடர்களுக்கும் இந்த அரசியல் திருடர்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி இதைப் படிக்கும்பொது உங்கள் மனதில் தோன்றலாம்.
சாதாரண திருடன் எம்மை தேர்வு செய்கிறான். அரசியல் திருடனை நாம் தெரிவு செய்கிறோம். அவ்வளவே.
அதாவது எமது எந்த வீட்டில் திருடுவது என்பதை திருடனே முடிவு செய்கிறான். அரசியலில் யார் திருடவேண்டும் என்பதை நாமே வோட்டு போட்டு தெரிவு செய்கிறோம்.
அதுமட்டுமல்ல இன்னொரு முக்கிய வித்தியாசமும் உள்ளது. சாதாரண திருடனை பொலிஸ் கைது செய்யும். அரசியல் திருடனுக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கும்.
குறிப்பு- இந்த பதிவை படித்தவுடன் சிலருக்கு சுமந்திரன் நினைவுக்கு வந்தால் அதற்கு அட்மின் பொறுப்பு அல்ல.

ஒரு மீம்ஸ் மூவாயிரம் கோடி ரூபாவை தூக்கியெறிந்துவிடுமா?

ஒரு மீம்ஸ் மூவாயிரம் கோடி ரூபாவை தூக்கியெறிந்துவிடுமா?
ஆம். முடியும் என்று எமது மீம்ஸ் கிரியேட்டர்கள் நிரூபித்துள்ளார்கள்.
3000 கோடி ரூபா செலவில் பிரதமர் மோடி சர்தார் பட்டேலுக்கு சிலை நிறுவியுள்ளார்.
இதனை எதிர்த்து,
விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்யும் நிலையில் மூவாயிரம் கோடி ரூபாவுக்கு பட்டேலுக்கு சிலை வேண்டுமா என்று எழுதலாமா, அல்லது
மேக் இன் இந்தியா என்று கூறிக்கொண்டு திரியும் பிரதமர் மோடி பட்டேல் சிலையை சீனா மூலம் செய்யலாமா என்று கேட்டு எழுதலாமா, அல்லது
ராணுவத்தின் மூலம் தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கிய பட்டேலை ஒற்றுமையை ஏற்படுத்தியவர் என்று அழைப்பது நியாயமா என்று கேட்டு எழுதலாமா,
என்றெல்லாம் மண்டையை போட்டு குழப்பிக் கொண்டிருந்தவேளை ஒரு மீம்ஸ் இத்தனையையும் ஒரு படம் மூலம் கூறிவிட்டது.
மொட்டை ராஜேந்திரன் முகத்தில் பட்டேல் சிலையை வெளிப்படுத்தியதன் மூலம் மோடியின் மூவாயிரம் கோடி ரூபா திட்டத்தை தூக்கியெறிந்துவிட்டார்கள்.
இந்த படத்தை பார்த்தவுடன் ஏற்பட்ட சிரிப்பு இன்னும் அடங்கவில்லை. பாராட்டுகள்.
இப்போது புரிகிறதா அரசியல்வாதிகள் ஏன் மீம்ஸ் கிரியேட்டர்களை சிறையில் அடைக்க முனைகிறார்கள் என்று.

சம்பந்தர் ஜயா!

சம்பந்தர் ஜயா!
நீங்க மட்டும் சாகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லுங்க.
பிச்சை எடுத்தாவது பத்தாயிரம் கோடி ரூபாவில் உங்களுக்கு திருகோணமலையில சிலை வைக்கிறோம்.
சாவீர்களா ஜயா?
குறிப்பு- இது வெறும் நகைச்சுவை பதிவு அல்ல.

Tuesday, October 30, 2018

சுப்பர் சிங்கர் போட்டியில் ஒரு தமிழ் கலைஞர் வென்றார்.முதலில் சுப்பர் சிங்கர் போட்டியில்
ஒரு தமிழ் கலைஞர் வென்றார்.
அடுத்து பிக்பாஸ் போட்டியில்
ஒரு தமிழ் பெண் வென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழர் வெல்வது
நம்பிக்கை தருகிறது! மகிழ்ச்சி!