Tuesday, March 19, 2013

தொடரும் மாணவர் போராட்டம் படைக்கும் சாதனைகள் பாரீர்!


தொடரும் மாணவர் போராட்டம் படைக்கும் சாதனைகள் பாரீர்!

தி.மு.க வேறு வழியின்றி மத்திய அரசில் இருந்து வெளியேறியுள்ளது. இது நாடகம் என ஜெயா அம்மையார் கூறுகிறார். முள்ளிவாயக்காலில் அவலம் நடந்த போது பதவி விலகாத கலைஞர் தற்போது விலகுவது அம்மையார் கூறுவது போல் நாடகமாக இருந்தாலும் கூட இதற்கு காரணம் தற்போது நடைபெறும் மாணவர் போராட்டம் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?

கலைஞர் வாபஸ் நாடகம் அரங்கேற்றி இருப்பதால் இனி அவரை முறியடிக்க ஜெயா அம்மையாரும் நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதுபோலவே இதுவரை மௌனம் சாதித்து வந்த சி.பி.எம் கம்யுனிஸ்ட் கட்சியும் வேறு வழியின்றி ராஜபக்ச மீது விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கை விட்டுள்ளது. இவ்வாறு இதுவரை துரோகம் பண்ணி வந்த அரசியல் கட்சிகள் எல்லாம் வேறு வழியின்றி இன்று இந் நிலைகளை எடுப்பதற்கு முழுக் காரணமும் மாணவர் போராட்டம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

தொடரும் மாணவர் போராட்டம் மக்களின் முழு ஆதரவைப் பெற்றதுடன் மக்களை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தி வருகின்றது. இதன் விளைவு மதுரையில் ஒருவர் தீக்குளித்து இறந்துள்ளார்.

சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினரையும் நாளுக்கு நாள் போராட்டத்தில் ஈடுபடுத்திவரும் மாணவர் போராட்டம் உண்மையிலே பெருமை மிக்க சாதனைகள் படைத்து வருகிறது.

தார் வீதியில் கொதிக்கும் வெய்யிலில் இந்த மாணவர்கள் போராடுவது எதற்காக?


தார் வீதியில் கொதிக்கும் வெய்யிலில் இந்த மாணவர்கள் போராடுவது எதற்காக?

இந்த மாணவர் போராட்டம் குறித்து ஏன் அரசு வாய் திறக்க மறுக்கிறது?

சாதி, மதம், இனம், கடந்து அனைவரையும் ஒன்றினைக்கும் திறன் கொண்டது மாணவர் போராட்டம்.

மாணவ சக்தி மகத்தான சக்தி. மக்களை ஒன்றினைத்து அது வரைலாறு படைக்கும். இது உறுதி.

தமிழக பொலிஸ் அராஜகம் ஒழிக


 தமிழக பொலிஸ் அராஜகம் ஒழிக.
• மாணவர் போராட்டம் மேலும் ஓங்குக.

அடித்து உதைத்து குண்டுக்கட்டாக தூக்கி வீசினாலும்
கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தாலும்
இதற்கெல்லாம் பயப்படும் பொறுக்கி அரசியல்வாதி அல்ல - இவர்கள்
மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்து பொங்கி எழும் மாணவ அலைகள்!

காந்தி தேசத்தில் காந்தீய வழியில் காந்தி சிலையின் கீழ் உண்ணாவிரதம் இருப்பதைக் கூட தடுத்து பொலிஸ் அராஜகம் செய்கிறது. கல்லுரிகளுக்கு விடுமுறை விட்டு மாணவர் போராட்டத்தை நசுக்க முனைகிறது. அரசு தங்கள் கனவு பலிக்கவில்லை என்றவுடன் பொலிஸ் அராஜகத்தை கட்டவிழ்த்து மாணவர்களை மிரட்டுகின்றது. இந்த பொலிஸ் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

எட்டு மாணவர்களுடன் ஆரம்பித்த மாணவர் போராட்டம் இன்று ஆயிரக்கணக்கில் பரந்து விரிந்துள்ளது. கடந்த ஏழுநாட்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர். அனால் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ இது குறித்து வாய் திறக்க மறுக்கிறது.

இந்த போராட்டத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம். ஏனெனில் இது மாணவ சமுதாயத்திற்கு எமது நண்பன் யார்? எதிரி யார்? என்பதை மட்டுமல்ல எதிர்காலத்தில் எத்தகைய போராட்ட பாதையை தெரிவு செய்ய வேண்டும்? என்ற சிறந்த பாடத்தை அனுபவபூர்வமாக கற்றுக்கொடுக்கின்றது.

இந்த மாணவர் போராட்டம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானது மட்டுமல்ல இனி உலகில் யாரும் அப்பாவி மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவிக்க முடியாது என்ற பாடத்தையும் சேர்த்தே போதிக்கின்றது. மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும். திமிர் பிடித்த அரசுகளை தூக்கியெறிட்டும்.

தமிழகத்தில் புத்த பிக்கு தாக்குதல்.


• தமிழகத்தில் புத்த பிக்கு தாக்குதல்.
• இது தவறு. இது தொடர வேண்டாம்.

புத்த பிக்குவை தாக்கியவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம். ஆனால் இதனால் எந்தவித நன்மையும் விளையப் போவதில்லை. மாறாக இனவாதிகளுக்கே சாதகமாக அமையும். எனவே இது போன்ற சம்பவங்களை தயவு செய்து தவிர்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர் போராட்டம் தொடரட்டும்.
அது மக்கள் போராட்டமாக மலரட்டும்.

மாணவர்களே போராட்ட வடிவத்தை மாற்றுங்கள்.


• மாணவர்களே போராட்ட வடிவத்தை மாற்றுங்கள்.
• மக்களைதிரட்டிஅரசுமையங்களைமுற்றுகையிடுங்கள்

லாயலாக் கல்லூரி மாணவர்களால் ஆரம்பித்த போராட்டம் இன்று ஆறாவது நாளாக தமிழகமெங்கும் பரவியுள்ளது. மாற்று திறனாளி மாணவர்கள், இளம் வயது மாணவர்கள, வேற்று இன மாணவர்கள் என அனைத்து மாணவர்களும் களம் கண்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக சிறைவாசிகள் ,பெண்கள் , டிரைவர்கள, நடிகர் சிம்பு, ராஜேந்தர் என பல தரப்பட்ட மக்களும் ஆதரவளிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பத்தில் பொலிசாரை ஏவி நசுக்க முயன்ற அரசு அது பலனற்று போக தற்போது கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது. ஆனாலும் மாணவர் போராட்டம் தொடருகின்றது.

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் மயக்கமுற்று மருத்துமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஆனால் மத்திய அரசோ வாய் திறக்காமல் அசட்டையாக இருக்கிறது. இதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் 12 வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் மணிப்பூர் இரோம் சார்மிளாவுக்கே இரங்காத அரசு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இரங்குமா?

உண்ணாவிரதம், தீக்குளிப்பு போன்ற போராட்டங்களுக்கு இந்த அரசு ஒருபோதும் இரங்காது. அது அரக்க குணம் படைத்தவை.

அரக்க குணம் படைத்த அரசை அடிபணிய வைக்க வேண்டுமானால் மாணவர்கள் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும். இஸ்ரவேல் ராணவத்திற்கு எதிராக பாலஸ்தீன சிறுவன் எறியும் கல்லுக்கு இருக்கும் வீரியத்தை மாணவர்கள் உணரவேண்டும்.

மாணவர்களே!
ஆயிரம் ஆயிரமாக அணிதிரளுங்கள். மக்களையும் ஒன்று சேருங்கள். முற்றுகையிடுங்கள். வெற்றி உங்கள் கையில் கிடைக்கும்.

மக்கள் போராட்டமாக மாறிவரும் மாணவர் போராட்டங்கள்.


• மக்கள் போராட்டமாக மாறிவரும் மாணவர் போராட்டங்கள்.

பாரதியார் பல்கலைக்கழக மாற்று திறனாளி மாணவர் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

மாணவர்களுக்கு மேலும் மேலும் உந்து சக்தியாக விளங்கும் அவர் உணர்வுகளை பாராட்டி வாழ்த்துகிறோம். மாணவர் போராட்டம் நியாயமானது என்பது மட்டுமல்ல அது மாபெரும் சக்தி கொண்டது என்பதை காட்டி வருகிறது.

மாணவர்களுக்கு ஆதரவாக புழல் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம். இது மாணவர் பின்னால் அனைத்து மக்களும் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

எந்த மிரட்டலுக்கும் அடிபணியாது ஓங்கி ஒலிக்கட்டும் மாணவர் முழக்கங்கள்.

மேலும் மேலும் “தீ” யாக பரவட்டும் மாணவர் போராட்டங்கள். மாபெரும் மக்கள் சக்தி என்பதை ஆட்சியாளர்களுக்கு காட்டட்டும்.
1

மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும்


• மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறட்டும்.
• அது போலி அரசியல்வாதிகளை தூக்கி வீசட்டும்.

ஒருபுறம் போலி அரசியல்வாதிகளால் மாணவர் போராட்டம் காட்டிக்கொடுக்கப்படுகிறது. இன்னொருபுறம் அரசு பொலிசாரை ஏவி அவர்களை நசுக்க முனைகிறது . “புலி என்று கூறி சிறையில் அடைப்போம”. “கல்லூரியை விட்டு நீக்குவோம்” என்றெல்லாம் அரசாலும் அதன் ஏவல் நாய்களான பொலிசாராலும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

எட்டு மாணவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டம் இன்று தமிழகமெங்கும் தீயாக பரவியுள்ளது. அது மக்கள் போராட்டமாக மாற வேண்டும். எனவே மக்களே மௌனமாக இருக்காதீர்கள். மாணவர்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவித்து மக்கள் போராட்டமாக மாற்றுங்கள்.

மத்திய அரசை மிரட்டி தமிழர் நலன் பேண வேண்டிய தி.மு.க சிறு கடைகாரர்களை மிரட்டி பந்த் நடத்துகிறது. மத்தியில் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து கொண்டு மாநிலத்தில் டெசோ என்று நாடகம் காட்டுகிறது.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று கூறி ஆட்சியைப் பிடித்த அம்மையார் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூட விடாமல் பொலிசாரை ஏவி நசுக்கிறார்.

எனவே மாணவர் போராட்டம் இந்த போலி அரசியல்வாதிகளை தூக்கி வீசட்டும்.
போராடும் மாணவர்களுக்கு எமது புரட்சி வாழ்த்துகள்.

தமிழகம் எங்கும் “தீ” யாக பரவும் மாணவர் போராட்டங்கள்.


தமிழகம் எங்கும் “தீ” யாக பரவும் மாணவர் போராட்டங்கள்.

அஞ்சிய ஆட்சியாளர்கள் போராட்டங்களை நசுக்க முனைகின்றனர்.

எட்டு மாணவர்களை கைது செய்து போராட்டத்தை நசுக்க நினைத்த அரசு இன்று அது தமிழகமெங்கும் பரவுவது கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

அடையார் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் பெண் மாணவர். அதுவும் தெலுங்கு இனத்தை சேர்ந்தவர். இதுதூன் மாணவர் போராட்டத்தின் மகிமை. அது சாதி, மதம், இனம் எல்லாம் கடந்து அனைவரையும் ஓரணியில் திரட்டும் சக்தி கொண்டது. எனவேதான் மாணவ சக்திக்கு ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

இந்தியா இரவில் சுதந்திரம் வாங்கியதால் போலும் இங்கு தூக்கு தண்டனையும் சரி மாணவர் கைதும் சரி நள்ளிரவில்தான் நடத்துகின்றனர். மாணவர்களிடத்தில் வெடி குண்டோ அல்லது துப்பாக்கியோ இல்லை. அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் அவர்களை 3 நாட்கள் கூட அனுமதிக்கவில்லை. நள்ளிரவில் கைது செய்து பயங்கர குற்றவாளிகளைப் போல் நடத்துகின்றனர்.

அகிம்சை வழியில் போராடுவதை அடக்கினால் நாளை மாணவர்கள் ஆயுதம் தூக்க நேரிடும்!

பொலிசாரின் தோளில் இருக்கும் துப்பாக்கி மாணவர் தோளுக்கு மாற அதிக நேரம் எடுக்காது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

Saturday, March 9, 2013

மாணவர் போராட்டம் மேலும் மேலும் வளரட்டும். போலி அரசியல்வாதிகளை தூக்கி யெறியட்டும்.


மாணவர் போராட்டம் மேலும் மேலும் வளரட்டும்.
போலி அரசியல்வாதிகளை தூக்கி யெறியட்டும்.

பல வருடங்களின் பின் மாணவர்கள் போராட ஆரம்பித்துள்ளனர். உண்ணாவிரதம் , தீக்குளிப்பு போன்றன எவ்வித பயனும் தராது என்பது உண்மையாயினும் மாணவர்கள் போராட ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாகும். எனவே அதனை வரவேற்று ஆதரிப்பது ஒவ்வொருவரது கடமையாகும்.

முத்துக்குமார், கடலூர் மணி வரிசையில் இவ் மாணவர்களது தியாகங்களையும் போலி அரசியல்வாதிகள் தங்கள் பதவி நலன்களுக்கு பயன்படுத்த அனுமதிக்காமல் மாணவர்களே இனி வரும் காலங்களில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாக வேண்டும்.

தமிழீழம் கிடைத்தால் அது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு உந்துதலாக அமைந்து விடும் என்பதால் மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என அவர்களின் கொள்கை வகுப்பாளர்கள் கூறுகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு அதரவு தெரிவிக்காவிட்டாலும் தமிழகம் வெடிக்கும் என்பதை அவர்களுக்கு புரியவைப்போம்.

மாணவர் போராட்டம் வெடித்து பரவட்டும்.
மத்திய அரசு சுக்கு நூறாக நொருங்கட்டும்.

Thursday, March 7, 2013

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்,பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின்


பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்,பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின்

ஒரு முதலாளித்துவ குடியரசில் எவ்வளவு ஜனநாயகம் உள்ள நாடாக இருந்த போதிலும் தனிச் சொத்துரிமை இருக்கின்ற நாடான போதிலும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் அதிகமான முன்னேற்றம் அடைந்த நாட்டில் கூட பெண்களுக்கு ஆண்களைப் போல் முழு அளவுக்கு சமமான உரிமைகள் இல்லை.

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களும் கம்பீரமான வார்த்தைகளும் மிதமிஞ்சிய வாக்குறுதிகளும் ஆர்பாட்டங்களுமாக ஒலிக்கும் கோஷங்களும் உள்ள ஜனநாயகமாகும். ஆனால் பெண்களின் உண்மை நிலையை அதாவது சமத்துவமும் சுதந்திரமும் இல்லாது இருப்பதை மூடி மறைக்கிறது.

ஆனால் ´சோலிஸ்ட் ஜனநாயகம்´ என்பது புரட்டான பகட்டான போலியான வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறது...

ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது.

ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது.

"ஒடுக்கப்பட்ட பெண்ணினத்துக்கு சுதந்திரமும், சமத்துவமும்...."

"தொழிலாளிகளுக்கும், உழைக்கும் விவசாயிகளுக்கும் சுதந்திரமும், சமத்துவமும்..."

"ஒடுக்குபவர்களுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, ஏழை விவசாயிகளைச் சுரண்டும் பணக்கார விவசாய உடைமையாளர்களுக்கு எதிராகப் போராட்டம்..."

இதுவே நமது போர் முழக்கம்! இதுவே நமது பாட்டாளி வர்க்க உண்மை!!.

மணி! கொழுத்த வேண்டியது உன்னையல்ல. கொழுத்தப்பட வேண்டியது எதிரிகளே.


மணி!
கொழுத்த வேண்டியது உன்னையல்ல.
கொழுத்தப்பட வேண்டியது எதிரிகளே.

முத்துக்குமார் வரிசையில் தற்போது கடலூர் மணி அவர்கள் தன்னைத்தானே தீயிட்டு மரணமடைந்துள்ளார். அவர் தியாகம் மதிப்பு மிக்கது. ஆனால் பயனற்றது. எத்தனை பேர் தீக் குளித்தாலும் எதிரி இரங்கமாட்டான். மாறாக ஒரு எதிரியைக் கொழுத்திப் பாருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் தானாக வரும்.

ஒரு ஆயுதப் பொராட்டத்தை தொடங்க வக்கற்ற
தொண்டர்களுக்கு ஆயுதம் வழங்க திராணியற்ற
தொண்டனின் மரணத்தில் பதவி தேடும்
போலித் தலைவர்களை முதலில் கொழுத்துவோம்.

தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்


இலங்கையில் தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது அவரின் கருத்து மட்டுமல்ல சோனியா காந்தி, மன்மோகன் சிங் எல்லோருடைய கருத்தும் இதுதான்.

வாஜ்பாய் பிரதமாராக இருந்தபோதும் இதையே தெரிவித்தார். இன்று தமிழீழம் என குரல் கொடுக்கும் கலைஞர் அவர்களும் முதலமைச்சராக இருந்தபோது இலங்கை பிரிக்காமல் தீர்வு காணப்பட வேண்டும் என்றார். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற ஜெயா அம்மையார் ஆட்சி பீடம் ஏறிய பின்பு தற்போது ஈழம் குறித்து பேசுவதில்லை.

இதிலிருந்து தெரிவது என்னவெனில் இந்திய ஆளும் வர்க்கம் ஒருபோதும் தமிழீழம் பிரிவதை ஏற்றுக்கொள்ளாது. ஒருவேளை இலங்கை அரசு சம்மதித்தாலும் இந்திய அரசு சம்மதிக்காது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இது நன்கு தெரிந்தும் தமிழக தலைவர்கள் இந்திய அரசை எதிரி என்று கூறுவதில்லை. மாறாக அறிந்தும் அறியாமலும் இந்திய அரசின் நலன்களுக்கு உதவி வருகின்றனர். தங்களின் பதவி நலன்களுக்காக தமிழ் மக்களை பலி கொடுக்கின்றனர்.

இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக போராடுவோம்.
போலிதலைவர்களைஅம்பலப்படுத்திதூக்கியெறிவோம்.

Saturday, March 2, 2013

மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு தகுந்த ஊதியம் கிடைக்குமா?


மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு தகுந்த ஊதியம் கிடைக்குமா?

இனியாவது அந்த அப்பாவி மக்களுக்கு விடிவு பிறக்குமா?

மலையக தொழிலாளர்களின் சம்பள மறு நிர்ணயத்துக்கான ஒப்பந்தம் இந்த வருடத்தில் மார்ச் மாதத்தில் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் அது குறித்த ஒப்பந்தம் எதுவும் இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

கடந்த தடவையும் இது குறித்த ஒப்பந்தம் காலம் கடத்தியே மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை உயருகிறது. விலைவாசி உயருகிறது. ஆனால் மலையக தொழிலாளர்களுக்கு உரிய கூலி மட்டும் அதே விகிதத்தில் ஒருபோதும் உயர்வதில்லை.

தான் வளர்க்கும் பிராணிகளுக்கு கூட உரிய நேரத்தில் உணவு வைக்க நினைக்கும் இந்த சமூகம் தனக்காக உழைக்கும் இந்த மலையக தொழிலாளர்கள் குறித்து சிறிதும் நினைப்பதில்லை. அவர்களது கோரிக்கைகளுக்கு இரங்குவதும் இல்லை.

குளிரிலும் அட்டை கடியிலும் பல மணி நேரம் உழைக்கும் இந்த தொழிலாளர்களுக்கு உண்ண உணவு கிடைக்கிறதா? இருக்க வசதியான வீடு இருக்கிறதா? அவர்கள் குழந்தைகளுக்கு கல்விவாய்ப்பு இருக்கிறதா? போதிய மருத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளதா என யாருமே அக்கறைப்படுவதில்லை.

மலையக தொழிலாளர்கள் தமிழர்கள் என்பதால் சிங்கள இனவெறி அரசுகள் அவர்களை கவனிப்பதில்லை. அவர்கள் இந்திய தமிழர்கள் என்று வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர் அக்கறை காட்டுவதில்லை. இந்தியாவோ அவர்களை திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலருக்கு இப்படி ஒரு லட்சக்கணக்கான மக்கள் இருப்புது கூட தெரியாது.

மலையக மக்களின் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்பவர்கள் தமது அமைச்சு பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் பேரம் பேசுவதற்கு பயன்படுத்துகின்றனரேயொழிய அந்த மக்களின் விடிவுக்கு பாடுபடுவதில்லை.

இந்த நிலை மாற வேண்டும். இனியாவது அந்த தொழிலாளர்களுக்காக அனைத்து மக்களும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் விடிவு ஏற்பட வேண்டும்.

மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள் மூவர் மீது தாக்குதல்


“ஹிஜாப், அபாயா அணியக் கூடாது”!- மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள் மூவர் மீது தாக்குதல்

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது!- பொது பலசேனா

இலங்கையில் முதன் முதலில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடத்தப்பட்டபோது வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழர்கள் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

பின்னர் மலையக தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நசுக்கப்பட்டபோது வடக்கு கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறி கட்டவிழ்த்து விட்டபோது மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் குரல் கொடுக்கவில்லை.

சிறுபான்மை மக்களை தனித்தனியாக பிரித்து பேரினவாதம் ஒடுக்குமுறை மேற்கொள்வதை உணர்ந்து இனியாவது பொது எதிரிக்காக அனைத்து மக்களும் ஒன்றுபடல் வேண்டும். இதுவே வெற்றிக்கான ஒரே வழியாகும்.

சிறுபான்மை மக்களின் ஜனநாயகத்தை மறுக்கின்ற பெருபான்மையினம் ஒருபோதும் ஜனநாயகத்தை அனுபவிக்க முடியாது என்பதை சிங்கள மக்களுக்கு உணர்த்திடல் வேண்டும்.