Monday, March 31, 2014

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும்.- வைகோ

• நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும்.- வைகோ

ஜ.நாவில் உள்ள தீர்மானம் குறித்தோ, அல்லது
இலங்கையில் தொடரும் அடக்கு முறைகள் குறித்தோ
தேர்தல் நேரத்தில் கூட மோடியை பேச வைக்க முடியாத வைகோ,
எந்த நம்பிக்கையில் மோடி பிரதமரானால் விடிவு கிடைக்கும் என்று கூறுகிறார்?

கடந்து 3 நாட்களாக 22 அகதிகள் சிறப்புமுகாமில் “வாழவிடு அல்லது சாகவிடு” என்று சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு விடிவு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அப்பாவி அகதிகளுக்கு விடிவு கிடைக்குமா?

மோடி பிரதமரானால் சிறப்பு முகாம் மூடப்படுமா?
அதில் அடைத்துவைக்கப்ட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?

• புரட்சிப் புயல் வைகோ அவர்களே!
உங்கள் பிரதமர் மோடி இதற்கு பதில் தருவாரா?
சிறப்புமுகாம் மூட பி.ஜே.பி சம்மதிக்குமா?
தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவிக்க தயாரா?
168Unlike ·  · Promote · 

• பாலுமகேந்திராவுக்கு வீர வணக்கம் செலுத்தியவர்கள் பாலச்சந்திரனுக்கு அஞ்சலிகூட செலுத்தாதது ஏன்?

• பாலுமகேந்திராவுக்கு வீர வணக்கம் செலுத்தியவர்கள்
பாலச்சந்திரனுக்கு அஞ்சலிகூட செலுத்தாதது ஏன்?

அண்மையில் இரண்டு மாபெரும் கலைஞர்கள் மறைந்தார்கள்.
அவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
அதுவும் தமிழர்களாகப் பிறந்தவர்கள்.
ஒருவர் பாலு மகேந்திரா.
இன்னொருவர் கே.எஸ் பாலச்சந்திரன்.

இருவரும் மாபெரும் கலைஞர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இருவர் மறைவும் கலைத் துறையில் மிகப் பெரும் இழப்பு.

ஆனால் பாலுமகேந்திராவுக்கு வீர வணக்கம் செலுத்தியவர்கள்
கே.எஸ. பாலச்சந்திரனுக்கு அஞ்சலிகூட செலுத்தாதது ஏன்?

கே.எஸ். பாலச்சந்திரன் என்ற கலைஞன்
தன் மனைவிக்கு துரோகம் செய்ததாக பெருமையுடன் கூறவில்லை.
அவரால் எந்த நடிகையும் தூக்கு போட்டு தற்கொலை செய்யவில்லை.
அவர் மறைந்தபோது மனைவி என்று இன்னொருவர் உரிமை கோரவில்லை.
அவர் உடலை பார்க்க அனுமதியுங்கள் என்று இன்னொரு மனைவி கெஞ்சவில்லை.
இருந்தும் அவர் ஏன் கௌரவிக்கப்படவில்லை?
அவருக்கு ஏன் அஞ்சலிகூட செலுத்தப்படவில்லை?

ஒருவேளை அவர் இறந்தவுடன்
தன்னுடன் சயிக்கிளில் வந்து குண்டெறிந்தவர் என்று
கூறுவதற்கு காசி ஆனந்தன் போல் நண்பன் ஒருவனை
அவர் கொண்டிருக்காததுதான் அவர் விட்ட தவறோ?
அதுதான் அவருக்கு அஞ்சலிகூட செலுத்தவில்லையோ?

இப்படிக்கு
கரவெட்டியில் பிறந்த ஒரு
அப்பாவி தமிழன்.
11Unlike ·  · Promote · 

• பகத்சிங் குண்டு வீசினால் தியாகம். தமிழரசன் வீசினால் பயங்கரவாதமா?

• பகத்சிங் குண்டு வீசினால் தியாகம்.
தமிழரசன் வீசினால் பயங்கரவாதமா?

“பகத் சிங்கும் அவரது நண்பர்களும் குண்டு வீசியது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலான பயங்கரவாத நடவடிக்கை அல்ல. சுதந்திர வேட்கையின் குரல் மக்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும். பகத் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கள் உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சுதந்திரம் அடைந்தோம்” என்று குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள் குறிப்பிட்டார். (ஆதாரம்- 24.03.1994 தினமணி)

இலங்கையில் இந்திய ராணுவம் நிகழ்திய கொடுமைகளைக் கண்டித்து கலைஞர் கருணாநிதி தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்தார். அப்போது தமிழ்நாடு விடுதலைப் படையினர் தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துமுகமாக கொடைக்கானல் டிவி டவர் , கிண்டி நேரு சிலை என்பனவற்றுக்கு குண்டு வைத்தனர். இங்கு அவர்கள் நோக்கம் யாரையும் கொல்வதோ அல்லது சேதப்படுத்துவதோ அல்ல என்பது தெளிவாக தெரிந்தும் இந்திய அரசு அதை பயங்கரவாத நடவடிக்கை என்றது.

“பாலஸ்தீன விடுதலை அமைப்பை அங்கீகரித்த இந்திய அரசு தமிழீழ விடுதலையையும் விடுதலை அமைப்புகளையும் அங்கீகரிக்க வேண்டும்” எனக் கோரி குடமுருட்டி பாலத்தில் தோழர் தமிழரசன் குண்டு வைத்தார். அப்போது யாரும் இறக்க வில்லை. எந்த சேதமும் நிகழவில்லை. ஆனால் இந்திய அரசு தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்று அறிவித்தது.

இதே குடியரசு தலைவர் சர்மா காலத்தில் தான் கொடைக்கானல் வெடி குண்டு சம்பவம் தொடர்பாக பல தமிழ் உணர்வாளர்கள் மீது வழக்கு போடப்பட்டது. அவர்களுக்கு கொடிய ஆயுள் சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டன.
இதே இந்திய அரசுதான் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்களையும் அடித்துக் கொலை செய்தது.

• வெள்ளைக்கார அரசுக்கு எதிராக குண்டெறிந்தால் அது சுதந்திர வேட்கை. ஆனால் கொள்ளைக்கார காங்கிரஸ் அரசுக்கு எதிராக எறிந்தால் அது பயங்கரவாதமா?

• பகத்சிங் குண்டெறிந்தால் தியாகம். அதையே
தமிழரசன் செய்தால் பயங்கரவாதம்.
இந்திய அரசே ஏன் இந்த இரட்டை வேடம்?

• பாலஸ்தீன இயக்கம் குண்டு வைத்தால் அது விடுதலைப் போராட்டம்.அவர்களுக்கு இந்திய அரசு செங்கம்பள வரவேற்பு. ஆனால் ஈழப் போராளிகள் குண்டு வைத்தால் அது பயங்கரவாதம். அவர்களை பிடித்து சிறப்பு முகாமில் அடைப்பு ஏன்?

• பகத் சிங்கை போற்றி புகழும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (CPM) இலங்கையில் போராளிகளை இகழ்வது ஏன்? இலங்கை இனவெறி அரசை ஆதரிப்பது ஏன்?

தோழர் பகத்சிங் இன் தியாகத்தை தமக்கு பயன்படுத்த நினைக்கும் அராஜகவாதிகளை இனம் காண்போம்.

தோழர் பகத்சிங் அவர்களுக்கு வீர வணக்கம்.
தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கம்.
தியாகிகளை நினைவில் கொள்வோம்!

• சுப. இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

• சுப. இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு துணை போன சோனியா காந்தி இன்னும் தண்டிக்கப்படவில்லை.

முஸ்லிம்களை கொலை செய்த முதல்வர் மோடி இன்னும் தண்டிக்கப்படவில்லை.

சங்கரராமனைக் கொலை செய்த காஞ்சி ஜெயந்திரர் கூட தண்டிக்கப்படவில்லை.

2ஜி யில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்த கனிமொழி இன்னும் தண்டிக்கப்படவில்லை.

ஊழல் செய்த ஜெயா அம்மையார் வழக்கு விசாரணை கூட நடக்குதில்லை.

ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்கும் உணர்வாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பொய் வழக்கு போடுவதன் மூலமோ அல்லது
கொடிய சிறையில் அடைத்து வைப்பதன் மூலமோ
போராளிகளின் உணர்வுகளை அடக்க முடியாது.

தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவரின் போராட்டத்தை அடக்க அரசு கனவு கண்டது. ஆனால் இப்போது பல தமிழரசன்கள் உருவாகி வருவதைக் கண்டு அரசு திகைக்கின்றது.

அரசின் கொடிய அடக்கு முறைக்கு எதிராக ஒன்றாக அணி திரள்வோம்.

அடைக்கப்பட்டவர்கள் விடுதலை பெற உரத்து குரல் கொடுப்போம்.
76Unlike ·  · Promote · 

விடுதலை கோரி அப்பாவி அகதிகளின் 7வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

• விடுதலை கோரி அப்பாவி அகதிகளின் 7வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!

இந்த அப்பாவி அகதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருப்பது மகிந்த ராஜபக்சவின் சிறையில் அல்ல.

இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளே தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இலை வென்றால் ஈழம் மலரும் என்கிறார் ஜெயா அம்மையார்.

மோடி வென்றால் ஈழத் தமிழருக்கு விடிவு கிடைக்கும் என்கிறார் வைகோ.

ஜ.நா மூலம் ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்துவேன் என்கிறார் கலைஞர்.

ஆனால் யாருமே தங்கள் மண்ணில் அடைத்து வைத்திருக்கும் இந்த அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய மறுக்கிறார்களே?

இந்த கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா?

பரீட்சைச் கட்டணம் கட்டுவதற்காக திருடிய சிறுவர் இருவர்.

• பரீட்சைச் கட்டணம் கட்டுவதற்காக திருடிய சிறுவர் இருவர்.
கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இது யார் குற்றம்?

போரில் தாய் தந்தையரை இழந்த சிறுவர் படிக்க ஆசைப்பட்டது குற்றமா?

பரீட்சை பணம் கட்டவில்லை என்று அவர்களை தண்டித்த ஆசிரியர்குற்றமா?

பரீட்சைப் பணம் கட்டுவதற்காக திருடியது சிறுவர் குற்றமா? அல்லது

இது எல்லாவற்றுக்கும் காரணமான அரசின் குற்றமா?

இந்த கொடுமைகளுக்கு எதிராகப் போராடாமல் இருக்கும் இந்த சமூகத்தின் குற்றமா?

என்னவிதமான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

• இந்திய ராணுவ போர்க்குற்றங்களும் விசாரிக்கப்படும்- ஜனாதிபதி மகிந்த தெரிவிப்பு

• இந்திய ராணுவ போர்க்குற்றங்களும் விசாரிக்கப்படும்- ஜனாதிபதி மகிந்த தெரிவிப்பு

• ஜ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா வெளிநடப்பு - செய்தி

அமெரிக்கா கொண்டு வந்த ஜ.நா தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்திய அரசு கூறிவந்தது. அதனால் இந்திய ராணுவத்தின் போர்க் குற்றங்களும் விசாரிக்கப்படும் என மகிந்த ராஜபக்ச மிரட்டினார். உடனே இந்திய அரசு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளது.

தன்மீது தவறு இல்லை எனில் இந்திய அரசு ஏன் இலங்கை அரசின் மிரட்டலுக்கு அஞ்சவேண்டும்? இலங்கை அரசுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என இறுதிவரை கூறிவிட்டு திடீரென்று ஏன் வாக்களிக்காமல் வெளியேறியது?

1987களில் இந்தியராணுவம் புரிந்த போர்க்குற்றம் மட்டுமல்ல முள்ளிவாயக்கால் அழிவிற்கும் இந்தியா துணை போய் உள்ளது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது அல்லவா!

தமிழ்மக்களை மீண்டும் ஒரு முறை இந்திய அரசு ஏமாற்றியுள்ளது. இனியும் இந்திய அரசு தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படும் என நம்பவேண்டுமா?

மதவாதத்தை காங்கிரஸ் எதிர்த்தால் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கப்படும் என கலைஞர் இன்று கூறியுள்ளார்.
தமிழினத்திற்கு காங்கரஸ் அரசு துரோகம் செய்வது குறித்து கலைஞருக்கு எந்த வருத்தமும் அளிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டியது காங்கிரஸ் மட்டுமல்ல அதற்கு துணை போகும் கலைஞரின் தி.மு.கவும்தான்.

Thursday, March 20, 2014

லண்டன் கோயில் உண்டியல் பணம் அய்யா நெடுமாறனுக்கு தரப்பட்டதா?

லண்டன் கோயில் உண்டியல் பணம் அய்யா நெடுமாறனுக்கு தரப்பட்டதா?

லண்டனில் உள்ள ரூட்டிங் அம்மன் கோயில் உண்டியல் பணத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 500 பவுண்ட்ஸ் ( சுமார் 50ஆயிரம் இந்திய ரூபா) அய்யா நெடுமாறன் அவர்களுக்கு தரப்பட்டதாக “தேசம்நெட்” என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோயில் உண்டியல் பணம் மக்களுடையது. இந்த மக்கள் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் அய்யா நெடுமாறன் அவர்கள் பெயரும் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது குறித்து அய்யா நெடுமாறன் அவர்கள் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசியல்வாதிகள் பலர் புலிகளிடம் பணம் பெற்றுவருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டி வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதியும் அய்யா நெடுமாறன் அவர்கள் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதாக குற்றம்சாட்டினார்.

ஆனால் தற்போது கோயில் உண்டியல் பணத்தை மாதம் தோறும் அய்யா நெடுமாறனுக்கு அனுப்பிவந்த சதீஸ் அய்யா என்பவரே பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருக்கின்றார். எனவே இது குறித்து அய்யா நெடுமாறன் அவர்கள் மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும்.

அய்யா நெடுமாறன் அவர்கள் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். அதுமட்டுமல்ல அவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர். அவர் விரும்பியிருந்தால் அமைச்சராகி கோடிக்ணக்கில் பணம் சம்பாதித்திருக்க முடியும். எனவே அவர் பணத்திற்காக ஈழத் தமிழர்களை ஆதரித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. அதுவும் கோயில் உண்டியல் பணத்தை அவர் பெற்றிருப்பார் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறது. எனவே இது குறித்து அவரின் நல்ல பதிலை எதிர்பார்த்து இருக்கின்றோம்.

“தேசம்நெட்டில்” வெளியான கட்டுரையை படிக்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் பார்க்கலாம்.

http://thesamnet.co.uk/?p=51674

தமிழகத்தில் தொடரும் சிறப்பு முகாம் கொடுமைகள்!

• தமிழகத்தில் தொடரும் சிறப்பு முகாம் கொடுமைகள்!

• தமிழக முதல்வர் அப்பாவி அகதிகளை விடுதலை செய்வாரா?

எந்தவித வழக்கும் இன்றி எவ்வித விசாரணையும் இன்றி எவ்வளவு காலம் தடுத்து வைப்பு என்பதும் தெரியாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நீதிமன்றங்கள் விடுதலை செய்த பின்பும் அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பது சட்ட விரோதமாகும். இந்த சட்ட விரோத அடைப்பினால் அகதிகள் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். குடும்பங்கள் பிரியும் நிலைக்கே செல்கின்றன.

ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் கட்சிகள்; இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்கும் குரல் கொடுக்க வேண்டும்.

ஒரு அகதி தனது நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அவரை அனுமதிக்க வேண்டும் என்று ஜ.நா விதிகள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்தும்கூட இதனை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தும் கூட தமிழக அரசு அவர்களை திரும்பிச் செல்ல அனுமதி மறுத்து அடைத்து வைத்திருப்பது சட்ட விரோதமாகும். மனிதாபிமானம் அற்றது.

ஈழத் தமிழ் அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் ஜெயா அம்மையாரை , அவ் அகதிகளை விடுதலை செய்ய மறுக்கும் ஜெயா அம்மையாரை, பல அகதிகளின் குடும்பங்களின் துன்பங்களுக்கு காரணமான ஜெயா அம்மையாரை சிலர் ஈழத்தாய் என்று அழைக்கின்றனர். அவர் பிரதமரானால் ஈழம் மலரும் என்றும் கூறுகின்றனர்.

சிறப்பு மகாமை மூட மறுக்கும் ஜெயா அம்மையார்,
அகதிகளை விடுதலை செய்ய மறுக்கும் ஜெயா அம்மையார்,
பிரதமரானால் எப்படி ஈழம் மலரும் நம்புவது?

• மார்ச் -8 பெண்கள் தினத்தை முன்னிட்டு !

• மார்ச் -8 பெண்கள் தினத்தை முன்னிட்டு !

"பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும் பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது"- தோழர் லெனின்

இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தவர்களில் ராஜினி யும் ஒருவர். இதனாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் இந்திய ராணுவத்திற்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்து யாழ் பல்கலைக்கழகத்தை இயங்கவைத்த மருத்துவபீட பேராசிரியர்.

இவரை கோழைத் தனமாக சுட்டுக் கொன்றது மட்டுமல்ல இன்றும்கூட இவர் மது குடிக்கும் படத்தை பிரசுரித்து“ இவர் கொல்லப்பட்டதால் அங்கு நடந்து கொண்டிருந்த சமூக சீர்கேடு நிறுத்தப்பட்டது” என்று எழுதுகிறார்கள்.

பெண்கள் மது அருந்துவது சமூக சீர்கேடா?
மது அருந்துவதற்கு மரண தண்டனையா?

கீழ் வரும் இணைப்பில் அந்த கொடுமையான செய்தியைக் காணலாம்.

https://www.facebook.com/photo.php?fbid=451937804908094&set=a.173141539454390.27198.100002756352837&type=1&theater

• எந்தளவு ஆணாதிக்க திமிர் இது?
• எவ்வளவு கொடுமையான சமூகத்தில் வாழ்கிறோம்?
• எத்தனை நாளுக்கு இப்படி எழுத அனுமதிக்க போகிறோம்?

எம்மவர்கள் சிலர் லண்டனில் குத்தாட்டம் போடுகின்றனர்

• தமிழக மாணவர்கள் எமக்காக அங்கே போராடுகின்றனர்.

• ஆனால் எம்மவர்கள் சிலர் லண்டனில் குத்தாட்டம் போடுகின்றனர்.

தமிழக மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றனர். அமெரிக்க பொருட்களை பகிஸ்கரிமாறு கோரி KFC உணவகத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள்

ஜ.நா வில் சர்வதேச விசாரணை அமைக்கும்படி கோருகின்றனர்.

தமிழீழ வாக்கெடுப்பு நடத்த ஜ.நா வை வற்புறுத்துகின்றனர்.

ஆனால் அதேவேளை லண்டனில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் மதுக் கோப்பைகளை கைகளில் ஏந்தி ஆட்டம் பாட்டம் என குத்தாட்டம் போட்டு மகிழ்கின்றனர்.

• இவர்கள் கைகளில் மதுக் கிண்ணம் ஏந்துவதும்
ஆடிப் பாடி குத்தாட்டம் போடுவதும்
தமிழ் மக்களுக்காக என்று நம்புவோம்!!

• இவர்களுடைய நடன அசைவுகளும்
கைகளில் ஏந்தி உறிஞ்சும் மதுவும்
தாயக மக்களின் விடுதலைக்காக என நம்புவோம்!!

ஏனெனில் இவர்கள் லண்டனில் உள்ள தமிழ் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட நாடுகடந்த அரசின் பிரதிநிதிகள் அல்லவா!

இவர்கள் சந்தேகத்திற்கு மட்டுமல்ல விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் அல்லவா!

அடுத்த முறை இவ்வாறு குத்தாட்டம் போடும்போது தாயகத்தில் பேராடி, கை கால்களை இழந்து பாராமரிக்க ஆள் இன்றி, முகாம்களில் வாடும் முன்னாள் பெண் போராளிகளை நினைத்து ஆடட்டும்.

இதோ அந்த பெண் போராளிகள் மிக்க நம்பிக்கையுடன் புலத்தில் இருக்கும் இந்த கணவான்களுக்கு வைக்கும் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றோம்.

http://www.youtube.com/watch?v=xlnWjuw8cC0&feature=share

ராஜபக்சவை மன்மோகன் சிங் சந்தித்தது கவலை தருகிறது- கலைஞர் கருணாநிதி

• ராஜபக்சவை மன்மோகன் சிங் சந்தித்தது கவலை தருகிறது- கலைஞர் கருணாநிதி

• ராஜபக்சவை மன்மோகன் சந்தித்தது அதிர்ச்சி தருகிறது- தளபதி ஸ்டாலின்

ராஜபக்சவை கனிமொழியும் பாலுவும் சந்தித்து பரிசு கொடுத்து மகிழ்ந்தபோது
ஏன் கலைஞருக்கு கவலை அளிக்கவில்லை?
ஏன் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி தரவில்லை?

அப்போது வராத கவலையும் அதிர்ச்சியும் இப்போது ஏன் வருகிறது?

தேர்தல் திகதி அறிவித்த படியாலா?

தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை கவலைகளையும், அதிர்ச்சிகளையும் மக்கள் காணப் போகிறார்கள்?

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள்

• மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள்

மார்ச் 14, மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட நாள் என்று அவருடைய நண்பர் எங்கெல்ஸ் அவர்கள் உலகிற்கு அறிவித்தார்.

கால் மாக்ஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாக்சியமானது மாபெரும் அக்டோபர் புரட்சியினூடாக லெனிசமாக வளர்ச்சி கண்டது. பின்னர் மாபெரும் சீனப் புரட்சியினூடாக மாவோ சிந்தனையாக விரிபு பெற்றது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மாக்சியம் வளம் பெற்றது.

இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியி;ன் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.

இன்றைய சூழலில் மாக்சியம் சோசலிசத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன. மாக்சியம் படிக்கப்பட வேண்டியதாயும் சோசலிசத்திற்கான பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியனவாகவும் உள்ளன.

• மகனை விடுதலை செய்யுமாறு கோரிய தாய் சிறையில் அடைப்பு! • அண்ணன் எங்கே என்று கேட்ட தங்கை முகாமில் அடைப்பு!

• மகனை விடுதலை செய்யுமாறு கோரிய தாய் சிறையில் அடைப்பு!

• அண்ணன் எங்கே என்று கேட்ட தங்கை முகாமில் அடைப்பு!

• இது தான் ஜனாதிபதியின் “மகிந்த சிந்தனையா”?

• இது தான் மகிந்தா அமுல் படுத்தும் “வடக்கின் வசந்தமா”?

• தொடரும் இந்த அடக்குமுறைக்கு முடிவே இல்லையா?

முதலில் அஞ்சலி செலுத்தியதாக பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் அடைத்தார்கள்.

பின்பு பெண்களுக்காக நியாயம் கேட்ட மருத்துவரை மெண்டல் என்று சிறையில் அடைத்தார்கள்.

தற்போது தனது மகனை விடுதலை செய்யுமாறு கோரிய தாயையும் சகோதரியையும் சிறையில் அடைக்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கவே யுத்தம் செய்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறினார். ஆனால் யுத்தம் முடிந்த பின்பும் மக்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் தனது மகனை விடுதலை செய்யுமாறு கோருவதற்கு தாய்க்கு உரிமை இல்லையா?

தனது அண்ணன் எங்கே என்று கேட்பதற்கு ஒரு சிறுமிக்கு உரிமை இல்லையா?

ஆனந்தி தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மகாணசபை உறுப்பினர். அவர் தனது கணவன் எங்கே என்று கேட்டதற்கு அவரை நன்னடத்தை முகாமுக்கு அனுப்ப வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயா மிரட்டுகிறார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண அப்பாவி மக்களின் கதி என்ன? இது தான் மகிந்த சிந்தனையா? இதுதான் மகிந்தவின் வடக்கின் வசந்தமா?

• அடக்குமுறை மூலம் சர்வாதிகார ஆட்சி செய்யும் அரசுக்கு எதிராக தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.

• அமெரிக்காவோ இங்கிலாந்தோ அல்லது இந்தியாவோ தமிழ் மக்களுக்கு ஒருபோதும் உரிமை பெற்று தரப்போவதில்லை. அவை பெற்று தரும் என நம்புவது முட்டாள் தனமாகும்.

• எனவே தமிழ் மக்கள் தமக்கான உரிமையை தாம் போராடியே பெற வேண்டும்.

• அமெரிக்காவை நம்பலாமா?

• அமெரிக்காவை நம்பலாமா?

இந்திய அரசை மீறி அமெரிக்க அரசு
இலங்கை தமிழர்களுக்கு உதவுமா?

இலங்கை தமிழர்களின் சிறிய சந்தைக்காக 
இந்திய பெரும் சந்தையை அமெரிக்கா இழக்குமா?

அன்று இந்திய அரசை நம்பச் சொன்னவர்கள்
இன்று அமெரிக்க அரசை நம்பச் சொல்கிறார்கள்.

புலிகளை பயங்கரவாத இயக்கம் என தடை செய்த அமெரிக்கா
புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவி செய்த அமெரிக்கா
இன்று தமிழ் மக்களுக்கு உதவும் என்று எப்படி நம்புவது?

போஸ்னியாவில் நடந்தது இனப் படுகொலை என்ற அமெரிக்கா
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்கிறது.
இறந்த தமிழர்கள் வெள்ளையர் அல்ல என்பதாலா?

தெற்கு சூடான் ஜ தனிநாடாக பிரித்த அமெரிக்கா
இலங்கையில் தனிநாடு பிரிய மறுக்கின்றது.
ஈழத்தில் எண்ணெய்வளம் இல்லை என்பதாலா?

அமெரிக்காவோ இங்கிலாந்தோ அல்லது இந்திய அரசோ
எமக்கு ஒருபோதும் விடுதலை பெற்று தரப்போவதில்லை.
இந்த உண்மையை அனைவரும் உணரும்வரை
எமக்கு விடிவு வரப்போவதில்லை!

அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றாக குரல் கொடுப்போம்!

நமது புரட்சிக்கான பயணம் எப்போதும் வெற்றியை நோக்கியே செல்ல வேண்டுமென நினைக்கிறோம். ஆனாலும் அடக்குமுறையால் ஒடுக்கப்படுமானால் வெற்றி கிடைக்காவிட்டாலும், மக்களின் உரிமைக்கான வெற்றிகளை நோக்கி செல்ல முடியாவிட்டாலும், எங்கள் முயற்சியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

'வெற்றி அல்லது வீரமரணம்' என்பது புரட்சி பாதையில் செல்லும் தோழர்கள் சிந்தனையில் அழுத்தமான கொள்கையால் பதிவு செய்த உயிர்ச் சொல். அவை உயிரோட்டத்துடன் எங்கள் சிந்தனைகளில் வாழ்கிறது!

- தோழர் சே குவாரா

முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களை கொன்று புதைத்து தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கிவிடலாம் என இலங்கை இந்திய அரசுகள் கனவு கண்டன. ஆனால் அன்று இலங்கையில் மட்டும் நடைபெற்ற போராட்டம் இன்று தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் பரவியுள்ளது. மக்கள் போராட்டமாக மலர்கிறது.

போராளிகள் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் விதைக்கப்படுபவர்கள். ஆயிரம் ஆயிரமாக முளைத்தெழுவார்கள். அவர்களை கொன்று புதைப்பதன் மூலமோ அல்லது கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலமோ அவர்களின் போராட்டத்தை அடக்கிவிட முடியாது. பொங்கும் கடல் அலைபோல் மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்து எழுவார்கள்.

அன்று தோழர் தமிழரசனை கொன்று தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாக இந்திய அரசு கனவு கண்டது. ஆனால் இன்று பல இளைஞர்கள் அந்த தமிழரசன் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது அரசுக்கும் அதன் ஏவல் நாய்களான காவல் துறைக்கும் நடுக்கத்தை கொடுத்துள்ளது.

தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த “தமிழ்தேச மக்கள் கட்சியை”ச் சேர்ந்த தோழர்கள் தமிழரசன்கலை , திருச்செல்வம், கவியரசு , சிவகெங்கை காளை ஆகியோரை கைது செய்த தமிழ்நாடு காவல்துறை அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது.

• போராடும் மாணவர்களை சிறையில் அடைக்கிறது தமிழ்நாடு அரசு.

• அகதிகளை சிறப்புமுகாம்களில் அடைக்கிறது தமிழ்நாடு அரசு.

• தமிழ் இன உணர்வாளர்களை சிறையில் அடைக்கிறது தமிழ்நாடு அரசு.

சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதாலோ, பொய்வழக்கு போட்டு பழிவாங்குவதாலோ தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்கிவிட முடியாது என்பதை வரலாறு அவர்களுக்கு நிரூபிக்கும். இது உறுதி.

இலங்கை, இந்திய அரசுகளின் அடக்கு முறைகளைக் கண்டிப்போம்!

அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றாக குரல் கொடுப்போம்!

• மாலாவுக்கு ஒரு நீதி விபூசிகாவுக்கு இன்னொரு நீதி இதுதான் உலக நீதியா?

• மாலாவுக்கு ஒரு நீதி
விபூசிகாவுக்கு இன்னொரு நீதி
இதுதான் உலக நீதியா?

சிறுமி மாலாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக குரல் கொடுத்த உலக நாடுகள் இலங்கையில் சிறுமி விபூசிகாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக குரல் கொடுக்க மறுக்கின்றன. இது என்ன நியாயம்?

குழந்தை விபூசிகா இலங்கையில் பிறந்தது குற்றமா?
அல்லது அவர் தமிழ் மொழியில் பேசுவது குற்றமா?
அவர் தன் சகோதரன் எங்கே என்று கேட்டது குற்றமா?
மாலாவுக்கு குரல் கொடுத்த வல்லரசுகள்,
ஏன் விபூசிகாவுக்கு குரல் கொடுக்க மறுக்கின்றன?

• விபூசிகாவின் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்க சென்ற மனித உரிமை ஆர்வலர்ககள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களின் பெற்றேரும் கூட விசாரணக்கு அழைத்து மிரட்டுகிறது இலங்கை அரசு.

• சட்டவிரோதமாக தன்னைக் கண்கானிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கேட்டுள்ளார். ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமக்களின் கதி என்ன?

• இராணுவத்தைக் கொண்டு சர்வாதிகார ஆட்சியை இலங்கை அரசு மேற்கொள்கிறது. ஆனால் அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கி ஆசீர்வதிக்கிறது. இந்திய அரசுவோ இலங்கை அரசைக் காப்பதையே தன் முழுநேர பணியாக செயற்படுகிறது.

இந்திய அரசோ அல்லது அமெரிக்க அரசு உட்பட எந்த வல்லரசுகளும் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப் போவதில்லை. எனவே அவர்களை நம்புவது தற்கொலைக்கு ஒப்பாகும்.

உலக மக்களுக்கு சொல்வதன் மூலமும் சர்வதேச மக்களின் ஆதரவைப் பெறுவதன் மூலமே நாம் நியாயம் பெற முடியும். எனவே சிங்கள மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் எமது பிரச்சனைகளை கூறுவோம்.

மக்களுக்கு கூறுவோம்.
மக்கள் மட்டுமே நியாயம் வழங்கும் சக்தி படைத்தவர்கள்.
மக்களை அணி திரட்டுவோம்.
அநியாயத்திற்கு எதிராக ஒருமித்து போராடுவோம்!!

Saturday, March 1, 2014

உடன் பிறப்புகளே!

உடன் பிறப்புகளே!

• தமிழ்நாட்டில் எங்கே வேண்டுமானாலும் இந்த போஸ்டரை ஒட்டுங்கள். ஆனால் தயவு செய்து அகதிகளை அடைத்து வைத்திருக்கும் சிறப்பு முகாம்களுக்கு அருகில் மட்டும் ஒட்டாதீர்கள்.

• இலங்கை தமிழனுக்கு கலைஞர் நான்கு நாட்களில் விடுதலை பெற்றுதந்தது உண்மை என்றால் ஸ்டாலினுக்கு புலிகளால் ஆபத்து என்று பாதுகாப்பு கேட்பதேன்?

• உங்களை நம்பிய ஈழத் தமிழனுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள்.

உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு என்பது 7 பேரின் விடுதலையை தாமதப்படுத்தலாம். ஆனால் அவர்களின் விடுதலையை இனி ஒருபோதும் தடுக்க முடியாது

 உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு என்பது 7 பேரின் விடுதலையை தாமதப்படுத்தலாம்.
ஆனால் அவர்களின் விடுதலையை இனி ஒருபோதும் தடுக்க முடியாது.

• கடந்த மாதம் நளினியை பரோல் லீவில் விடுவதற்கு மறுத்த ஜெயா அம்மையார் இப்போது 7 பேரையும் விடுதலை செய்துள்ளார்.

• தான் ஆட்சியில் இருந்தபோது நளினியை விடுதலை செய்ய மறுத்த கலைஞர் இன்று அவர்களை விடுவித்தால் தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்கிறார்.

• மீனவர் கொலை செய்யப்படுவது தொடர்பாக ஜெயா அம்மையார் இதுவரை அனுப்பிய எந்த கடிதத்திற்கும் பதில் தராத மத்திய அரசு தற்போது ஜெயா அம்மையார் அனுப்பிய கடிதம் கிடைக்கு முன்னரே பதில் தாக்கல் செய்கிறது.

• தமிழக மீனவர் கொலைக்கு இதுவரை வாய் திறக்காத பிரதமர் மன்மோகன் சிங் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு வாய் திறந்து கண்டனம் தெரிவிக்கிறார்.

• ஒரு முன்னாள் பிரதமர் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்று ராகுல்காந்தி கவலைப்படுகிறார். ஆனால் 50ஆயிரம் ஈழத்தமிழர்களின் கொலைக்கு என்ன நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறுவாரா?

• 7 பேரையும் வரலாறு விடுதலை செய்கிறது. இந்த நீதியை மக்களே வழங்குகிறார்கள். மக்களைவிட உயர்ந்தவர்கள் என்று யாரும் இல்லை.

இளங்கோவன் தான் தீவிரவாதியாக மாறுவாராமே?

இளங்கோவன் தான் தீவிரவாதியாக மாறுவாராமே?

• மக்களே! பிய்ந்த செருப்பும,துடைப்பம் கட்டையும் ரெடியா?

பேரறிவாளன்,சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக்கூடாது. அவர்களை தூக்கில் இட வேண்டும். இல்லையேல் தான் தீவிரவாதியாக மாறுவேன் என காங்கிரஸ் பிரமுகர் இளங்கோவன் மிரட்டியுள்ளார்.

7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது. மீறி விடுதலை செய்தால் தான் தீக்குளிப்பேன் என காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல ராஜீவ்காந்தியுடன் சேர்த்து கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு என்ன நீதி எனவும் இதே காங்கிரஸ் தலைவர்கள் கேட்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் முதலில் பின்வரும் கேள்விகளுக்கு பதில் தரட்டும். அதன் பின் தாராளமாக தீவிரவாதியாக மாறட்டும்.

(1)தானுவை கூட்ட திடலுக்கு அழைத்து சென்றது நளினியின் குற்றம் எனில் சிவராசனை விமான நிலையத்தில் இருந்து தனது காரில் அழைத்து சென்றது தலைவர் மூப்பனார் என்று கூறுகிறார்களே! அப்படியாயின் மூப்பனார் செய்தது குற்றம் இல்லையா?

(2) எதற்கு என்று தெரியாமலே பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை என்றால் தெரிந்துகொண்டே கூட்டத்தில் நிருபராக கலந்து கொள்ள அடையாள அட்டை கொடுத்த “இந்து” ஆசிரியர் ராம் க்கு என்ன தண்டனை? அவர் வழக்கில் குற்றவாளியாக கூட சேர்க்கப்படவில்லையே?

(3)புலிகள் வள்ளத்தில் வந்து இறங்குவதற்கு முழு உதவி புரிந்த வேதாரண்யம் காங்கிரஸ் எம்எல்.ஏ ராஜேந்திரன் ஏன் விசாரிக்கப்படவில்லை? இவரைப் பற்றி கூறியதற்காகவே கோடியாக்கரை சண்முகம் காவலில் வைத்து கொல்லப்பட்டதாக கூறுகின்றரே. இது உண்மையா?

(4)மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர் காங்கிரஸ் ஆட்சியில்தானே விடுதலை செய்யப்பட்டவர். அப்படியென்றால் ராஜீல் காந்தி கொலையில் ஆயுள்தண்டனை பெற்றவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது? ராஜீவ்காந்தி மகாத்மா காந்தியைவிட உயர்;ந்தவரா? சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று காங்கிரஸ்சார் தானே இவ்வளவு காலமும் கூறி வந்தார்கள்?

(5) உச்ச நீதிமன்றமே உயர்ந்தது. அதன் தீர்ப்புக்கு எதிராக யாரும் வாய் திறக்கக்கூடாது என்று இதுவரை காலமும் கூறி வந்த காங்கிரஸ் இன்று அதே உச்சிமன்ற தீர்ப்பை எதிர்த்து விமர்சிக்கலாமா?

முப்பனார், ராஜேந்திரன், இந்து ராம் எல்லாம் பணக்காரர்கள். செல்வாக்கு மிக்கவர்கள். ஆனால் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் போன்றோர் ஏழைகள். எந்த செல்வாக்கும் இல்லாதவர்கள். அதனால்தானே அவர்கள் இந்த வழக்கில் இணைக்கப்பட்டார்கள்?

இதையும் தாண்டி , மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தொடர்ந்தும் உங்கள் அராஜகங்களை திணிக்க முயல்வீர்களாயின் இதுவரை உங்கள் உருவப் பொம்மைகளை கொளுத்திய மக்கள் நாளை உங்களையே கொளுத்த தயங்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மீண்டும் ஆரம்பமாகும் மாணவர் போராட்டம்

மீண்டும் ஆரம்பமாகும் மாணவர் போராட்டம்

• பற்றி எரியும் காங்கிரஸ், பா.ஜ.க கொடிகள்

7 தமிழர்களின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளுக்கு எதிராக மீண்டும் மாணவர் போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. மாணவர்கள் அக் கட்சிகளின் கொடிகளை எரித்து தமது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
மாணவர் போராட்டம் வெற்றி பெற வாழ்த்தி வரவேற்க வேண்டும்.

இன்று சென்னையில் ஆரம்பித்துள்ள மாணவர் போராட்டம் தமிழகம் எங்கும் பரவட்டும்.

சென்னையில் ஏற்பட்டுள்ள பொறி பெரும் காட்டு தீயாக தமிழகம் முழுக்க எரியட்டும்.

மக்களை ஒன்று திரட்ட வேண்டும். மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். மக்களின் போராட்டம் மூலமே 7பேரையும் விடுதலை செய்ய முடியும்.

• தீ பரவட்டும்! எரியட்டும் காங்கிரஸ் பா.ஜ.க கொடிகள்!

பிரித்தானிய தமிழர் இலங்கை சிறையில் கொல்லப்பட்டாரா?

பிரித்தானிய தமிழர் இலங்கை சிறையில் கொல்லப்பட்டாரா?

• பிரித்தானிய அரசு அக்கறையின்றி இருப்பதற்கு நிறவேற்றுமை காரணமா?

• இலங்கையில் தொடரும் சிறைக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது?

இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் இறந்துள்ளார். அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறைத்துறை நிர்வாகம் கூறுகிறது. ஆனால் அவர் கொல்லப்பட்டிருப்தாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது பிரஜை ஒருவர் இலங்கை சிறையில் மரணம் அடைந்திருப்பது தொடர்பாக பிரித்தானிய அரசு எவ்வித அக்கறை இன்றியும் அலட்சியமாக இருந்து வருகிறது. இதற்கு நிறவேற்றுமைதான் காரணமோ என தோன்றுகிறது.

கடந்த வருடம் ஒரு வெள்ளை இன பிரித்தானியர் இலங்கையில் கொல்லப்பட்டபோது உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை சென்று அக் கொலையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகப்பட்ட ஜனாதிபதி மகிந்தவின் நண்பரை கைது செய்ய வைத்தது பிரித்தானிய அரசு. ஆனால் இன்று ஒரு பிரித்தானிய பிரஜை இலங்கை சிறையில் கொல்லப்பட்ட பின்பும் அது குறித்து பிரித்தானிய அரசு அக்கறை இன்றி இருப்பது ஏன்? அவர் வெள்ளை இனத்தவர் அல்லர் என்பதாலா? அல்லது அவர் தமிழர் என்பதாலா?

பிரித்தானியாவில் நிறவேற்றுமை சட்டப்படி குற்றம். இருப்பினும் அனைத்து இடங்களிலும் நிறவேற்றுமை பார்க்கப்படுகிறது என்பதே உண்மை. மருத்துவமனை, வேலைத் தலங்கள், பொலிஸ் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் வெள்ளையர்களை ஒருமாதிரியும் வெள்ளையர் அல்லாதோர்களை இன்னொரு மாதிரியும் நடத்தப்படுகின்றனர்.

இன்றும்கூட ஒரு கறுப்பு இன பெண் பொலிஸ் தான் நிற ரீதியாக நடத்தப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த வருடம் ஒரு பொலிஸ் உயர் அதிகாரியே தனக்கு நிறவேற்றுமை காரணமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வருடம் லண்டனில் நடந்த கலவரத்திற்கும்கூட நிறவேற்றுமையே காரணமாக இருந்திருக்கிறது. எனவேதான் பிரித்தானிய தமிழரின் கொலை விடயத்திலும் இதுவரை பிரித்தானிய அரசு அக்கறை இன்றி இருப்பதற்கு நிறவேற்றுமைதான் உண்மையான காரணமோ என்ற சந்தேகம் எழுகிறது.