இவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள்-ஆனால்
இவர்களுக்கு ஏன் ஒரே உணர்வு இல்லை?
இவர்களுக்கு ஏன் ஒரே உணர்வு இல்லை?
நோர்வே ஒஸ்லோவிலிருந்து இரு ஈழத் தமிழர்கள் ஜ.நா நோக்கி முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கேட்டு சயிக்கிளில் செல்கிறார்கள். 10 நாட்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கிறார்கள். தமது வசதியான வாழ்வு மற்றும் உழைப்பு எல்லாம் துறந்து தமது உறவுகளின் படுகொலைக்கு நீதி வழங்குமாறு கோரி இந்த கஸ்டமான பிரச்சார பணியை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதேவேளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அய்யா அவர்கள் இலங்கை அரசிடமிருந்து ஒரு கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் பெற்றுள்ளார். அவர் மட்டுமல்ல மாகாண சுகாதார அமைச்சரும் 50 லட்சம் ரூபாவுக்கு வாகனம் பெற்றுள்ளார்.
குடாநாட்டில் என்றுமில்லாதவாறு தண்ணீப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் எடுக்க சென்ற பள்ளி மாணவி ராணுவத்தால் கற்பழிக்கப்படும் அவல நிலை காணப்படுகிறது. ஆனால் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அது குறித்து கொஞ்சம் கூட கவலை இல்லை. அவர்களது அக்கறை எல்லாம் இலங்கை அரசமிருந்து சொகுசு வாகனம் பெறுவதிலேயே இருக்கிறது!
தமிழ்நாட்டில் இருக்கும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் கூட ஜ.நா வக்கு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்துகின்றனர். மாணவர்கள் தமிழ்நாட்டில் வந்து விசாரணை நடத்த வேண்டும் என ஜ.நா வுக்கு கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இது குறித்து எல்லாம் அக்கறை இன்றி தமிழரசுக்கட்சிக்கு மாநாடு நடத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
சயிக்கிள் பவனி செல்லும் இளைஞர்களும் தமிழ்நாட்டில் போராடும் மாணவர்களுக்கும் இருக்கும் இன உணர்வு எமது மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கோ அல்லது தமிழரசுக்கட்சி தலைவராகி இருக்கும் மாவை சேனாதிராசாவுக்கோ அல்லது அடிக்கடி டில்லிக்கு காவடி தூக்கும் சம்பந்தர் அய்யாவுக்கோ ஏன் இல்லை?
இவர்கள் எல்லாம் தமிழர்கள்தானே?