Friday, October 31, 2014

ஜெயா அம்மையார் சிறையின் கொடுமையை உணர்ந்து கொள்வாரா?

ஜெயா அம்மையார் சிறையின் கொடுமையை உணர்ந்து கொள்வாரா?
இதுவரை பலரையும் சிறையில் அடைக்க காரணமாய் இருந்தவர்
பல அப்பாவிகளின் ஜாமீன் விடுதலையை மறுத்தவர்
இப்பொது அவரே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இப்போது அவரே ஜாமீன் விடுதலையை கோருகிறார்
இதோ படத்தில் இருக்கும் தென்தமிழன்
20 வருடம் சிறையில் கழித்த பின்பும் கூட
அவரை விடுதலை செய்ய ஜெயா அரசு மறுத்தது.
மனநோயால் பாதிக்கப்பட்ட அவரை சிகிச்சைக்காக
நீதிமன்றம் விடுதலை செய்த போதும்
ஜெயா அரசு கடுமையாக எதிர்த்தது.
இன்று அதே ஜெயா அம்மையார்
20 நாட்களே சிறையில் இருந்துள்ளார்
அதற்குள் பல சுகயீனங்கள் கூறி
ஜாமீனில் விடுதலை கோருகிறார்.
தர்மபுரியில் ஆறு அப்பாவி இளைஞர்கள்
மரீனா கடற்கரையில் பயிற்சி எடுத்ததாக
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது ஜெயா அரசு.
பத்திரிகைகள் மனித உரிமை அமைப்புகள் இது பொய் வழக்கு என்றன.
இருப்பினும் வழக்கை வாபஸ் பெற மறுத்தது ஜெயா அரசு.
இறுதியில் உயரநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
மதுரையில் சில இளைஞர்களை கைது செய்து
ஆறுமாதம் கழித்து அவர்கள் மீது தேசியபாதுகாப்புசட்டம்
போட்டது ஜெயா அரசு.
இவ்வாறு அப்பாவிகளை கைது செய்து
அவர்களமீது கறுப்பு சட்டங்களை போட்ட ஜெயா அம்மையார்
இன்று தன்மீது பொய்வழக்கு போடப்பட்டதாக கூறுகிறார்.
தனக்கு ஜாமீன் விடுதலை அளிக்கும்படி கோருகிறார்.
இந்த சிறைவாழ்க்கை அவர் தம் தவறுகளை உணர வைக்குமா?
இனியாவது சிறையின் கொடுமை அவரை திருந்த வைக்குமா?

• "வெட்டப்படுவது ஆடுகளைத்தான். சிங்கங்களை அல்ல".- டாக்டர் அம்பேத்கார்

• "வெட்டப்படுவது ஆடுகளைத்தான். சிங்கங்களை அல்ல".- டாக்டர் அம்பேத்கார்
சட்டம், சிறை, தண்டனை எல்லாம் ஏழை மக்களுக்கேயொழிய
அரசியல்வாதிகளுக்கோ, பணம் படைத்தவர்களுக்கோ அல்ல.
அகதியாய் வந்தவர்களை எந்த குற்றச்சாட்டும் இன்றி
பல வருடங்களாக சிறப்புமுகாமில் அடைத்துள்ளது ஜெயா அரசு.
சிறப்புமுகாம் உள்ள அகதிகளை விடுதலை செய்யுமாறு
புரட்சிபுயல் வைகோ கோரினார்
அய்யா நெடுமாறன் கோரினார்
மருத்துவர் ராமதாஸ் கோரினார்
திருமாவளவன் கோரினார்.
“நாம் தமிழா”; சீமான் கோரினார்.
ஆனால் ஜெயா அம்மையார் இன்றுவரை
அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறார்.
மக்கள் பணத்தை சுருட்டிய குற்றத்திற்காக ஜெயா அம்மையார் அடைக்கப்ட்டிருக்கிறார்.
ஆனால் அகதிகள் எந்த குற்றமும் இன்றி அடைக்கப்பட்டிருக்கிறார்களே?
சிறையில் ஜெயா அம்மையாருக்கு அனைத்து வசதிகளும் உண்டு.
ஆனால் சிறப்புமுகாமில் அடிப்படை வசதிகள்கூட இல்லையே?
இனியாவது ஜெயா அம்மையார் உணர்வாரா?
சிறப்புமுகாமில் உள்ள அகதிகள் விடுதலை பெற வழி செய்வாரா?

கொஞ்சம் யோசியுங்கள் இஸ்லாமியர்களே!

கொஞ்சம் யோசியுங்கள் இஸ்லாமியர்களே!
• இரண்டு அரோபிய நாடுகள்
• 10 அரேபியரல்லாத இஸ்லாமிய நாடுகள்
• கணக்கில் அடங்காத எண்ணெய்வளம்
• அதனால் பெருகும் பணம் மற்றும் ஆயுதங்கள்
• வரலாற்று நியாயங்கள்
• எல்லாம் வல்ல அல்லா
இவை அனைத்தும் இருந்தும்
அளுத்கமவில் வீடுகள் எரிக்கப்பட்டதை தடுக்க முடியவில்லை!
அம்பாறையில் நிலம் பறி போவதை எதிர்க்க முடியவில்லை!
பள்ளிவாசல்களை அகற்றுவதை எதுவும் செய்ய முடியவில்லை!
“அல்லாவு அக்பர்”கோசம் போடுவதாலே
வெள்ளிகிழமைகளில் பிரார்த்திப்பதாலே
எதுவும் ஆகப்போவதில்லை.
கொஞ்சம் யோசியுங்கள் இஸ்லாமியர்களே!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே!
ஆங்கிலேயர்கள்,
• ரயில் பாதை அமைத்தார்கள்
• தார் வீதி அமைத்தார்கள்
• துறைமுகம், விமான நிலையம் அமைத்தார்கள்
• தேயிலை,ரப்பர் தோட்டம் அமைத்தார்கள்
• ஆங்கிலத்தில் கல்வி தந்தார்கள்
• கிருத்தவ மதம் பரப்பினார்கள்
இத்தனை அபிவிருத்திகளை ஆங்கிலேயர்கள் செய்தும்
இலங்கை மக்கள் ஏன் சுதந்திரத்தை விரும்பினார்கள்?
20 ஆயிரம் பேருக்கு காணி வழங்கியதாக கூறும் நீங்கள்
ராணுவம் அபகரித்த நிலங்களை மக்களுக்கு எப்போது வழங்குவீர்கள்?
பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்டிருப்பதாக கூறும் நீங்கள்
ராணுவ கற்பழிப்புகளில் இருந்து தமிழ் பெண்களை எப்போது பாதுகாப்பீர்கள்?
தமிழ் மக்களுக்கு வசந்தத்தைக் கொடுப்பதாக கூறும் நீங்கள்
பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோருக்கு நிம்மதி கொடுப்பீர்களா?
மக்களுக்காக யாழ்தேவி ரயில் விட்டிருப்பதாக கூறும் நீங்கள்
குடாநாட்டு மக்களின் குடிதண்ணீர் எப்போது கொடுப்பீர்கள்?
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறீர்கள். ஆனால் காரைநகரில் கற்பழித்த கடற்படை வீரரை நீதிமன்றில் அஜர் செய்ய மறுப்பது ஏன்?
உங்கள் தம்பி கோத்தபாயா இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கிறார்.
ஆனால் தமிழ் மக்ககளுக்கு இரட்டைக் குடியுரிமையை மறுப்பது ஏன்?
தமிழீழம் தவிர அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்குவேன் என்றீர்கள் யுத்தம் முடிந்து 5 வருடமாகியும் எதனையும் வழங்காதது ஏன்?
அபிவிருத்தி என்ற பெயரில் தேர்தலுக்காக நீங்கள் வழங்கும்
அற்ப சலுகைகளுக்கு வாலாட்டுவதற்கு
தமிழ் மக்கள் ஒன்றும் நாய்க் குட்டிகள் அல்லர்.

வீரப்பன் கொலையும் ஜெயா அம்மையாரின் ஜாமீன் விடுதலையும்!

 வீரப்பன் கொலையும்
ஜெயா அம்மையாரின் ஜாமீன் விடுதலையும்!
வீரப்பன்,
சந்தன கட்டை கடத்தியபோது கொல்லப்படவில்லை.
யானை தந்தம் கடத்தியபோது கொல்லப்படவில்லை.
வன அதிகாரிகளை கொன்றபோதும் கொல்லப்படவில்லை
பொலிசாரைக் கொன்றபோதும் கொல்லப்படவில்லை- ஆனால்
தமிழ்நாடு விடுதலையை முன்வைத்தபோது அவர்
உடனடியாக கொல்லப்பட்டார்!
இதில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டியது
இந்திய அரசு!
ஊழல் செய்தால் கண்டு கொள்ளாது!
கொலை, கொள்ளை செய்தால் கூட அக்கறை கொள்ளாது!
ஆனால் தமிழர் விடுதலை பற்றி பேசினால்
ஒருபோதும் அவர்களை விட்டுவைக்காது!
தமிழ்நாடு விடுதலை குறித்து பேசியதாலே
நயவஞ்சகமாக வீரப்பன் கொல்லப்பட்டார்
தோழர் தமிழரசன் அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழ்நாடு விடுதலைக்கு ஆதரவளித்தமையினாலே
தோழர் நெப்போலியன் மலையகத்ல் கொல்லப்பட்டார்.
• கொள்ளைக்காரன் என்றழைக்கப்பட்ட வீரப்பன் வைத்த கோரிக்கைகள்!
(1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும்
(2) வாசாத்தியில் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்
(3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
(4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும்
(5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.
• புரட்சி தலைவி என்றழைக்கப்படும் ஜெயா அம்மையார் வைத்த கோரிக்கைகள!
(1)தனக்கு சுகர், மூட்டுவலி இருப்தால் சலுகை தர வேண்டும்
(2)சிறையிலும் தன்கூட சசிகலா இருக்க அனுமதிக்க வேண்டும்
(3)வயது மூப்பு காரணமாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்
இப்போது புரிகிறதா?
ஏன் ஜெயா அம்மையாருக்கு ஜாமீன் விடுதலை வழங்கப்பட்டது?
ஏன் வீரப்பன் கொலை செய்யப்பட்டார் என்று?

கண்ணன் வரமாட்டான் !

 கண்ணன் வரமாட்டான் !
“அநியாயங்கள், அக்கிரமங்கள் பெருகும்போது கண்ணன் அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவான்” - இந்து மதம்
• முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டபோது காப்பாற்ற கண்ணன் வரவில்லை.
• சிறையில் அடைபட்டு இருக்கும் இளைஞர்களை விடுவிக்க இதுவரை கண்ணன் வரவில்லை
• தமிழக சிறப்புமுகாமில் அடைபட்டிருக்கும் அகதிகளை விடுவிக்ககூட கண்ணன் வரவில்லை
• தமிழ்பெண்களை ராணுவம் பாலியல் வல்லுறவு செய்யும்போது காப்பாற்ற கண்ணன் வரவில்லை
• வறுமையின் கொடுமையில் இருந்து சிறுவர்களைக் காப்பாற்ற கண்ணன் இன்னும் வரவில்லை
தீபாவளி கொண்டாடுவோரே கொஞ்சம் சிந்தியுங்கள்!
இதுவரை வராத கண்ணன் இனியும் வரமாட்டான்
இதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
பகுத்தறிவோடு சிந்தித்து செயற்படுங்கள்.
மக்களே!
“கண்ணன் வருவான” என காத்து இருக்காதீர்கள்.
அநியாயங்களுக்கு எதிராக
அக்கிரமங்களுக்கு எதிராக
ஆயுதம் ஏந்துங்கள்.
வதம் செய்யுங்கள்.
நீங்கள்தான் “கண்ணன்”

செய்தி- மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க சுப்பிரமணியசுவாமி வேண்டுகோள் !

செய்தி- மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க சுப்பிரமணியசுவாமி வேண்டுகோள் !
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்தவருக்கு
பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தவருக்கு
இளைஞர்களை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருப்பவருக்கு
“பாரத ரத்தினா” விருது வழங்குவதாயின்
அதற்கு மகிந்த ராஜபக்ச மிகவும் பொருத்தமானவரே!
• தமிழக மீனவரைக் கொன்ற இலங்கை கடற்படை தளபதிக்கு வீர விருது
• தமிழ் இனத்தை அழிக்கும் மகிந்தவுக்கு செங்கம்பள வரவேற்பு
• இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும் என இந்திய அரசு அறிவிப்பு
இனியும் இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவும் என்பவர்களை
என்னவென்று அழைப்பது?

புதிய திசைகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்.

 புதிய திசைகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட
பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்.
இன்று ( 26.10.2014) மாலை 4 மணியளவில் லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் “புதியதிசைகள்” அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
"தமிழ் தலைமைகள் இன்று செய்ய வேண்டியது என்ன?" என்ற தலைப்பில் மனோகரன் தலைமையில் கூட்டமும் அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெற்றது. ஆக்கபூர்வமான உரையாடலாக அமைந்தது.
பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் தங்கள் பதில்களைத் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு தமது கருத்துகளை முன்வைத்தார். அவர் தனது உரையில் ஜ.நா வினூடாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வைப் பெறுவதற்கு தாம் முயல்வதாக குறிப்பிட்டார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய பொறுப்பாளர் போஸ் அவர்கள் தமது உரையில் த.தே.கூ விடம் சில தவறுகள் உண்டு என்பதை தான் ஒத்துக்கொள்வதாகவும் ஆனால் அது எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து யாராவது ஆரோக்கியமான கருத்துகளை முன்வைத்தால் அது தொடர்பாக ஆராய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தமிழர் தகவல் நடுவம் வரதகுமார் அவர்கள் தமது உரையில் தமிழ் தலைமைகள் ஒரு பிரிவினர் இந்தியா தனது நலன்களுக்காக தயாரித்த 13வது சரத்திலும் இன்னொரு பிரிவினர் அமெரிக்கா தனது நலனுக்காக கொண்டு வந்த ஜ.நா தீர்மானத்திலும் தொங்கிக் கொண்டிருப்பதாகவும் யாரும் தமக்கென ஒரு சொந்தமான திட்டத்தை கொண்டிருக்கவில்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
சமூக ஆர்வலர் காதர் அவர்கள் உரையாற்றுகையில் மகிந்தவின் கட்சி போல் சம்பந்தரின் கூட்டணியும், கக்கீமின் முஸ்லிம் காங்கிரசும் வாக்கு அரசியல் செய்கிறார்களேயொழிய யாரும் மக்களைப் பற்றி அக்கறைப்படவில்லை என்றார். மேலும் அவர் மலையக உழைக்கும் மக்கள் மற்றும் முஸ்லிம் விவசாயிகள், வறிய தமிழ் மக்கள் ஆகியோரை திரட்டி அவர்களின் கையில் தலைமையும் போராட்டமும் செல்லுமாயின் நிச்சயம் நல்ல மாற்றம் வரும் என்றார்.
சோசலிசக் கட்சியின் சேனன் உரையாற்றுகையில் நெருக்கடிக்கு உள்ளாகி வரும் உலக பொருளாதாரப் பார்வையுடன் இலங்கை பிரச்சனையை நாம் அணுக வேண்டும் என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு இடதுசாரி வேட்பாளர் வந்தால் அவரை ஆதரிக்க தமிழ்தேசிய கூட்மைப்பு முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம் மக்கள் சார்பாக சமூக செயற்பாட்டாளர் பௌசர் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் முஸ்லிம் மக்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதையும் தமது தீர்வை முஸ்லிம் மக்கள் தாமே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக புதிய சிசைகள் அமைப்பை சேர்ந்த மாசிலாபாலன் அவர்கள் உரையாற்றினார். அவர் தமது இந்த கூட்டத்தின் நோக்கத்தையும் தேவையையும் விளக்கி கூறினார். பல்வேறு அமைப்புகளும் கலந்துரையாடி ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்கு வரவேண்டும் என தாம் விரும்பவதாகக் குறிப்பிட்டார்.
பல்வேறு கருத்துகளைக் கொண்டிருப்போர் அமைதியாக ஆக்கபூர்வமாக உரையாட முடியும் என்பதை இந்த கூட்டம் எடுத்துக்காட்டியிருக்கிறது. இவ்வாறு தொடர்ச்சியாக பல உரையாடல்கள் இடம்பெற வேண்டும் என்பதை இது உணர்த்தியுள்ளது. அந்த வகையில் இந்த கூட்டத்தை ஒழுங்கு படுத்திய “புதிய திசைகள” அமைப்பின் பணி பாராட்டுக்குரியது.
அவதானிப்பு-
இந்த கூட்டத்தில் மிக முக்கிய அவதானிப்பாக நான் கருதுவது , உரையாற்றியவர்களும்சரி அல்லது கேள்விகள் கேட்ட பார்iவயளர்களும் சரி, ஒருவர்கூட “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் வந்து தமிழீழம் பெற்று தருவார்" என்று கூறவில்லை. இதிலிருந்து யாருமே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதையோ அல்லது அவர் வந்து தமிழீழம் பெற்று தருவார் என்பதையோ நம்பவில்லை என்பது புலனாகிறது. இந்த செய்தி தமிழகத்தில் இருக்கும் மக்களுக்கு முக்கியமான செய்தியாகும்.

காஸ்மீரில் இந்திய ராணுவ அட்டூழியங்களுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

• காஸ்மீரில் இந்திய ராணுவ அட்டூழியங்களுக்கு எதிராக
லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.10.2014) இந்திய ராணுவ அட்டூழியங்களுக்கு எதிராக லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
• கடந்த 20 வருடங்களில் 8000 காஸ்மீர் மக்களை காணவில்லை.
• 70000பேர் போலி மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
• 15000மனுக்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றுக்குகூட நீதி வழங்கப்படவில்லை.
இந்திய ராணுவம் காஸ்மீரில்
(1) யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்!
(2) யாரை வேண்டுமானாலும் கற்பழிக்கலாம்!
(3) மாணவர்களைக்கூட பயங்கரவாதிகள் என்று கைது செய்யலாம்!
(4) யாரையும் நீதி விசாரணை இன்றி பல வருடம் சிறையில் அடைக்கலாம்.
இந்த அவல நிலைக்கு எதிராகவே லண்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த அக்கிரமங்களை ஜ.நா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் எந்தளவு மோசமானது என்பதை நாம் ஈழத்தில் கண்டுள்ளோம்.
இந்திய ராணுவம் இன்று காஸ்மீரில் மட்டுமல்ல மணிப்பூர், நாகலாந்து, அசாம் போன்ற மாநிலங்களிலும் இதே கொடுமையையே செய்து வருகின்றனது.
“பச்சை வேட்டை” என்னும் பெயரில் மாவோசிஸ்டுகளை ஓடுக்குவதாக அப்பாவி மலைவாழ் மக்களை கொன்று குவிக்கிறது.
இந்திய ராணுவத்தின் இந்த கொடுமைகளுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
அதன் மூலமே விடுதலை பெற முடியும்.

மலையக தமிழர்களின் தொடரும் துயரம்!

• மலையக தமிழர்களின் தொடரும் துயரம்!
பதுளையில் ஏற்பட்ட மண் சரிவில் இதுவரை
• 10 தமிழர்கள் சடலஙடகளாக மீட்பு
• 300 பேர் வரையில் இறந்திருக்கலாம் என ஊகிப்பு
• 600பேர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் அந்த மக்களை இவ்வாறான துயர சம்பவங்கள் தொடருகின்றன. ஆனால் எந்த அரசும் அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகின்றன.
ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழ்மக்கள் மலையகத்தில் குடியமர்த்தப்பட்டனர். அன்று ஆங்கிலேயர் அமைத்து கொடுத்த லயன் வீடுகளிலேயே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எந்தவித அபிவிருத்தியும் இவர்களுக்கு இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.
மலையகத்தில் இருக்கும் இந்த பத்து லட்சம் தமிழர்கள் “தமிழீழ” தனி நாடு கோரவில்லை. இருப்பினும் இவர்கள் தமிழர்கள் என்பதால் இலங்கை அரசு தொடர்ந்து இவர்களை புறக்கணித்தும் கொடுமைப்படுத்தியும் வருகிறது.
அனைத்து மலையக தமிழ் மக்களுக்கும் தற்போது பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஒன்றுதான் இலங்கை அரசால் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரேயொரு சலுகையாகும். அதுகூட வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் போராட்டத்தினால் விளைந்த ஒரு நன்மையாகும்.
இலங்கையின் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் இந்த மலையக மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய கொடுமையாகும். மனித இனம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையிலேயே அவர்கள் வைக்கப்ட்டிருக்கின்றனர்.
மலையக தமிழ்மக்கள் தங்கள் உரிமைகளையும் அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொள்ள வடக்கு கிழக்கு தமிழ் தலைமைகள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் தமிழ் தலைமைகளும் குரல் கொடுக்க வேண்டும்.
மலையக மக்கள் தமிழர்கள் மட்டுமல்ல அவர்களும் மனிதர்களே!

Thursday, October 9, 2014

தன் மகன் எங்கே? எனக் கேட்ட தாயிடம் ஆடு வேண்டுமா? எனக் கேட்ட இலங்கை அரசு!

• தன் மகன் எங்கே? எனக் கேட்ட தாயிடம்
ஆடு வேண்டுமா? எனக் கேட்ட இலங்கை அரசு!
வடக்கில் வசந்தம் இதுதானா?
கிழக்கில் உதயம் இதுதானா?
மகிந்த சிந்தனை இதுதானா?
யுத்தம் முடிந்து 5 வருடமாகிறது. பிள்ளைகளை தேடும் தாய்மார்களுக்கு தகுந்த பதில் அளிக்காமல் காலம் கடத்துகிறது இலங்கை அரசு.
என்ன கொடுமையிது?
சீ! வெட்கம்!
“கண்ணகி மதுரையை எரித்தது போல் உங்களையும் தெய்வம் நிச்சயம் எரிக்கும்” என அந்த தாய் இயலாமையில் சாபம் இட்டார்.
தெய்வம் இருக்கிறதோ? இல்லையோ? அந்த
தெய்வம் எரிக்கிறதோ ?இல்லையோ? ஆனால்
ஏழைகளை கொடுமைப்படுத்தும் எந்த அரசும்
நிலைத்ததாக சரித்திரம் இல்லை.
ஈராக்கில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களைக் கொன்றார்கள் என்று
அமெரிக்கா, பிரான்ஸ் எல்லா நாடுகளும் குண்டுகள் போடுகின்றன.
ஆனால் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை
இலங்கை அரசு கொன்றபோது ஏன் இந்த நாடுகள் தடுக்கவில்லை?
ஈராக்கிற்கு ஒரு நியாயம்.
மகிந்தவிற்கு இன்னொரு நியாயம்.
இதுதான் அமெரிக்க நியாயமோ?
பல்லாயிரம் அப்பாவி மக்களை கொன்ற மகிந்தவிற்கு
இந்திய பிரதமர் செங்கம்பள வரவேற்பு அளிக்கிறார்.
ஜ.நா சபையோ பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கிறது.
ஆனால் நம்மவர்கள் இன்னமும்
இந்தியா வரும் , ஜ.நா வரும்
தமிழர்களைக் காப்பாற்றும் என
கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த கொடுமையை யாரிடம் சொல்வது?

• சீ! வெட்கம்?

• சீ! வெட்கம்?
ஜெயா அம்மையார்,
சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை
மொழிப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை
ஈழப் போராட்டத்தை ஆதரித்து சிறை செல்லவில்லை.
மக்களின் பணத்தை கொள்ளையடித்தமைக்காக
குற்றவாளியாக சிறை சென்றுள்ளார்.
18 வருடம் வாய்தா வாங்கி இழுத்தடித்தவர்
இறுதி நேரத்தில்கூட புலிகளால் ஆபத்து என்றவர்
தண்டனை வழங்கியவுடன்
தனக்கு சுகர் வருத்தம் என்றார்
கால் மூட்டு வலி என்றார்
நெஞ்சுவலி வேறு என்றார்
சிறை என்றவுடன் இந்த அரசியல்வாதிகள் எல்லோருக்கும்
எப்படி இத்தனை வருத்தம் திடீரென்று வந்துவிடுகிறது?
சிறையில் ஜெயா அம்மையாருக்கு
வெளி உணவு அனுமதி.
குளிருட்டி மற்றும் மின்விசிறி வசதி
மெத்தை கட்டில் வசதி
தொலைபேசி வசதி
தொலைக்காட்சி வசதி
தண்டனை உடை இல்லை
தண்டனை வேலை இல்லை
இது போதாது என்று சசியையும்
தன்னுடன் ஒன்றாக இருக்க அனுமதிக்கும்படி
அடம் பிடிக்கிறார்.
இவருக்காக வெளியில் சிலர்
தெய்வத்திற்கு தண்டனையா? என்கின்றனர்
சாகும்வரை உண்ணாவிரதம் என்கின்றனர்
என்ன கேவலம் இது?
சீ! வெட்கம்!

இதுதான் துக்ளக் "சோ" வின் பார்ப்பணீய நியாயம்!

• ஜெயா அம்மையாருக்கு ஒரு நியாயம்
பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் துக்ளக் "சோ" வின் பார்ப்பணீய நியாயம்!
ஜெயா அம்மையாருக்கு வழங்கப்பட்ட தண்டனையால் அவருக்கு இழப்பில்லையாம். மாறாக தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாம் என்று சோ அய்யர் கூறுகிறார்.
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தண்டனை தவறு என்று அவருடைய வாக்குமூலத்தை திருத்தி எழுதிய பொலிஸ் அதிகாரி மட்டுமல்ல முழு தமிழகமே கூறியது. அப்போது நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என்றும் கூறியவர் சோ அய்யர். ஆனால் அவர் இன்று ஜெயா அம்மையாருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
சங்கர ராமனை கொன்ற காஞ்சி சங்கராச்சாரியை நீதிமன்றம் விடுதலை செய்தபோது நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறிய சோ அய்யர் அவர்கள் இன்று ஜெயா அம்மையாருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுக்கிறார்.
ஜெயா அம்மையாரின் சாராய கம்பனி சொத்துக்களின் நிர்வாகியாக செயற்பட்டவர் இந்த அய்யர் சோ என்று எழுத்தாளர் ஞானி அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார். முறைப்படி இந்த சொத்து குவிப்பு வழக்கில் சோ அய்யர் அவர்களும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் சேர்க்கப்படாதது மட்டுமல்ல விசாரணைக்குகூட அவர் அழைக்கப்படவில்லை.
ஊழல் அரசியல்வாதிகள் எல்லாம் தண்டிக்கப்பட வேண்டும் என்று இதுவரை யோக்கியனாக எழுதிவந்த சோ அய்யர் அவர்கள் இன்று தனது பங்காளி ஜெயா அம்மையாருக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் அது தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும் என கூறுகிறார்.
இதுதான் பார்ப்பணீய பாசம் என்பதா அல்லது வர்க்க பாசம் என்பதா?

“சோ” அய்யர் பதில் தருவாரா?

“சோ” அய்யர் பதில் தருவாரா?
• 9 மதுபான கம்பனிகளில் சசிகலாவுக்கு பதில் “சோ” அய்யர் நிறுவனராகியது உண்மையா இல்லையா?
• ஜெயா அம்மையாரின் சாராய வியாபாரத்தில் “சோ” அய்யர் பினாமி என்பது உண்மையா இல்லையா?
• ஜெயா அம்மையாரின் சொத்துக் குவிப்பு வழக்கில் அவரது பினாமி “சோ” அய்யர் ஏன் சேர்க்கப்படவில்லை?
• வழக்கில் சேர்க்கப்படாவிட்டாலும் அவர் ஏன் விசாரணைக்குகூட அழைக்கப்படவில்லை?
• மேற்கண்ட குற்றச்சாட்டுகளை “ஆம் ஆத்மி” கட்சி சுமத்தியுள்ளது. இதுவரை இதற்கு சோ அய்யர் பதில் தராதது ஏன்?
• தனது துக்களக் இதழில் தானே கேள்வியும் எழுதி தானே பதிலும் அளித்துவரும் சோ அய்யர் இந்த கேள்விகளுக்காவது பதில் தருவாரா?
“ஜெயா அம்மையாரை சிறையில் அடைத்ததால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாகும்” என சோ அய்யர் கூறியதன் பின்னனி இதுதானா?
ஜெயா அம்மையாரை சிறையில் அடைத்தது சொ அய்யருக்கு நிச்சயம் இழப்புதான். அனால் சோ அய்யருக்கு இழப்பு என்றால் அது தமிழ்நாட்டிற்கு இழப்பு என்று அர்த்தமா?

• சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் ஜெயா அம்மையாருக்கு மட்டும் விதிவிலக்கு!

• சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால்
ஜெயா அம்மையாருக்கு மட்டும் விதிவிலக்கு!
பேரறிவாளனுக்கு கண் சிகிச்சை அளிக்க மறுப்பு- ஆனால்
ஜெயா அம்மையாருக்கு 4 தனியார் மருத்துவமனை தயார் நிலையில்
நளினி தனது கணவன் முருகனை சந்திக்க கூட தடை விதிப்பு- ஆனால்
ஜெயா அம்மையார் சசியை தன்னுடன் கூட இருக்க அனுமதி கோரி மனு
நளினி கைத் தொலைபேசி வைத்திருந்ததாக வழக்கு. ஆனால்
ஜெயா அம்மையாருக்கு விசேட தொலை பேசி இணைப்பு
சிறையில் கைதிகளுக்கு களி சோறு - ஆனால்
ஜெயா அம்மையாருக்கு அடையாறு அனந்தபவன் உணவு
சிறையில் சதாரண கைதிக்கு படுக்க கட்டாந்தரை
ஜெயா அம்மையாருக்கு படுக்க மெத்தை கட்டில்
வைக்கப்பட்டிருப்பது சிறையில் உள்ள எஸ்.பி பங்களாவில்
அதில் மின் விசிறி மற்றும் குளிருட்டி வசதி
எல்லா சனல்களும் கொண்ட தொலைக்காட்சி
மூன்று வேளையும் வெளியில் இருந்து உணவு
எந்நேரமும் தயார் நிலையில் மருத்துவ குழு
இது சிறையா அல்லது பெங்களுர் ஓட்டலா?
ஜெயா அம்மையார் அனுபவிப்பது தண்டனையா?
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த
ஜெயா அம்மையாருக்கு ஏன் இந்த சலுகை?
• நம்புவோம்!
இந்தியா ஜனநாயக நாடு என்றும்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும்.

லண்டனில் நடைபெற்ற ஜெயா அம்மையாருக்கான பிரார்த்தனையும் பொதுக்கூட்டமும்

 லண்டனில் நடைபெற்ற ஜெயா அம்மையாருக்கான
பிரார்த்தனையும் பொதுக்கூட்டமும்
இன்று (04.10.14) லண்டனில் ஈஸ்டகாம் நகரில் ஜெயா அம்மையாருக்காக பிரார்த்தனையும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என பிரசுரத்தில் போடப்பட்டிருந்தது. மக்கள் வராத காரணத்தால் 6.30 மணிக்கு ஆரம்பமாகி 8.15 மணிக்கு முடிவுற்றது.
2 லட்சம் மக்கள் வாழ்வதாக கூறப்படும் லண்டனில் 20பேர் கூட வரவில்லை. இதில் இருந்தே லண்டனில் ஜெயா அம்மையாருக்கு இருக்கும் ஆதரவை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
கூட்டம் நடத்தியவர்கள் எந்த அமைப்பின் சார்பாக நடத்தப்படுகிறது என்று குறிப்பிடவில்லை. கூட்டத்தில் பேசிய நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகூட தான் அமைப்பு ரீதியாக அல்லாமல் தனிப்பட்ட ரீதியிலே கலந்துகொள்வதாக குறிப்பிட்டார்.
அமைப்பு பெயர் இன்றி வெறும் தொலைபேசி இலக்கத்துடன் லண்டனில் நடைபெற்ற கூட்டம் இதுவாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். ஜெயா அம்மையாரை இதைவிட கேவலப்படுத்த முடியுமா என்று எனக்கு தெரியவில்லை?
எங்கு சுண்டல் கிடைத்தாலும் அங்கு சென்று மணி குலுக்கும் சைவ தொண்டன் முருகானந்தம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.( ஜெயாவுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்).
அவர் தனது தலைமையுரையில் ஜெயா அம்மையார் ஆட்சியில் அகதிகள் நன்கு பராமரிக்கப்படுவதாக குறிப்பிட்டார். பாவம். அவருக்கு சிறப்புமுகாம் என்று ஒன்று இருப்பதும் அதில் அகதிகள் பல வருடங்களாக அடைத்துவைத்து கொடுமைப்படுத்தப்படுவதும் தெரியவில்லை.
அகதிகளின் கல்விக்கு வழி கோலி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் ஜெயா அம்மையார் என்று முருகானந்தம் தனது உரையில் மேலும் கூறினார். அண்மையில் ஒரு அகதி மாணவி தனது மருத்துவகல்விக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுகூட இவருக்கு தெரியவில்லை. (பாவம் ஈழ அகதிகள்)
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஆறுமுகம் என்பவர் உரையாற்றினார். ஜெயா அம்மையார் தன்னலம் கருதாது ஈழத் தமிழர்களுக்கு உதவியதாக குறிப்பிட்டார். வழக்கின் இறுதி நேரத்தில்கூட புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியவர் ஜெயா அம்மையார். அதனை எப்படி இந்த தமிழீழ அரசு பிரதிநிதி மறந்தார் என்று புரியவில்லை?
இறுதியாக கோயில் அறங்காவலர் சிதரம்பரப்பிள்ளை என்பவர் உரையாற்றினார். அவர் தனது உரையில் ஜெயா அம்மையாரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கோரிக்கை மனு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டவரை விடுதலை செய்யும்படி பிரதமரிடம் கேட்பது முறையா? அவ்வாறு இன்று ஜெயாவை விடுதலை செய்தால் நாளை எல்லா ஊழல் அரசியல்வாதிகளும் விடுதலை செய்யும்படி கேட்பார்களே?
இப்படியான முட்டாள் தனமான கோரிக்கையை வைக்கும்படி கோரிய சிதம்பரப்பிள்ளை கோயில் அறங்காவலர் மட்டுமல்ல லண்டனில் பிரபல சட்ட வல்லுனர் என்றும் முருகானந்தம் குறிப்பிட்டார். ( இவரிடம் செல்லும் வழக்கை நினைத்தால் கோவிந்தா தான்!)
இந்தியாவில் மட்டுமல்ல லண்டனிலும் முட்டாள்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த கூட்டம் நிரூபித்துள்ளது.
ஆறுதல் செய்தி- ஜெயா அம்மையாரை விடுதலை செய்ய வழக்கு நிதி என்று திரட்டுவதற்கு நம்மவர்கள் திட்டம் எதுவும் போடவில்லை.

ஜெயா அம்மையாருக்காக லண்டனில் குரல் கொடுத்த ஞாயம்மாரே, உங்கள் மனட்சாட்சிக்கு சில கேள்விகள்!

ஜெயா அம்மையாருக்காக லண்டனில் குரல் கொடுத்த
ஞாயம்மாரே, உங்கள் மனட்சாட்சிக்கு சில கேள்விகள்!
• காரைநகரில் பள்ளி சிறுமிகளை கற்பழித்த வீரர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த கடற்படை மறுக்கிறதே. அதற்காக குரல் கொடுத்தீர்களா?
• கிளிநொச்சியில் கைது செய்த தாய் ஜெயக்குமாரி மீது நீதிமன்றம் வலியுறுத்தியும்கூட இலங்கை அரசு வழக்கு தாக்கல் செய்யாது அடைத்து வைத்திருக்கிறதே. அதற்காக குரல் கொடுத்தீர்களா?
• சப்பிரமுகா பல்கலைகழக தமிழ் மாணவனை கைது செய்து இரகசியமாக அடைத்து வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக சிங்கள மாணவர்கள்கூட போராடுகின்றனர். ஆனால் நீங்கள் ஏன் அதற்காக குரல் கொடுக்கவில்லை?
• இன்றும்கூட பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை தேடி அலைகிறார்களே. அந்த தாய்மார்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தீர்களா?
• இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டாலும்கூட இங்கிலாந்து அரசு அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்புவதற்கு எதிராகாவது குரல் கொடுத்தீர்களா?
இவை எதற்கும் குரல் கொடுக்காமல் மௌனமாக இருந்த நீங்கள் இன்று எதற்காக ஜெயா அம்மையாருக்காக குரல் கொடுக்கிறீர்கள்?
ஜெயா அம்மையார் ஈழத் தமிழர்களுக்கு உதவிய ஈழத்தாய் என்கிறீர்களே
• அந்த தாய் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய மறுப்பதை நீங்கள் அறிவீர்களா?
• அந்த தாய் வழக்கின் இறுதி நேரத்தில்கூட விடுதலைப் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
மக்கள் பணத்தை சுருட்டிய ஒரு ஊழல் குற்றவாளியை ஈழத்தாய் என்று அழைப்பதும் அவரை விடுதலை செய்யக் கோருவதும் எந்தளவு கேவலமானது என்பதை நீங்கள் உண்மையிலே உணரவில்லையா?