Friday, October 30, 2015

• இந்திய அரசை எதிர்த்து ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு வழங்குமா?

• இந்திய அரசை எதிர்த்து ஈழத் தமிழர்களுக்கு
அமெரிக்க அரசு ஆதரவு வழங்குமா?
(1)வியட்நாமில் படுகொலைகள் செய்த அமெரிக்க அரசு,
ஈராக்கில் படுகொலைகள் செய்த அமெரிக்க அரசு, 
ஆப்கானிஸ்தானில் படுகொலைகள் செய்துவரும் அமெரிக்க அரசு,
ஈழப் படுகொலைகளை கண்டித்து ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
(2)காஸ்மீரில் படுகொலைகள் செய்யும் இந்திய அரசு, ,
சதீஸ்கரில் படுகொலைகள் செய்யும் இந்திய அரசு,
ஈழத்தில் நடந்த படுகொலைகளை கண்டித்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
(3) இந்திய அரசின் உதவியுடனே ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். எனவேதான் இந்திய அரசு இலங்கை அரசை பாதுகாத்து வருகின்றது. எனவே இந்திய அரசின் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்க அரசு ஒருபோதும் செயற்படாது. ஏனெனில் ஈழத்தமிழரின் சிறிய சந்தைக்காக பெரிய இந்திய சந்தையை இழக்க அமெரிக்கா விரும்பாது.
(4) இனப்படுகொலைகள் நிகழ்த்தியோரை தண்டிக்க வேண்டுமாயின்,
தமிழர்களுக்கு ஒரு சிறந்த தீர்வு கிடைக்க வேண்டமாயின்,
சிங்கள மக்களின் அதரவின்றி ஒருபோதும் நிகழாது.
எனவே முதலில் சிங்கள மக்களுக்கு கூறி அவர்களின் ஆதரவையே திரட்ட வேண்டும்.
(5) இந்திய அரசு மெல்ல மெல்ல இலங்கையை விழுங்குகிறது. விரைவில் இலங்கையை தனது 27வது மாநிலமாக மாற்ற முனைகிறது. எனவே இந்த இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராக சுதந்திர உணர்வு கொண்ட சிங்கள மக்கள் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு போராட்டத்தை விரைவில் ஆரம்பிப்பார்கள். இது தவிர்க்கமுடியாதது. அப்போது தமிழ்மக்களின் சுயநிர்ண உரிமையை அவர்கள் நிச்சயம் அங்கீகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

• என் உயிரினும் மேலான தமிழ் மக்களே!

• என் உயிரினும் மேலான தமிழ் மக்களே!
நடிகரின் கட்டவுட்டிற்கு ஊற்றிய பாலை இந்த குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏன் மனம் வரவில்லை?
கடவுளுக்கு செலவு செய்யும் பணத்தில் ஒரு பகுதியை இந்த குழந்தைகளுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கலாமே?
கடவுளோ அல்லது கட்டவுட்டுகளோ இனப் பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத் தரப்போவதில்லை எப்போது உணரப் போகிறீர்கள்?
கடந்த மாதம் நல்லூர் திருவிழாவுக்கு கூட்டம் கூடினார்கள். கந்தனை தேரில் வைத்து இழுத்தார்கள்.
தற்போது புலி படத்திற்கு கூட்டம் கூடியுள்ளார்கள். நடிகரின் கட்டவுட்டிற்கு பால் அபிசேகம் செய்துள்ளார்கள்.
கடவுளுக்கு கூட்டம்கூடி தேர் இழுப்பதாலோ அன்றி நடிகர்களின் கட்டவுட்டிற்;கு பால் அபிசேகம் செய்வதாலோ இனப் பிரச்சனைக்கு தீர்வு வரப்போவதில்லை என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?
ஜரோப்பாவில் கால் பந்து விளையாட்டை அரசுகளே பெரிய அளவில் ஊக்கம் கொடுக்கும். ஏனெனில் மக்கள் தமது பிரச்சனைகளுக்காக போராடுவதில் இருந்து கவனத்தை திருப்ப இவ் அரசுகள் விளையாட்டு, சினிமா, சமயம் போன்றவற்றை பயன்படுத்துகிறது.
யுத்தகாலத்தில் விமானம்மூலம் கோயில்கள் மீது குண்டு வீசிய இலங்கை அரசு இன்று கெலிகெப்டர் மூலம் நல்லூர் கந்தனுக்கு பூ மழை பொழிகிறது.
கோயில்கள் கட்டி திருவிழா செய்வதற்கும், சினிமா நடிகர்களுக்கு கட்டவுட் கட்டி பால் அபிசேகம் செய்யவும் இலங்கை அரசு அனுமதிப்பது தமிழ் மக்களின் போராட்ட உணர்வை சிதைப்பதற்கே என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வவுனியாவில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வக்கின்றி தாய் தனது குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொல்லும் போது இன்னொரு மூலையில் தமிழ் மக்கள் நடிகரின் கட்டவுட்டிற்கு பால் அபிசேகம் செய்வது மிகப் பெரிய கொடுமையாகும்.

• "சுத்துமாத்து" சுமந்திரனின் லண்டன் கூட்டம்!

• "சுத்துமாத்து" சுமந்திரனின் லண்டன் கூட்டம்!
இன்று 03.10.15 யன்று மாலை 4.30 மணிக்கு லண்டன் ஈஸ்ட்காமில் சுமந்திரன் அவர்களின் ரகசிய கூட்டம் நடைபெற்றது.
சுமந்திரன் தன்னை தமிழ் மக்களின் பிரதிநிதி என்கிறார். தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி என்கிறார். அப்படியானால் லண்டனில் தமிழ் மக்களை நேரில் சந்திக்க திராணியற்று ஏன் ரகசியமாக கூட்டம் நடத்துகிறார்?
இதுவரை வந்த இலங்கை அரசுகள் எவையும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காதபடியால்தான் பிரபாகரன்கள் உருவானார்கள் என்று சிங்கள ஜனாதிபதி சந்திரிக்கா கூறியிருக்கிறார். ஆனால் இலங்கை அரசு பல முறை தீர்வு தர முன்வந்தபோது தமிழ்மக்கள் அதனை நிராகரித்துவிட்டதாக சுமந்திரன் புது வரலாறு கூறுகிறார்.
சிங்கள தளபதி சரத்பொன்சேகா தமிழக தலைவர்களை கோமாளிகள் என்றார். அதேபோல் சுமந்திரன் தமிழக தலைவர்கள் "நேரம் ஒரு பேச்சு பேசும் தலைவர்கள்" என்று கிண்டல் செய்கிறார்.
ஈழத் தமிழ்மக்களுக்கு தமிழக மக்களின் அதரவு இல்லாமல் இருந்திருந்தால் இந் நேரம் இந்திய அரசு ஈழத் தமிழர்களை பூண்டோடு அழித்திருக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்திய அரசின் ஆதரவு எமக்கு இருக்கிறது. எனவே தமிழக ஆதரவு தேவையில்லை என்று சின்னப்பிள்ளைதனமாக சுமந்திரன் கூறுகிறார்.
இதுவரை 650 தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டது குறித்து எந்த கண்டனமும் தெரிவிக்காத சுமந்திரன், தமிழக அரசியல்வாதிகளின் 2000 ரோலர்கள் தினமும் வந்து ஈழக் கடற்பகுதியை அழிப்பதாக கூறுகிறார்.
தமிழக மக்கள் ஒனறி;னைந்து ஆதரவு வழங்கிய போது சுமந்திரன் தமிழக பல்கலைக்கழகத்தில் சொகுசாகப் படித்தவர்.
17 தமிழக இளைஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தபோது இவர் கொழும்பில் சொகுசாக வாழ்ந்தவர்.
தமிழக தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்காக சிறையில் வாடிய போது இவர் கொழும்பில் சிங்கள தலைவர்களுடன் விருந்துண்டவர்.
அப்படிப்பட்ட சுமந்திரன் கூறுகிறார் தமிழக தலைவர்களினதும் மக்களினதும் ஆதரவு தேவையில்லை என்று.
இவர் யார் என்று இப்பொது தெரிகிறதா?
இவர் வரலாற்றை ஏன் திரிக்கிறார் என்று புரிகிறதா?
இவரின் சுத்துமாத்துகள் யாவும் யாருக்காக என்று புரிகிறதா?
ஒரு பிய்ந்த செருப்பு இல்லாமற்போய்விட்டதே என்று என் வாழ்வில் இன்றுதான் நான் முதன் முதலாக கவலைப்பட்டேன்.

இந்த அவலத்தை புத்திஜீவி என்று அழைக்கிறார்களே!

• இந்த அவலத்தை புத்திஜீவி என்று அழைக்கிறார்களே!
தனது சொந்த இனத்தை கொன்றவர்களுடன் சேர்ந்து பாற்சோறு சாப்பிட்டவர்
தனது சொந்த இனத்தை அழித்தவர்களுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாடியவர்
தனது சொந்த இனத்தை அடிமைப்படுத்திய சிங்கக்கொடியை ஏந்தியவர்
அப்படிப்பட்டவர்,மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக முதியவரைக்கொன்ற பி.ஜே.பி கொடியை அணிய வெட்கப்படுவாரா?
இலங்கை அரசுக்கு போர்க்கப்பல் இலவசமாக மோடி அரசு வழங்குவது குறித்து இவருக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் அதனை எதிர்க்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாதிகளாம்.
நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச விசாரணை தேவையென்றும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசின் ஆதரவு தேவையில்லையாம். ஆனால் இலங்கை அரசை தொடர்ந்து காப்பாற்றி வரும் இந்திய அரசின் ஆதரவு மட்டும் இவருக்கு போதுமாம்.
இத்தகைய அவலமான ஒருவரை சிலர் எப்படி "புத்திஜீவி" என்று அழைக்கிறார்கள்?

தமிழ் மக்களே! யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்

• தமிழ் மக்களே!
யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்
செய்தி- வன்முறையை ஆதரிக்க முடியாது. இந்தியாவுக்கு ஏற்றவாறு தமிழ்மக்கள நடந்து கொள்ள வேண்டும் - சம்பந்தர் அய்யா
சம்பந்தர் அய்யாவிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம்
(1)வன்முறையை தமிழ் இளைஞர்கள் தாங்களாக ஏற்றுக்கொண்டார்களா அல்லது அவர்கள் மீது திணிக்கப்பட்டதா?
(2)அகிம்சை வழி சாத்தியமற்றதால் இளைஞர்கள் வன்முறையை தேர்ந்தெடுத்தார்களா? அல்லது அவர்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளா?
(3) துரையப்பாவை துரோகி என்று வர்ணித்து அவரை இளைஞர்கள் மூலம் கொல்லவைத்து வன்முறையை ஆரம்பித்து வைத்தவர்கள் யார்?
(4)அவ்வாறு கொலை செய்த இளைனஞர்களுக்காக வழக்கு பேசி அவர்களை தியாகிகளாக்கியவர்கள் யார்?
(5)வன்முறையில் ஈடுபட்ட சிவகுமாரனை தியாகி சிவகுமாரன் என்று சொல்லி வாக்கு கேட்டு எம்.பி ஆனவர்கள் யார்?
(6)இந்திய அரசு போராளிகளுக்கு பயிற்சியும் ஆயதமும் வழங்கியது அகிம்சை வழியா அல்லது வன்முறை வழியா?
(7) அமைதிப்படை என்று வந்து பல்லாயிரம் மக்களை கொன்று குவித்தது வன்முறை இல்லையா? ஆனால் அதனை எதிhப்பது மட்டும் வன்முறையா?
(8) ஆயதப் போராட்டம் நடத்திய புலிகளை தமிழ்மக்களின் ஏகோபித்த ஒரே பிரதிநிதிகள் என்று கூறி எம்.பி பதவி பெற்றவர்கள் யார்? அப்போது புலிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக தெரியவில்லையா?
(9) இலங்கை ராணுவம் தமிழ் மக்களை கொல்லாம். கற்பழிக்கலாம். கற்பழித்த ராணுவ வீரர்களை நீதிமன்றில் அஜர் செய்ய இலங்கை அரசு மறுக்கலாம். அது குறித்து உங்கள் சர்வதேசமும் கண்டு கொள்ளாமல் இருக்கும். ஆனால் அதற்கு எதிராக இளைஞர்கள் ஆயதம் ஏந்தினால் அது வன்முறையாக உங்களுக்க தெரிவது ஏன்?
(10) வன்முறையின்றி எந்த தீர்வும் பெற முடியாது என்ற தோழர் லெனின் கூறுகிறார். அப்படியென்றால் அகிம்சை வழியில் எப்படி தீர்வு பெற முடியும் என்றோ அல்லது அவ்வாறு தீர்வு பெற்ற ஒரு நாட்டையோ உங்களால் காட்ட முடியுமா?
தயவு செய்து உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக தமிழ் இனத்திற்கு துரோகம் இழைக்காதீர்கள். இனத்திற்காக போராடி உயிர் நீத்த போராளிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.

நடந்தது இனப்படுகொலையா அல்லது வெறும் போர்க்குற்றம்தானா?

• நடந்தது இனப்படுகொலையா அல்லது வெறும் போர்க்குற்றம்தானா?
லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன் " நடைபெற்றது இனப்படுகொலைதான். ஆனால் அதை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இன்மையால் நடைபெற்றது போர்க்குற்றம் என்றே நாம் கூறவேண்டியிருக்கிறது என்றார்.
அதேகூட்டத்தில் கருத்துக்கூறிய தியாகி சிவகுமாரனின் சகோதரர் (இவரும் தமிழரசுக்கட்சியின் தீவிர உறுப்பினர்) "நடைபெற்றது இனப்படுகொலைதான் என்று நிரூபிப்பதற்கு லண்டனில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று வழி காட்டுங்கள்" என சுமந்திரனிடம் கேட்டார். ஆனால் சுமந்திரன் அதற்குரிய பதில் அளிக்கவில்லை.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய மாகாண முதல்வருமமான விக்கினேஸ்வரன் அவர்கள் நடந்தது இனப்படுகொலையே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அப்படியாயின் அவர் ஆதாரம் இல்லாமலா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்? ஆதாரம் காட்ட வேண்டும் என்பது தெரியாமலா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்?
தமிழக சட்டசபையும் நடந்தது இனப்படுகொலையே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இனப்படுகொலை என்பதற்கு ஆதாரம் வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா?
ஜெர்மன் தீர்ப்பாயம், ட்ப்ளின் தீர்ப்பாயம் போன்றவை நடந்தது இனப்படுகொலை என்றே கூறியுள்ளன. இவ்வாறு கூறுவதற்கு ஆதாரங்கள் வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா?
நடந்தது இனப்படுகொலை என்றே சுமந்திரனும் ஏற்றுக்கொள்கிறார். அதற்குரிய ஆதாரம் இல்லை என்றால் தேiவையான ஆதாரத்தை திரட்டுவதுதானே ஓர் உண்மையான வழக்கறிஞரின் வேலையாக இருக்கவேண்டும்.
அதைவிடுத்து நாடு நாடாக வந்து இனப்படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்று மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை விடுத்து அதற்குரிய ஆதாரங்களை திரட்ட சுமந்திரன் பொன்றவர்கள் முயற்சி செய்யலாமே!

இனி அகிம்சை வழியில் போராடி தீர்வு பெறுவோம் - சம்பந்தர் அய்யா தெரிவிப்பு.

 இனி அகிம்சை வழியில் போராடி தீர்வு பெறுவோம் - சம்பந்தர் அய்யா தெரிவிப்பு.
அகிம்சை வழியில் போரடிய தமிழ் தலைவர்கள் வாங்கிய அடியை சம்பந்தர் அய்யா மறந்துவிட்டாரா?
காலிமுகத்திடலில் மண்டை உடைந்து ரத்தம் சிந்த சிந்த எமது தலைவர்கள் ஓடியதை சம்பந்தர் அய்யா மறந்துவிட்டாரா?
தமிழ் மக்கள் அகிம்சை வழியில் போராடிய போது சிங்கள அரசு இனக்கலவரங்களை உருவாக்கி தமிழ் மக்களை அழித்த வரலாற்றை சம்பந்தர் அய்யா மறந்துவிட்டாரா?
அகிம்சை வழியில் போராடி பயன் அற்ற நிலையில்தானே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.
அதனால்தானே தமிழ் மக்களும் அந்த ஆயுதப் போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கினார்கள்.
அகிம்சை வழிப் போராட்டம் என்பது சரணாகதிப் போராட்டமாகும். அதனால் ஒருபோதும் தீர்வு பெற முடியாது.
எனவே மீண்டும் அகிம்சை வழியில் போராட்டம் என்ற சம்பந்தர் அய்யாவின் அறிவிப்பு என்பது மாபெரும் வரலாற்று துரோகமாகும்.

• சம்பந்தர் அய்யாவுக்கு சமர்ப்பணம்

• சம்பந்தர் அய்யாவுக்கு சமர்ப்பணம்
திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்ட்டிருக்கும் அப்பாவி அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி 7வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அகிம்சை வழியில் பல முறை உண்ணாவிரதம் இருந்தும் தமிழக அரசோ அன்றி இந்திய அரசோ இதுவரை இவர்களுக்கு பதில் அளிக்கவில்லை.
அகிம்சை போராட்டத்திற்கு இந்திய அரசே மதிப்பளிக்காத நிலையில் இலங்கை அரசு மதிக்குமா? இலங்கை அரசிடம் அகிம்சை வழியயில் தீர்வு பெற முடியுமா? சம்பந்தர் அய்யாவுக்கே இது வெளிச்சம்!
இலங்கையில்தான் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய முடியவில்லை. தமிழகத்தில் உள்ளவர்களின் விடுதலைக்காவது சம்பந்தர் அய்யா குரல் கொடுக்கலாமே?
இந்தியாவில் குடி இருக்கிறார். இந்திய அரசை அடிக்கடி சந்திக்கிறார். இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் உதவும் என்கிறார். அப்படியென்றால் தனது செல்வாக்கை பாவித்து இந்த அகதிகளின் விடுதலைக்கு சம்பந்தர் அய்யா உதவலாம்தானே?
கடந்தமாதம் ஒரு அகதி தம்பதியினர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்து ஒரு ஊனமுற்ற இளைஞன் பாராமரிக்க யாருமற்ற நிலையில் தன் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இப்படியே விரக்தியில் அப்பாவி அகதிகள் சிறப்புமுகாமில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன
தன்னை தமிழ்மக்களின் தலைவர் என்று கூறிக்கொள்ளும் சம்பந்தர் அய்யா இந்த தமிழ் அகதிகளின் விடுதலைக்கு உதவுவாரா?

சேனனின் "லண்டன்காரர்"

 சேனனின் "லண்டன்காரர்"
ட்ரொக்கியவாத செயற்பாட்டாளரான சேனன் அவர்கள் எழுதி வெளிவந்திருக்கும் நூல் லண்டன்காரர்.
லண்டனில் நடைபெற்ற கலவரத்தை மையமாக கொண்டு விளிம்புநிலை மாந்தர்களை கதாபாத்திரங்களாக கொண்டிருக்கும் கதை இது
எதிர்வரும் 10.10.15 யன்று ஈஸ்ட்காமில் இந் நூல் அறிமுகமும் விமர்சனமும் நடைபெறவுள்ளது.
சோசலிசக்கட்சியின் முழு நேர செயற்பாட்டாளரான சேனன் அவர்களுக்கு லண்டன் கலவரம் தொடர்பாக நிறைய செய்திகளும் அனுபவங்களும் கிடைத்திருக்கும். அவர் இதைவிட ஆழமான, காத்திரமான ஒரு எழுத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
சேனன் தனது நாவலில் எழுதியிருக்கும் இறுதிவரி "ஒட்டுமொத்தத்தில் இது ஒரு விசரனைப்பற்றி இன்னொரு விசரன் எழுதிய கதை"

இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா!

• இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியா!
ஒரு தலித் குடும்பமே பொலிசாரால் நிர்வாணமாக்கப்பட்டு நடுரோட்டில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.
தனது காட்டை அந்நியருக்கு விற்காதே என்ற ஆதிவாசிப் பெண் "மாவோயிஸ்ட் பயங்கரவாதி" என்று முத்திரை குத்தி பொலிசாரால் கொல்லப்படுகிறாள்.
ஒரு முஸ்லிம் முதியவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பதற்காக அரசின் ஆதரவுடன் கொல்லப்படுகிறார்.
இதனை எதிர்த்து இரண்டு எழுத்தாளர்கள் தமக்கு வழங்கப்ட்ட பரிசையே திருப்பி அனுப்பியுள்ளனர்.
கர்நாடாவில் பகுத்தறிவு கருத்துகளை பரப்பிய எழுத்தாளர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதான் மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியாவா?
சீ..வெட்கம்!

• தலித்துகளின் சேலை உரியும்போது கண்ணன் வரமாட்டானா?

• தலித்துகளின் சேலை உரியும்போது கண்ணன் வரமாட்டானா?
துச்சாதனனால் பாஞ்சாலியின் சேலை உரியப்பட்டபோது கண்ணன் ஓடிவந்து அவள் மானம் காத்ததாக பாரத கதை கூறுகிறது.
இன்றைய நவ பாரத நாட்டில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் சேலை உரியப்படும்போது அந்த கண்ணன் ஏன் வரவில்லை?
பாஞ்சாலிக்கு ஆபத்து என்றவுடன் ஓடி வந்த கண்ணன் இன்று தலித் பெண்களுக்கு வராமல் இருப்பது ஏன்?
தலித் மக்கள் என்றால் கடவுள் கண்ணனுக்கும் பிடிக்காதா? அல்லது
தலித்துகள் காப்பாற்றப்பட வேண்டிய மனிதர்கள் இல்லை என்று கடவுள் நினைக்கிறாரா?
கண்ணன் வர மாட்டான்.
கண்ணன் தலித்துகளை காப்பாற்ற மாட்டான்.
தலித்துகள் அடிக்கு அடி கொடுக்க வேண்டும்.
அப்போது படிப்பினை வேறுவிதமாக அமையும்.
ஏய் இந்தியாவே!
நிர்வாணமாக்கப்பட்டிருப்பது யாரோ இரு தலித்துகள் அல்ல. மாறாக நிர்வாணமாக்கப்பட்டிருப்பது இந்தியதேசம் என்பதை புரிந்துகொள்.

லண்டனில் நடைபெற்ற முழுநாள் உரையாடல் நிகழ்வு

 லண்டனில் நடைபெற்ற முழுநாள் உரையாடல் நிகழ்வு
லண்டன் ஈஸ்ட்காமில் நேற்றைய தினம்(10.10.15) காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை முழுநாள் உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
"விடமேறியகனவு", "கனவுச்சிறை", "லண்டன்காரர்" அகிய மூன்று நாவல்கள் குறித்த அறிமுகம், விமர்சனம, கலந்துரையாடல் என்பன நடைபெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் அண்மையில் கனடாவில் காலம்சென்ற கவிஞர் திருமாவளவன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி உரையை சபேசன் அவர்கள் நிகழ்தினார்.
மு.புஸ்பராசன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் சி.நவரட்னராணி வரவேற்பும் அறிமுகமும் உரை நிகழ்த்தினார்.
பத்மநாபன் ஜயர் மற்றும் மாலிங்கசிவம் ஆகியோர் வெளியீட்டுரை நிகழ்தினார்கள்.
அமர்வு-1 ல் குணா கவியழகன் எழுதிய "விடமேறியகனவு" நூல் பற்றிய விமர்சன உரையை அ.இரவி, கௌரி பரா, யமுனா ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
அமர்வு-2ல் சேனன் எழுதிய "லண்டன்காரர்" நூல் பற்றிய விமர்சன உரையை எஸ்.வேலு மற்றும் சந்தூஸ் பரராஜசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
அமர்வு-3 ல் தேவகாந்தன் எழுதிய "கனவுச்சிறை" நூல் பற்றிய விமர்சன உரையை வாசன், வினோதரன், மற்றும் மு.நித்தியானந்தன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
இதனையடுத்து பௌசர் அவர்கள் தொகுப்புரை வழங்கினார்.
இறுதியாக நூல் ஆசிரியர்கள் உரை இடம்பெற்றது. விசா கிடைக்காததால் குணா கவியழகன் நெரில் கலந்துகொள்ளமுடியாமையினால் இணையமூலம் தனது எற்புரையை வழங்கினார். அதையடுத்து சேனன் அவர்கள் தனது உரையினை வழங்கினார். அவரையடுத்து தேவகாந்தன் தனது உரையை வழங்கினார்.
கே.ராஜா அவர்கள் நன்றியுரை வழங்கியதையடுத்து நிகழ்வு நிறைவு பெற்றது.
நிகழ்வில் மதிய உணவு மற்றும் வடை ,தேனீர் என்பனவும் வழங்கப்பட்டது.
குறிப்பு- இந்த இலக்கிய நிகழ்வை "விம்பம்" சார்பாக நடத்திய ராஜாவின் பங்களிப்பு நிச்சயம் பாராட்டுக்குரியது.

தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா

• தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா அவர்கள் இன்று தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார்.
அவர் தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. மாறாக தனது சொத்தை எல்லாம் தமிழ் இனத்திற்காக செலவு செய்தார்.
அவர் தனக்கு எந்த பதவியையும் தேடிக்கொள்ளவில்லை. மாறாக தமிழ் இனத்திற்காக தனது உழைப்பையெல்லாம் கொடுத்தார்.
அவர் தனது இனத்திற்கு ஒருபோதும் துரோகம் இழைத்தவர் அல்லர். மாறாக தமிழ் இனத்திற்காக தன்னையே தியாகம் செய்தவர்.
அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் பதவிகளைப் பெற்றிருக்கலாம். சொகுசாக வாழ்ந்திருக்கலாம்.
எந்த நெருக்கடியிலும் அவர் தனது கொள்கைகளை விட்;டுக்கொடுக்கவில்லை. அதனால் அவரை கொடிய பயங்கரவாதி என்று இந்திய அரசு லிஸ்ட்டில் வைத்திருந்தது.
அவர் மீது மதிப்ப வைத்திருந்தவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வசதியாக இருக்கின்றனர். அவர் விரும்பியிருந்தால் அவர்களிடம் உதவி பெற்று வசதியாக வாழ்ந்திருக்கமுடியும்.
அவர் இறுதிவரை எளிமையாக வாழ்ந்து மடிந்தள்ளார்.
அவருடைய தியாகம் ஒருபோதும் வீண்போகாது. வரலாறு அவரை நிச்சயம் நினைவில் கொள்ளும்.

சுமந்திரன் அவர்கள்

 சுமந்திரன் அவர்கள்
பனங்கொட்டைகளின் பாராளுமன்ற உறுப்பினரா?
அல்லது தமிழ்மக்களின் பாராளுமன்ற உறுப்பினரா?
தமது விடுதலை கோரி 
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றார்கள்.
இந்திய சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்வர்கள் 10வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இவர்களது விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பத்தாயிரம் பனங்கொட்டைகள் நடுவதை பெருமையாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
சிறையில் எமது உறவுகள் வாடுகின்றார்கள். அவர்களது வருகைக்காக உறவினர்கள் ஏங்குகிறார்கள். ஆனால் எமது எம்.பி சுமந்திரனோ அதுகுறித்து எந்த கவலையும் இன்றி மாலை, பொன்னாடை போர்த்தி மகிழ்கிறார்.
இலங்கை சிறையில் அரசியல்கைதிகள் யாரும் இல்லை என்று நீதி அமைச்சர் கூறுகிறார். அவர்கள் அரசியல் கைதிகள்தான் என்று இன்னொரு அமைச்சர் மனோகணேசன் கூறுகிறார். ஆனால் இதை எடுத்துக்கூறி விடுதலை பெற்றுத்தரவேண்டிய எமது "சட்டமேதை" சுமந்திரனோ எதுவும் கூறாமல் மௌனமாக இருக்கிறார்.
சுமந்திரனின் தற்போதைய கவலை எல்லாம் சிறையில் உள்ளவர்களின் விடுதலை அல்ல. மாறாக பத்தாயிரம் பனங்கொட்டை நட்டு அதற்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கவேண்டும் என்பதே!

• லண்டனில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான பிறந்தநாள் விழா

• லண்டனில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான பிறந்தநாள் விழா
லண்டனில் வாழும் ஈழத் தமிழரான சிறீகாந்தலிங்கம் என்ற வழக்கறிஞர் தனது 60வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.
கடந்த 02.10.15 யன்று லண்டன் ஆச்வே முருகன் ஆலயத்தில் இந்த பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது.
விழா மண்டபத்தின் நடுவில் உண்டியல் வைக்கப்பட்டு அன்பளிப்புகள் யாவும் பணமாக பெறப்பட்டுள்ளது.
உண்டியல் மூலம் பெறப்பட்ட அப் பணம் யாவும் வன்னியில் உள்ள வறிய மக்களுக்காக செலவு செய்யப்படவுள்ளது.
அதுமட்டுமன்றி "லண்டனில் உள்ளவர்கள் ஆடம்பரமாக விழாக்கள் நடத்துவது சரியா?" என வழக்காடு மன்றம் நடத்தப்பட்டது.
சிறீகாந்தலிங்கம் அவர்கள் தன்னையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இவ் வழக்காடுமன்றத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ORHAN என்ற அமைப்பின்மூலம் விழிப்புலன் இழந்தோருக்கும் ஏனைய மாற்றுத் திறனாளிகளுக்கும் இவர் உதவி வருகிறார்.
தனது 60 வது பிறந்தநாள் விழாவையும் வித்தியாசமாக நடத்தி மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நடந்துள்ளார்.
அவரை பாராட்டுவோம். வாழ்த்துவோம்!

கோவையில் 16.10.15 யன்று எனது நூல் வெளியீடு

• கோவையில் 16.10.15 யன்று எனது நூல் வெளியீடு
கடந்த 21.09.15 யன்று சென்னையில் எனது "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் தமிழ்தேச மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்டது.
எதிர்வரும் 16.10.15யன்று மாலை 5 மணிக்கு கோவையில் அண்ணாமலை அரங்கத்தில் எனது இந் நூல் தமிழ்தேச மாணவர் இயக்கத்தால் வெளியிடப்படவுள்ளது.
நூல் வெளியீட்டு நிகழ்வு விபரம்
தலைமை- தோழர் இளங்கோவன்
வரவேற்புரை- தோழர் தமிழ்நெறியன்
நூல்வெளியீடு- தோழர் வே.ஈஸ்வரன்
நூல் பெறுதல்- தோழர் கொளத்தூர் மணி
நூல் பெற்று உரை-
தோழர் கோவை கு.இராமகிருட்டிணன்
வழக்கறிஞர் ப.பா.மோகன்
எழுத்தாளர் பாமரன்
வெ.மா.வீரக்குமார்
வழக்கறிஞர் வெண்மணி
வழக்கறிஞர் பா.புகழேந்தி
தோழர் தமிழ்நேயன்
வழக்கறிஞர் கலையரசு
நன்றியுரை- தோழர் வே.சிவபாலன்
திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
எனவே சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த செய்திகள் தமிழக மக்களுக்கு அறியும் வண்ணம் அதிகம் கொண்டுசெல்ல வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் தமிழக உறவுகளை பாராட்டுவதோடு அவர்களது இம் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

•இளனி குடித்தவன் இருக்க கோம்பை நக்கியவன் பிடிபட்ட கதை இது

•இளனி குடித்தவன் இருக்க கோம்பை நக்கியவன் பிடிபட்ட கதை இது
இளனி குடித்தவன் இருக்க கோம்பை நக்கியவன் பிடிபட்ட கதைபோல பிள்ளையான் கைது இருக்கிறது.
40 ஆயிரம் அப்பாவி தமிழ்மக்களைக் கொன்ற மகிந்த ராஜபக்ச இன்னும் கைது செய்யப்படவில்லை.
40 ஆயிரம் அப்பாவி தமிழ்மக்களை கொல்ல உத்தரவிட்ட கோத்தபாயா இன்னும் கைது செய்யப்படவில்லை.
40 அயிரம் அப்பாவி தமிழ்மக்களை கொன்ற ராணுவதளபதி சரத்பொன்சேகா இன்னும் கைது செய்யப்படவில்லை.
ஆனால் ஒரு கொலைக்காக முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
எப்போது மகிந்த ராஜபச்ச கைது செய்யப்படுவார்?
எப்போது கோத்தபாயா கைது செய்யப்படுவார்?
எப்போது சரத்பொன்சேகா கைது செய்யப்படுவார்?
பிள்ளையான் கருணா டக்ளஸ் போன்றவர்களை கைது செய்யும்படி கோரும் சுமந்திரன் அவர்கள் மகிந்த, கோத்தா, சரத்பொன்சேகாவை கைது செய்யும்படி வலியுறுத்தாதது ஏன்?
தமிழின படுகொலைக்கு முழு உதவி புரிந்த இந்திய அரசையும் விசாரிக்க வேண்டும் என சுமந்திரன் வலியுறுத்துவாரா?

•கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை இது!

•கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை இது!
சிறையில் உள்ளவர்கள் தம் விடுதலைகோரி 5 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்விக்க முடியாத சம்பந்தர் அய்யா, ஒரு வருடத்தில் இனப்பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவாராம்.
சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி 5வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
சிறைக்கைதிகளின் விடுதலைக்கு ஆதரவாக தமிழ் அமைப்புகள் பலவும் குரல் கொடுத்ததோடு அடையாள போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ் பல்கலைக்;கழக மாணவர்களும் சிறையில் உள்ள கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சமவுரிமை இயக்கத்தின் சார்பில் சிங்கள மக்களும் வீதியில் இறங்கி குரல் கொடுத்துள்ளனர்.
இதுவரை இனவாதிகள் யாருமே இவ் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று கூறவில்லை.
இருப்பினும் தமிழர் வாக்கில் ஜனாதிபதியான மைத்திரி இது குறித்து அக்கறை செலுத்தவில்லை.
நல்லாட்சி செய்வதாக கூறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இது குறித்து அக்கறை எடுக்கவில்லை.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவதாக கூறிய தமிழ்தேசியகூட்டமைப்பினரும் இவ் கைதிகளைச் சென்று பார்வையிடக்கூட முனையவில்லை.
இவ் சிறைக் கைதிகளை விடுவிக்கமுடியாதவர்கள் எப்படி ஒரு வருடத்திற்கள் தீர்வு பெறப்போகிறார்கள்?
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போறானாம.அதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.

மேலும் மேலும் தமிழக மக்களை சென்றடையும் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த செய்திகள்.

•மேலும் மேலும் தமிழக மக்களை சென்றடையும் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த செய்திகள்.
தமிழக மக்களால் மட்டுமே சிறப்புமுகாம்களை மூடவைக்க முடியும். எனவே எந்தளவு முடியுமோ அந்தளவு விரைவாக தமிழக மக்களுக்கு சிறப்புமுகாம் கொடுமைகள் பற்றி விளக்க வேண்டும்.
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் 21.09.15யன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
நேற்று (16.10.15) கோவையில் இந் நூல் வெளியிடப்பட்டது.
சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு விரைவில் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்ற நம்பிக்கையை இவ் நிகழ்வுகள் ஏற்படுத்துகின்றன.
சிறப்புமுகாம்கள் விரைவில் மூடப்பட வேண்டும். அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இவ் அரிய பணியை முன்னெடுக்கும் தமிழக உறவுகளின் உணர்வுகளை பாராட்டுவதோடு அவர்களது முயற்சி விரைவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறோம்.

•"கிளிப்பிள்ளைகள்" என்று கூறுவதற்கு கொஞ்சம்கூட கூச்சம் வரவில்லையா?

•"கிளிப்பிள்ளைகள்" என்று கூறுவதற்கு கொஞ்சம்கூட கூச்சம் வரவில்லையா?
செய்தி- "கிளிநொச்சி மக்கள் எங்கள் கிளிப்பிள்ளைகளே"- இந்திய துணைத்தூதர்- ஆறுமுகம் நடராஜன்
இலங்கை அரசுடன் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்றொழித்தவிட்டு இப்போது எப்படி கொஞ்சம்கூட கூச்சமின்றி கிளிநொச்சி மக்கள் எங்கள் கிளிப்பிள்ளைகள் என்று கூறமுடிகிறது?
எந்த வன்னி மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தார்களோ அதே வன்னி மண்ணில் வந்து மரம் நடுவது எதற்காக?
50 ஆயிரம் வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். அதைப் பெறுவதற்கு அப்பாவி மக்கள் பாலியல் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி 8 லட்சம் ருபா தருவதாக கையெழுத்து வாங்கிவிட்டு 6 லட்சம் ரூபாவே கொடுக்கிறார்கள்.
இந்த முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்திய துணை தூதர் நடராஜன் எதற்காக நாம் இரத்த உறவுகள் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்?
தமிழனை வைத்தே தமிழனை தாஜா பண்ணிவிடமுடியும் என இந்திய அரசு கனவு காண்கிறது.
ஆனால் தமிழ்மக்கள் இந்திய அரசு செய்த கொடுமைகளை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.

சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு

சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் " நூல்
• 21.09.15 யன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
• 16.10.15யன்று கோவையில் வெளியிடப்பட்டது.
• 25.10.15 யன்று செய்யாறில் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது செய்யாறு மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில் சிறப்புமுகாம் உள்ளது.
இச் சிறப்புமுகாம்களை மூடுமாறு கோரி தமிழ்தேசமக்கள்கட்சியினரால் இந் நூல் வெளியீடுகள் நடத்தப்படுகின்றன.
எதிர்வரும் 25.10.15 யன்று திருவண்ணாமலைமாவட்டத்தில் செய்யாறில் நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதையடுத்து திருச்சி மாவட்டத்திலும் இந் நூல் வெளியீடு இடம்பெறும் என தமிழத் தேசமக்கள்கட்சி தலைவர் தோழர் புகழேந்தி அவர்கள் அறிவித்துள்ளார்.
செய்யாறு நிகழ்வு விபரம் :-
• காலம்- 25.10.15 , மாலை 5.00 மணி
• இடம்- ஜே.பி.அர் திருமண மண்டபம் , பழைய காஞ்சிபுரம் சாலை, செய்யாறு
• வரவேற்புரை- வெற்றிதமிழன் , தமிழ்தேசமக்கள்கட்சி
• தலைவர்- தோழர் தமிழினியன்
• நூல் அறிமுகம்- தமிழ்முகிலன் , தமிழர் கழகம்
• நூல் பெறுவோர் - மு.செந்தில்வேல் , கலவை
செம்பியன் , தமிழ்மாணவர் கூட்டமைப்பு
கருத்துரை:
• வழக்கறிஞர் புகழேந்தி , தலைவர், தமிழ்தேசமக்கள்கட்சி
• தோழர் செந்தமிழ்குமரன் , செயலர், தமிழ்தேசமக்கள்கட்சி
• ஆழி செந்தில்நாதன் ,மக்கள் இணையம்
• சரவணன் தங்கப்பா
• வே.தாண்டவமூhத்தி , மக்கள் இணையம்
• மேகநாதன், வெளிச்சம் சமூக விழிப்பணர்வ இயக்கம்
தொடரும் இந் நூல் வெளியீடுகள் மக்கள் மத்தியில் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை எற்படுத்துகின்றன. இவை மிக விரைவில் சிறப்புமுகாம்களை மூட வழி செய்யும் என்ற நம்பிக்கையை தோற்றுவிக்கின்றன.
நூல் வெளியீட்டை முன்னின்று நடாத்தும் எமது உறவுகளின் உணர்வுகளை பாராட்டுகிறோம். அவர்களின் இந் நூல் வெளியீடு வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

இந்த தலித் குழந்தைகள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொன்றார்களா?

• இந்த தலித் குழந்தைகள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொன்றார்களா?
டில்லிக்கு அருகில் ஒரு தலித் குடும்பம் பொலிசாரால் நிர்வாணமாக்கப்பட்டபோது அவர்கள்
தங்களை தாங்களே நிர்வாணமாக்கினார்கள் என்றார்கள்.
இப்போது அதே டில்லிக்கு அருகில் இரண்டு தலித் குழந்தைகள் தீயிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதையும் அந்த குழந்தைகளே தங்களை தீயிட்டு கொன்றார்கள் எனக் கூறப்போகிறார்களா?
செய்தி- அரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத் மாவட்டத்தின் சன்பேர் என்ற கிராமத்தில் தலித் குடும்பம் ஒன்றை வீட்டினுள் வைத்து ராஜ்புத் சாதியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தியுள்ளனர். அதில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்றும், பத்து மாதம் நிரம்பிய பெண் குழந்தை ஒன்றும் தீயில் கருகி இறந்துள்ளன. அந்தக் குழந்தைகளின் தாய் ஆபத்தான நிலையில் தீக் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்- டாக்டர் அம்பேத்கார்

ஈழ தமிழ் அகதிகளை இந்தியா சிறப்புமுகாமில் அடைக்கிறது ! நோர்வே உதவி மேயராக தெரிவு செய்கிறது !!

•ஈழ தமிழ் அகதிகளை
இந்தியா சிறப்புமுகாமில் அடைக்கிறது !
நோர்வே உதவி மேயராக தெரிவு செய்கிறது !!
நோர்வே நாடு "வந்தாரை வாழவைக்கும் நாடு" என்று தன்னைத்தானே சொல்வதில்லை.
நோர்வே நாடு "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பெருமை பேசுவதில்லை
நோர்வே நாடு ஈழத் தமிழர்களை தமது "தொப்புள்கொடி உறவுகள்" என்று சொல்வதில்லை
என்றாலும்கூட அகதியாக வந்த ஈழத் தமிழர்களை அது பிரஜாவுரிமை வழங்கி அனைத்து உரிமைகளையும், வசதிகளையும் வழங்கி வருகிறது.
அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரை தனது தலைநகரின் உதவி மேயராகவும் தெரிவு செய்துள்ளது.
ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தனது தொப்புள்கொடி உறவுகளான ஈழ அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறது.
ஒன்று இரண்டல்ல மாறாக 25 வருடங்களுக்கு மேலாக தமிழக மண்ணில் இச் சிறப்புமுகாம் கொடுமைகள் தொடருகின்றன.
இலங்கை இனவெறி அரசுகூட வரும் 7ம் திகதிக்கு முன்னர் அனைத்து சிறைக்கைதிகளையும் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது.
ஆனால் "ஈழத்தாய்" என பட்டம் பெற்ற ஜெயா அம்மையாரோ சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய மறுத்து வருகிறார்.
என்னே கொடுமை இது!

•கலைஞர் அவர்களே! மன்னிக்கவும் எங்களால் மறக்கவும் முடியவில்லை உங்களை மன்னிக்கவும் முடியவில்லை

•கலைஞர் அவர்களே! மன்னிக்கவும்
எங்களால் மறக்கவும் முடியவில்லை
உங்களை மன்னிக்கவும் முடியவில்லை
செய்தி- "இலங்கை நட்பு நாடு என்பதை நிறுத்துக. போர்க்குற்றம் மீது சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்துக- கருணாநிதி வேண்டுகோள்.
கலைஞர் அவர்களே!
நீங்கள் பதவியில் இருக்கும்போது நட்பு நாடாக தெரிந்த இலங்கை பதவி இல்லாத இப்போது நட்பு நாடு அல்ல என்று ஏன் தெரிகிறது?
நீங்கள் பதவியில் இருக்கும்போது உங்கள் மகள் கனிமொழி மகிந்தவுடன் கைகுலுக்கி பரிசில்கள் வாங்கியபோது தெரியாத போர்க் குற்றம் இப்பொது ஏன் தெரிகிறது?
நீங்கள் பதவியில் இருக்கும்போது ஆடிய 3 மணிநேர உண்ணாவிரத நாடகத்தையும் அதனைத் தொடர்ந்து பல்லாயிரம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதையும் எம்மால் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.
முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட ரத்தம் காயுமுன்னரே உங்கள் மகள் கனிமொழி கொலைகார மகிந்தவுடன் கைகுலுக்கி பரிசில்கள் வாங்கியதை எம்மால் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.
1990ம் ஆண்டு உங்களால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் கொடுமைகள் இன்றும் தொடருகின்றன. அதை மூடவேண்டும் என்று இன்றும்கூட உங்களால் கோர முடியாததை எம்மால் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும முடியவில்லை.
இப்போதுகூட ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுப்பது உண்மையில் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட அக்கறையால் அல்ல. மாறாக எதிர்வரும் தேர்தலில் உங்கள் மகன் ஸடாலினுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் எனபதற்காகவே.
இனியும் உங்களை நம்பி ஏமாறுவதற்கு தமிழன் ஒன்றும் அடி முட்டாள்கள் இல்லை

நூல் வெளியீடு

நூல் வெளியீடு
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் " நூல்
• 21.09.15 யன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
• 16.10.15யன்று கோவையில் வெளியிடப்பட்டது.
• 25.10.15 யன்று செய்யாறில் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது செய்யாறு மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில் சிறப்புமுகாம் உள்ளது.
இச் சிறப்புமுகாம்களை மூடுமாறு கோரி தமிழ்தேசமக்கள்கட்சியினரால் இந் நூல் வெளியீடுகள் நடத்தப்படுகின்றன.
எதிர்வரும் 25.10.15 யன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறில் நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.
செய்யாறு நிகழ்வு விபரம் :-
• காலம்- 25.10.15 , மாலை 5.00 மணி
• இடம்- ஜே.பி.அர் திருமண மண்டபம் , பழைய காஞ்சிபுரம் சாலை, செய்யாறு
• வரவேற்புரை- வெற்றிதமிழன் , தமிழ்தேசமக்கள்கட்சி
• தலைவர்- தோழர் தமிழினியன்
• நூல் அறிமுகம்- தமிழ்முகிலன் , தமிழர் கழகம்
• நூல் பெறுவோர் - மு.செந்தில்வேல் , கலவை
செம்பியன் , தமிழ்மாணவர் கூட்டமைப்பு
கருத்துரை:
• வழக்கறிஞர் புகழேந்தி , தலைவர், தமிழ்தேசமக்கள்கட்சி
• தோழர் செந்தமிழ்குமரன் , செயலர், தமிழ்தேசமக்கள்கட்சி
• ஆழி செந்தில்நாதன் ,மக்கள் இணையம்
• சரவணன் தங்கப்பா
• வே.தாண்டவமூhத்தி , மக்கள் இணையம்
• மேகநாதன், வெளிச்சம் சமூக விழிப்பணர்வ இயக்கம்
தொடரும் இந் நூல் வெளியீடுகள் மக்கள் மத்தியில் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை எற்படுத்துகின்றன. இவை மிக விரைவில் சிறப்புமுகாம்களை மூட வழி செய்யும் என்ற நம்பிக்கையை தோற்றுவிக்கின்றன.
நூல் வெளியீட்டை முன்னின்று நடாத்தும் எமது உறவுகளின் உணர்வுகளை பாராட்டுகிறோம். அவர்களின் இந் நூல் வெளியீடு வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

•லண்டனில் நடைபெற்ற (நீர்வேலி) "கலைவிழா"

•லண்டனில் நடைபெற்ற (நீர்வேலி) "கலைவிழா"
இன்று ( 24.10.15) மாலை 6 மணிக்கு லண்டனில் வுட்பிறிஜ் பாடசாலை மண்டபத்தில் யாழ்- நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் நீர்வேலி நலன்புரி சங்கம் இணைந்து வழங்கிய கலைமாலை நிகழ்வு இடம்பெற்றது.
தாயகத்தில் உயிர் நீத்தவர்களுக்கான மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்தன.
முதலில் சக்தி நுண்கலை மாணவர்களின் நடனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மெல்லிசைக் குழுவினரின் கான மழை இடம்பெற்றது.
அதன்பின்பு சட்டதரணி சிறிகாந்தலிங்கம் அவர்களின் தயாரிப்பு நெறியாழ்கையில் "மாவீரன் பண்டார வன்னியன்" நாடகம் இடம்பெற்றது.
அடுத்ததாக லண்டன் திரிசக்தி இலக்கிய சங்கமம் வழங்கிய பட்டி மன்றம் நடைபெற்றது. "எமது பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாத்து மரபு சார்ந்த இலக்கியங்களை இளஞசமுதாயத்திற்கு கையளிக்க வேண்டியது, சமுதாய அமைப்புகளின் பணியா? அல்லது தனி மனிதர்களின் பணியா?" என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
மீண்டும் மெல்லிசை குழுவினரின் கானமழை தொடர்ந்தது. அத்துடன் இரவு உணவும் வழங்கப்பட்டது.
நன்கு திட்டமிட்டு மிகச் சிறப்பாக நிகழ்வை நடத்தியுள்ளார்கள். கடந்த 13 வருடமாக இவ் நிகழ்வை இவர்கள் நடத்தி வருகிறார்கள்.
யாழ் மாவட்டத்தில் பிரபலமான ஒரு பாடசாலையின் பழையமாணவர் ஒன்றுகூடல் லண்டனில் தேம்ஸ்நதியில் மிதக்கும் ஓட்டலில் பல லட்சம் செலவில் நடத்தினார்கள். ஆனால் அந்த பாடசாலையில் கம்பியுட்டர் பிறின்டருக்குரிய காட்றிஜ் வாங்குவதற்கு பணம் இல்லாமல் கஸ்டப்பட்டதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
அத்தகைய ஒரு அவலமான பழைய மாணவர் போல் அல்லாமல் இந்த அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் பல பயனுள்ள வேலைகளை செய்து மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக வழிகாட்டியுள்ளார்கள்.
உண்மையில் இந்த நிகழ்வை அரங்கேற்றிய அந்த பழைய மாணவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே!