Thursday, June 29, 2017

•முதலமைச்சரை நீக்க ஆளுநரைச் சந்தித்தவர்கள் இந்த அப்பாவி தமிழ் இளைஞனுக்காக சந்திப்பார்களா?

•முதலமைச்சரை நீக்க ஆளுநரைச் சந்தித்தவர்கள்
இந்த அப்பாவி தமிழ் இளைஞனுக்காக சந்திப்பார்களா?
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு நேற்று முன்தினம் மொனராகலை நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
கடந்த 7 வருடங்களாக சிறையில் இருக்கும் கேதீஸ்வரன் என்னும் 28 வயதுடைய தமிழ் இளைஞருக்கே நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
யுத்தம் முடிந்த பின்பு இலங்கை அரசு கேட்டுக் கொண்டபடி திருக்கோலில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இந்த இளைஞருக்கே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனக்காக ஒரு வழக்கறிஞரைக்கூட நியமிக்க முடியாத வறுமை நிலையில் இருக்கும் இந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
14 நாட்களுக்குள் அப்பீல் எடுக்க வேண்டும். இல்லையேல் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் இந்த அப்பாவி இளைஞர் இருக்கிறார்.
முதலமைச்சரை நீக்குவதற்காக நள்ளிரவில் ஓடிச் சென்று ஆளுநரைச் சந்தித்த எமது தமிழ் தலைவர்கள் இந்த இளைஞருக்கு உதவ முன்வருவார்களா?
முதலமைச்சரை நீக்குவதற்காக ஆளுநருடன் சிங்கள மொழியில் பேசிய சி.கே.சிவஞானம் இந்த இளைஞருக்காக சிங்களத்தில் பேசாவிட்டாலும் தமிழிலாவது பேச முன்வருவாரா?
தமது ஊழல் அமைசர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்க ஓடிச்சென்ற சம்பந்தரும் சுமந்திரனும் இந்த இளைஞருக்கு உதவ முன்வருவார்களா?
சரணடைந்த 12800 போராளிகள் மீது எந்த வழக்கும் இன்றி விடுதலை செய்வித்தது தானே என்று முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் வவுனியாவில் பேசியுள்ளார்.
அது உண்மை என்றால் சரணடைந்த இந்த இளைஞன் ஏன் வழக்கு எதுவுமின்றி விடுதலை செய்யப்படவில்லை என்பதை அவர் கூறுவாரா?
குறிப்பு- தமிழ் தலைவர்கள் யாருமே இந்த அப்பாவி இளைஞனுக்கு உதவப் போவதில்லை. எனவே யாராவது உணர்வுள்ளவர்கள் தயவு செய்து இந்த இளைஞனுக்கு உதவுங்கள்.

முதலமைச்சரை நீக்குவதற்கு மூன்று பொறிமுறைகளை வைத்திருக்கிறோம்- மாகாணசபை உறுப்பினர் சயந்தன்.

முதலமைச்சரை நீக்குவதற்கு மூன்று பொறிமுறைகளை வைத்திருக்கிறோம்- மாகாணசபை உறுப்பினர் சயந்தன்.
நீதிமொழி- தெருவில் குரைக்கும் நாய்களுக்கெல்லாம் திரும்பி நின்று கல் எறிந்து கொண்டிருந்தால் எமது இலக்கை அடைய முடியாது.
குறிப்பு- வெளிநாட்டு உயர்ரக நாய். டிராக் சூட், சப்பாத்து, இவற்றை பார்க்கும்போது மாகாணசபை உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை எனக்கு மட்டுமா வருகுது?

•வள்ளுவர் சிலை திறப்பு இது தமிழ் மக்கள் மீதூன இந்திய அக்கறையா? அல்லது, தமிழ் மக்கள் மீதான இந்திய ஆக்கிரமிப்பா?

•வள்ளுவர் சிலை திறப்பு
இது தமிழ் மக்கள் மீதூன இந்திய அக்கறையா?
அல்லது, தமிழ் மக்கள் மீதான இந்திய ஆக்கிரமிப்பா?
முல்லைத்தீவில் காந்தி சிலை அமைத்து மூக்குடைபட்ட இந்திய தூதர் இப்போது வள்ளுவர் சிலை வைத்துள்ளார்.
என்னவோ தெரியவில்லை. எதாவது ஒரு சிலையை வைத்தே தீருவேன் என்று இந்த இந்திய தூதர் அடம்பிடித்துக்கொண்டே இருக்கிறார்.
நேற்றைய தினம் (19.06.17) வவுனியா புளியங்குள இந்துக் கல்லூரியில் மிகப் பெரிய வள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் சிலை வழங்கியவர்- இந்திய பெரு முதலாளி வி.ஜி.சந்தோசம்
வள்ளுவர் சிலையை திறந்து வைத்தவர்- இந்திய தூதர் நடராஜன்
விருந்தினராக கலந்துகொண்டவர்- கல்வி அமைச்சர் ராதாகிருஸ்ணன்
இவையனைத்தும் ஒருங்கிணைத்தவர்- மறவன்புலவு சச்சிதானந்தன் (ஈழத்து சிவசேனை)
இவர்கள் அத்தனைபேரும் ஈழத்து தமிழ்மக்கள் மீதான அக்கறையின் பேரிலேயே பெரும் செலவில் வள்ளுவர் சிலையை அமைத்தார்கள் என நம்புவர்களிடம் ஒரேயொரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன்.
இதே வன்னியில் கூரைகூட மேயாமல் பாடசாலை இருக்கும்போது பெரும் செலவில் வள்ளுவர் சிலை ஏன் அமைக்க வேண்டும்?
படித்த பட்டதாரிகள் வேலை கேட்டு போராடுகிறார்கள். ஆனால் இந்த கல்வி அமைச்சர் இந்தியாவில் இருந்து 1000 ஆசிரியர்களை இறக்குமதி செய்ய இருக்கிறார்.
எனவே இந்த கல்வி அமைச்சர் வன்னி மக்களின் நலனுக்காகவே வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் என்று எப்படி நம்புவது?
இதே வன்னியில் காணாமல் போனவர்களின் உறவுகள் 100 நாட்களை தாண்டி போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு உதவ அக்கறையற்ற இந்திய தூதர் தமிழ் மக்கள் மீது அக்கறையில் வள்ளுவர் சிலை அமைக்கிறார் என்று எப்படி நம்புவது?

•லண்டனிலும் காரித் துப்பி விட்டார்கள் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

•லண்டனிலும் காரித் துப்பி விட்டார்கள்
தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?
தமிழக அரசு உடனடியாக திருமுருகன் காந்தியை விடுதலை செயய்யப்போகிறதா? அல்லது உலகளவில் இன்னும் அசிங்கப்படப் போகிறதா?
இதுதான் இன்று தமிழக அரசுமுன் உலகில் வாழும் தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள கேள்வியாகும்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அஞ்சலி செலுத்த முயன்றமைக்காக திருமுருகன் காந்தியையும் மற்றும் 3 பேரையும் தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்துள்ளது.
இந்த அராஜகத்தை கண்டித்து தமிழகத்தில் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சொலிடாறிற்றி அமைப்பினர் நேற்றைய தினம் தமது கண்டனக் குரலை பதிவு செய்துள்ளனர்.
அதுவும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால் சென்று நேரிடையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
லண்டனில் பல தமிழ் அமைப்புகள் இருந்தாலும் தமிழ் சொலிடாறிற்றி அமைப்பினர் லண்டன் இந்திய தாதரகத்தின் முகத்தில் ஓங்கி குதத்pயுள்ளனர்.
லண்டன் தமிழ் சொலிடாறிற்றி அமைப்பினரின் இச் செயற்பாடு நிச்சயம் பாராட்டுக்குரியது. மற்றைய அமைப்புகளுக்கு வழி காட்டியுள்ளனர்.

•அமைச்சர்களுக்கு ஒரு நியாயம் மக்களுக்கு இன்னொரு நியாயம்!

•அமைச்சர்களுக்கு ஒரு நியாயம்
மக்களுக்கு இன்னொரு நியாயம்!
கடந்த வருடம் கிளிநொச்சயில் ஒரு சிறுவன் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக திருடியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
இன்னொரு சிறுவன் கசிப்பு விற்றதாக 6 போத்தல்களுடன் பொலிசாரினனால் கைது செய்யப்பட்டிருந்தான்.
அதேபோல் மட்டக்களப்பு மாணவி ஒருவர் சிகிரியா மலையில் தன் பெயரை சோக்கட்டியால் எழுதிவிட்டார் என்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அந்த அப்பாவி மாணவிக்கு 6 மாத தண்டனையும் வழங்கப்பட்டது
ஆனால் அமைச்சர்கள் இருவர் ஊழல் மோசடி செய்தமைக்காக வெறுமனே ராஜினாமா மட்டும் செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர்.
ஒரு அமைச்சர் மக்களின் குடி தண்ணீரில் விளையாடியுள்ளார். இன்னொரு அமைச்சர் மருந்து உபகரணத்தில் விளையாடியுள்ளார்.
முறைப்படி இந்த அமைச்சர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அமைச்சர்கள் என்றால் ஊழல் செய்யலாமா? அமைச்சர்கள் என்றால் சட்ட விரோத செயல்களில் ஈடுபடலாமா?
சிறுவர்கள் குற்றம் செய்தால் இரக்கமின்றி கைது செய்யும் பொலிசார் இந்த அமைச்சர்கள் மோசடிகள் செய்துள்ளார்கள் என்று தெரிந்தும் இன்னும் ஏன் இவர்களை கைது செய்யவில்லை?
மோசடி செய்த அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட வேண்டிய முதலமைச்சர் அந்த அமைச்சர்களை ராஜினாமா செய்யும்படி மன்றாடுகிறார்.
என்னே அவலம் இது? சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். மக்கள் தவறு செய்தால் தண்டிக்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள் மோசடி செய்தால் கண்டுக்காமல் இருக்கிறார்கள்.
இது என்ன நியாயம்?
சட்டவிரோதமாக செயற்பட்ட ஊழல் அமைச்சர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என தமிழ் மக்கள் வற்புறுத்த வேண்டும்.
இதன்மூலம் முழு இலங்கைக்கும் தமிழ் மகக்ள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

பேரறிவாளனுக்கு பரோல்கூட வழங்காத தமிழகஅரசு சிறையில் இருந்து விடுதலை செய்யும் என நம்ப முடியுமா?

•பேரறிவாளனுக்கு பரோல்கூட வழங்காத தமிழகஅரசு
சிறையில் இருந்து விடுதலை செய்யும் என நம்ப முடியுமா?
அம்மாவின் ஆட்சியை தொடருவதாக மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு பேரறிவாளனுக்கு பரோல் வழங்க மறுத்துள்ளது.
பேரறிவாளன் உட்பட ஏழுபேரையும் விடுதலை செய்வதற்குரிய சட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸடாலின் கேட்டிருந்தார்.
ஆனால் தமிழக அரசானது அவர்களை விடுதலை செய்யாதது மட்டுமன்றி அவர்களுக்கு பரோல் கூட வழங்க மறுத்துள்ளது.
ஜெயா அம்மையார் மறைவுக்கு பின்னர் பதவிக்கு வந்தவர்கள் “அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் “ என்று கூறி 7 பேரையும் விடுதலை செய்திருந்தால் மத்திய அரசுகூட எதிர்ப்பு காட்ட முடியாமல் இருந்திருக்கும்.
தமிழன் முதலமைச்சராக வந்தால் தமிழ் மக்களின் நலநன கவனிப்பார்கள் என்றார்கள். முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வமும் தமிழர்தான். ஆனால் அவரும் விடுதலை செய்யவில்லை.
அதன்பின் இப்போது முதலமைச்சாராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழர்தான். ஆனால் அவரும் விடுதலை செய்யாதது மட்டுமன்றி பரோலைக்கூட மறுத்துள்ளார்.
தமிழக பேரறிவாளனுக்கு பரோலை மறுத்தமை குறித்து பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பரோல் லீவு என்பது ஒவ்வொரு ஆயுள் தண்டனை சிறைவாசிக்கும் வழங்கப்பட்டிருக்கும் உரிமையாகும். ஒவ்வொரு வருடமும் 3 தவணையாக 60 நாட்கள் பரோலில் செல்ல முடியும்.
ஆயுள்தண்டனை பெற்றவர்கள் 3 வருடத்தின் பின் இந்த பரோல் விடுமுறையை பெற முடியும். முதல்முறை பரோலில் செல்லும்போது பொலிஸ் காவலுடன் செல்வார்கள். அதன்பின்பு எந்தவித காவலும் இன்றி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
26 வருடங்கள் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை சிறைவாசியான பெரறிவாளனும் இதன்படியே ஒரு மாதம் பரோல் விடுமுறையைக் கோரியுள்ளார்.
சிறைவிதிகளின்படி பொலிஸ் காவலுடன் பேரறிவாளனை ஒரு மாதம் பரோலில் அனுப்பியிருக்கலாம். ஆனால் தமிழக அரசு மறுத்துள்ளது.
நடிகர் சஞ்த்த சிறைவைக்கப்பட்டிருந்தபோது பலமுறை அவருக்கு பரோலில் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதில் ஒருமுறை அவர் தன் அமெரிக்க காதலியுடன் உல்லாசமாக இருக்க என்றும் காரணம் கூறப்பட்டிருக்கு.
ஆனால் பேரறிவாளன் தன் வயதான தாய் தந்தையரைப் பார்வையிடுவதற்காகவே இந்த பரோல் விடுமுறையைக் கோரியுள்ளார். ஆனால் கொஞ்சம்கூட கருணையற்ற அரசு அதனை மறுத்துள்ளது.
இந்த இரக்கமற்ற ஊழல் தமிழக அரசை இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதிப்பது? இந்த அரசை தூக்கியெறிவதாற்கான போராட்டத்தை தமிழக மக்கள் அரம்பிக்க வேண்டும்.

வென்றது, சம்பந்தர் அய்யாவின் சாணக்கியமா? தமிழ் மக்களின் போராட்டமா?

•வென்றது,
சம்பந்தர் அய்யாவின் சாணக்கியமா?
தமிழ் மக்களின் போராட்டமா?
சம்பந்தர், மாவை, சுமந்திரன் கும்பலிடம் தனிப்பட்ட நலன்களை பெற்றுக்கொள்ளும் சிலர் சம்பந்தர் அய்யாவின் சாணக்கியம் வென்றுவிட்டதாக கூறிவருகிறார்கள்.
முதலமைச்சரை நீக்குவதற்கு சம்பந்தர் அய்யாவின் கும்பல் போட்ட பலநாள் திட்டத்தை தமிழ் மக்கள் முறியடித்திருக்கிறார்கள்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு முதலமைசருக்கு எதிராக முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்கள் போராட்டத்தால் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
வென்றிருப்பது சம்பந்தர் அய்யாவின் சாணக்கியம் அல்ல. மாறாக மக்களின் போராட்டமே வென்றிருக்கிறது.
உண்மை நிலை இப்படியிருக்க கொஞ்சம்கூட கூச்சமின்றி சம்பந்தர் அய்யாவின் சாணக்கியம் வென்றது என்று சிலர் செம்பு தூக்கிறார்கள்.
அண்மையில் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலையின் கீழ் எழுதப்பட்டிருந்த “ஈழம்” என்ற சொல் இலங்கை அரசின் உத்தரவுக்கு அமைய அழிக்கப்பட்டுள்ளது.
ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர் ஆகும். இது பல நூறு வருடங்களாக தமிழ் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சொல் அகும்.
ஆனால் அச்சொல் பயங்கரவாதத்தை தோற்றுவிப்பதாக கூறி அதனை அழிக்க உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசு.
இனி அடுத்து தமிழ் மொழியே எழுதக்கூடாது என்று இலங்கை அரசால் உத்தரவு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய சம்பந்தர் அய்யாவோ அல்லது அவரது கும்பலோ வழக்கம்போல் வாய் திறக்காது மௌனமாக இருக்கிறது.
இப்படியிருப்பது சாணக்கியம் அல்ல. இது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகத்தனம் ஆகும்.
சம்பந்தர் அய்யா தனக்கு பதவி தந்தது ரணில் மற்றும் மைத்திரி என நம்புகிறார்.
அவைத் தலைவர் சிவஞானம் வடமாகாண ஆளுநர் தனக்கு பதவி தருவார் என நம்புகிறார்.
ஆனால் இவர்கள் எல்லோரும் “மக்களே பதவி தருகிறார்கள். மக்களே பதவியை பறிக்கும் வல்லமை கொண்டவர்கள்” என்ற உண்மையை உணர மறுக்கிறார்கள்.

அவைத்தலைவர் சிவஞானம் பதவி விலக வேண்டும். இல்லையேல் பதவி விலக்கப்பட வேண்டும்.

•அவைத்தலைவர் சிவஞானம்
பதவி விலக வேண்டும். இல்லையேல்
பதவி விலக்கப்பட வேண்டும்.
ஊழல் மற்றும் மோசடிகள் புரிந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தமைக்காக முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வரலாற்றில் மிகப் பெரும் கறையை தமிழ் மக்கள் மீது பூசிவிட்டார் அவைத் தலைவர் சிவஞானம்.
தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவைத் தலைவர் என்ற பதவிக்குரிய மரபையும் மீறி செயற்பட்டுள்ளார் இந்த அவைத் தலைவர் சிவஞானம்.
மக்களுக்காக எதையும் செய்யாத இந்த அவைத் தலைவர் சிவஞானம் தனக்கு அமருவதற்கு சொகுசாக இல்லை என்று கூறி இதவரை மூன்று ஆசனங்களை மாற்றியுள்ளார்.
இறுதியாக இவர் தனக்கு அமருவதற்காக வாங்கியுள்ள ஆசனத்தின் பெறுமதி 90000 ரூபா. கொஞ்சம்கூட பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொள்கிறார்.
இனியும் இவர் அவைத் தலைவர் பதவியில் தொடர அனுமதிக்க கூடாது. எனவே அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்.
இவர்மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா? அல்லது இவரும் மன்னிப்பு கேட்டுவிட்டு பதவியில் தொடரலாம் என்று கெஞ்சப் போகிறாரா?

•பொதுபலசேனாவும் இலங்கைஅரசும் சேர்ந்து நடத்தும் நாடகம்!

•பொதுபலசேனாவும் இலங்கைஅரசும் சேர்ந்து நடத்தும் நாடகம்!

அவங்களே பொலிஸ் குழு அமைத்து தேடுவாங்க
அவங்களே மறைத்து ஒளித்து வைத்திருப்பாங்க
அவங்களே பின்னர் கைதும் செய்வாங்க
அவங்களே உடன் பிணையில் விடுதலை செய்வாங்க
என்னடா நடக்குது அங்கே என்று கேட்டால்
இனவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக
சிரிக்காமல் சொல்கிறார்கள்.
வள்ளுவர் சிலையின் கீழ் ஈழம் என்ற வார்த்தையே இருக்ககூடாது என்று விரைந்து நடவடிக்கை எடுத்தவர்கள்
பொதுபலசேனாவின் இன மத வாத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கள்ளத் தோணியில் இலங்கைக்கு வந்தவர்கள் என்று பகிரங்கமாக இனவாதத்தைக் கக்கிறார் ஞானதேரர்.
இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைசர் மனோகணேசனின் அலுவலகம் சென்று மிரட்டுகின்றார் இந்த ஞானதேரர்.
ஒவ்வொரு நாளும் ஒரு கடை என்ற ரீதியில் திட்டமிட்டு முஸ்லிம் கடைகள் எரிக்கப்படுகின்றன.
திட்டமிட்டு முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் சேதமாக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு மௌனமாக இருக்கிறது.
மீண்டும் நாட்டில் ஒரு இனகலவரத்தை எற்படுத்த அரசு முனைகிறது. அதன்மூலம் தமிழ்மக்களுக்கு தீர்வு எதுவும் வழங்காமல் இழுத்தடிக்க அது முனைகிறது.

•ஒரு ஈழத் தமிழன் கருணைக் கொலை கேட்கிறான்!

•ஒரு ஈழத் தமிழன் கருணைக் கொலை கேட்கிறான்!
செய்தி- 26 வருடங்களாக இந்திய சிறையில் அடைபட்டிருக்கும் ரொபர்ட் பயஸ் என்ற ஈழத் தமிழன் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு கோரியுள்ளார்.
சகோதரா ராபட் பயஸ்!
எங்களை மன்னித்துவிடு.
நாங்கள்; தெரிவு செய்த ஒரு அமைசர் மக்களின் குடி தண்ணீரிலேயே விளையாடியுள்ளார்.
நாங்கள் தெரிவு செய்த இன்னொரு அமைசர் மக்களின் உயிர் காக்கும் மருந்து உபகரணங்களில் விளையாடியுள்ளார்.
இந்த அமைச்சரை ஒரு மாதம் விடுமுறையில் போகும்படி முதலமைசர் கேட்டவுடன் எம்.பி சாந்தி அக்கா தமிழ் தேசியத்திற்கு ஆபத்து வந்துவிட்டது என்று ஊர்வலம் போகின்றா.
பதவி ஏற்று இதுவரை எந்தப் பிரச்சனைக்கும் வாய்திறவாத இந்த எம்.பி அக்கா இப்ப ஊழல் அமைச்சருக்கு ஆதரவாக முழக்கம் போடுகின்றா.
போனஸ் எம்.பி யாக பதவி ஏற்று ஒரு வருடம்தான் ஆகியிருக்கு. ஆனால் அதற்குள்ள சொகுசு வாகனம் மூலம் 5 கோடி ரூபா சம்பாதித்து விட்டா இந்த அக்கா.
இன்னொருவர் வல்வெட்டித்துறையில் பட்டம் விட்ட அமைசர். தன்மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தவுடனே அவர் தமிழரசுக்கட்சிக்கு மாறிவிட்டார்.
அமைச்சர்கள் என்ன தவறு செய்தாலும் பரவாயில்லை. பதவியை ராஜினாமா செய்தால் போதும் என்று முதலமைச்சர் கெஞ்சுகிறார்.
“மோசடி செய்வது எங்கள் தன்னுரிமை. அதைத் தடுப்பதா?” என பொங்கியெழுந்த 22 உறுப்பினர்கள் முதலமைச்சரை நீக்கும்படி ஆளுநரிடம் கேட்டார்கள்.
தனக்கு 90000ரூபாவில் மூன்று சொகுசு ஆசனங்களை வாங்கியதைத் தவிர வேறு எதையும் இதவரை செய்யாத அவைத் தலைவர் ஆளுநரிடம் சிங்களத்தில் உரையாடுகிறார்.
பாவம் தமிழ் மக்கள். ஒருபுறம் தமது உரிமைக்காக போராடிக்கொண்டு மறுபுறம் முதலமைச்சருக்காக போராட வேண்டிய நிலை.
இதுதான் இன்றைய எமது தலைவர்களின் நிலை. எமது தலைவர்கள் தமது பதவி நலன்களைக் காப்பாற்றவே செயற்படுகிறார்கள்.
எனவே உனக்காக குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை.
நாங்கள் தெரிவு செய்த எமது தலைவர்களே உன்னைக் கைவிட்ட பிறகு தமிழக தலைவர்களை எந்த முகத்துடன் நாங்கள் கேட்பது?
மீண்டும் கேட்கிறோம். எங்களை மன்னித்துவிடு.
ஆனால் மனம் தளர்ந்துவிடாதே. தமிழக மக்கள் மீது நம்பிக்கை கொள்.அவர்கள் உன்னை நிச்சயம் விடுதலை செய்வார்கள்.
தங்கள் உயிரைக் கொடுத்து உங்களை தூக்குக்கயிற்றில் இருந்து காப்பாற்றிய செங்கொடி போன்றவர்கள் உள்ள மக்கள் அது.

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு பற்றி விசாரணை செய்ய வேண்டும்- பாராளுமன்றத்தில் சுமந்திரன் வேண்டுகோள்.

செய்தி- புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு பற்றி விசாரணை செய்ய வேண்டும்- பாராளுமன்றத்தில் சுமந்திரன் வேண்டுகோள்.
நாய் நன்றியுள்ள மிருகம்
அது இறைச்சி துண்டு போட்டால் வால் ஆட்டும்.
அது இறைச்சித் துண்டு போட்டவருக்கு விசுவாசமாக இருக்கும்.
குறிப்பு- நாய் பற்றி மேலே எழுதியவை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு பொருத்தமாக இருந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
இலவசக் கல்விக்கு ஆபத்து என்றால்
மாணவர்கள் போராடாமல்
கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா?
மகிந்த காலத்திலும் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள்.
மைத்திரி காலத்திலும் மாணவர்கள் தாக்கப்படுகின்றார்கள்
ஏனெனில் நடந்தது வெறும் முக மாற்றமே.
நடக்க வேண்டியது அமைப்பு மாற்றமே!