Wednesday, October 31, 2018

“தோழர்”

எங்கள் பெயருக்கு பின்னால் எந்த சாதிய, மத அடையாளங்களும் இல்லை.
ஆனால் எங்கள் பெயருக்கு முன்னால் அணுகுண்டைவிட வலிமையான “தோழர்” என்ற சொல் உண்டு

தமிழ்தேசிய விடுதலையை முன்னெடுப்பது மார்க்கிசிய கொள்கைக்கு முரணானதா?

தமிழ்தேசிய விடுதலையை முன்னெடுப்பது
மார்க்கிசிய கொள்கைக்கு முரணானதா?
நல்லவேளை லெனின் இப்போது உயிரோடு இல்லை.
இருந்திருந்தால் அவரையும் புலித் தேசியம் பேசுவதாக முத்திரை குத்தியிருப்பார்கள்.
“தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதன்பின்பே அவர்களை பிரிவினையை கைவிட்டு ஜக்கியத்திற்கு வருமாறு அழைக்க முடியும்” என தோழர் சண்முகதாசன் கூறினார்.
லெனின் கூறியதையே தோழர் சண்முகதாசன் கூறினார். தோழர் சண்முகதாசன் கூறியதையே நாம் கூறுகிறோம்.
ஆனால் எம்மை மட்டும் பயங்கரவாதிகள் என்றும் புலிவால் பிடிக்கும் தேசிய வெறியர்கள் என்றும் முத்திரை குத்துகின்றனர்.
சரி. அப்படியென்றால் மண்ணுக்கேத்த மார்க்சியத்தை முன்வைத்து தமிழ்தேசிய போராட்டத்தை முன்னெடுத்து காட்டுங்களேன்!
உங்கள் பின்னாடி வருவதில் எமக்கு ஒன்றும் தயக்கம் இல்லையே!

வெல்லும்வரை வீண் முயற்சி என்று கூறுவார்கள்

•வெல்லும்வரை வீண் முயற்சி என்று கூறுவார்கள்
வென்ற பின் விடாமுயற்சி என்று பாராட்டுவார்கள்!
மார்க்ஸ் மார்க்சியத்தை எழுதி வெளியிட்டபோது “இது நடைமுறைக்கு உதவாது. நூலகங்களில் அடக்கி வைப்பதற்குத்தான் லாயக்கு” என்றார்கள்.
அதன்பின் லெனின் மார்க்சியத்தை முன்வைத்து ரஸ்சிய புரட்சியை செய்தபோது “ தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை. முழு உலகப் புரட்சி செய்ய வேண்டும்” என்றார்கள்.
அப்புறம் மாசேதுங் தேசிய முதலாளிகளை உள்ளடக்கி புதிய ஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்தபோது “இது மார்க்சியத்திற்கு விரோதமானது” என்றார்கள்.
தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன் மார்க்சிய லெனிய மாசேதுங் சிந்தனையில் தமிழ்தேசிய விடுதலையை முன்வைத்து போராடிய போது அவரைப் “பயங்கரவாதி” என்றார்கள்.
இலங்கையில் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதை “புலித் தேசியம்” என்று முத்திரை குத்த முனைகின்றனர்.
இவ்வாறு வரலாறு முழுவதும் தம்மை மார்க்கியவாதிகள் எனக்கூறும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்கள் தாம் போராடாமல் இருப்பதற்கே இத்தகைய காரணங்களை கூறிவருகின்றனர்.
இவர்களுக்கு நாம் கொடுக்கும் பதில் விரைந்து வெற்றியைப் பெறுவதே!

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றால்

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றால்
பாராளுமன்ற உறுப்பினர்கள் பன்றிகள் தானே?
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார் தோழர் லெனின். அப்படியென்றால் அங்கு உள்ள எம்.பி மார் பன்றிகள்தானே?
எமது எம்.பிமாரை பன்றிகள் என்றால் அவர்களுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ ஆனால் அவர்களின் செம்புகளுக்கு வந்துவிடுகிறது.
அன்று லெனின் கூறியது உண்மைதான் என்பதை இன்று எமது எம்பி மார்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்று ஒரு எம்.பி யின் விலை 60 கோடி ரூபா என்கிறார்கள். எங்கிருந்து இந்த பணம் வருகிறது? எல்லாம் திருட்டு பணம்தானே?
இப்படி எழுதியவுடன் உடனே ஓடிவந்து நாலு லைக் வேண்டத்தான் இப்படி எழுதுவதாக கூறுவார்கள்.
இப்ப எனது கவலை என்னவென்றால் தோழர் லெனினும் நாலு லைக் வேண்டத்தான் கூறியதாக எழுதிவிடப் போகிறார்களே என்பதுதான்.
ஏனெனில் பாவம் அவர்களுக்கு லெனின் செத்துவிட்டார் என்பதுகூட தெரியாது. லெனினையும் யாரோ ஒரு முகநூல் போராளி என்றுதான் நினைப்பார்கள்.
சரி, இப்ப நான் இன்னொரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். “தேர்தல் பாதை திருடர் பாதை” என்று புரட்சியாளர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகள் திருடர்கள் என்றுதானே அர்த்தம்.
சாதாரண திருடர்களுக்கும் இந்த அரசியல் திருடர்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி இதைப் படிக்கும்பொது உங்கள் மனதில் தோன்றலாம்.
சாதாரண திருடன் எம்மை தேர்வு செய்கிறான். அரசியல் திருடனை நாம் தெரிவு செய்கிறோம். அவ்வளவே.
அதாவது எமது எந்த வீட்டில் திருடுவது என்பதை திருடனே முடிவு செய்கிறான். அரசியலில் யார் திருடவேண்டும் என்பதை நாமே வோட்டு போட்டு தெரிவு செய்கிறோம்.
அதுமட்டுமல்ல இன்னொரு முக்கிய வித்தியாசமும் உள்ளது. சாதாரண திருடனை பொலிஸ் கைது செய்யும். அரசியல் திருடனுக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கும்.
குறிப்பு- இந்த பதிவை படித்தவுடன் சிலருக்கு சுமந்திரன் நினைவுக்கு வந்தால் அதற்கு அட்மின் பொறுப்பு அல்ல.

ஒரு மீம்ஸ் மூவாயிரம் கோடி ரூபாவை தூக்கியெறிந்துவிடுமா?

ஒரு மீம்ஸ் மூவாயிரம் கோடி ரூபாவை தூக்கியெறிந்துவிடுமா?
ஆம். முடியும் என்று எமது மீம்ஸ் கிரியேட்டர்கள் நிரூபித்துள்ளார்கள்.
3000 கோடி ரூபா செலவில் பிரதமர் மோடி சர்தார் பட்டேலுக்கு சிலை நிறுவியுள்ளார்.
இதனை எதிர்த்து,
விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்யும் நிலையில் மூவாயிரம் கோடி ரூபாவுக்கு பட்டேலுக்கு சிலை வேண்டுமா என்று எழுதலாமா, அல்லது
மேக் இன் இந்தியா என்று கூறிக்கொண்டு திரியும் பிரதமர் மோடி பட்டேல் சிலையை சீனா மூலம் செய்யலாமா என்று கேட்டு எழுதலாமா, அல்லது
ராணுவத்தின் மூலம் தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கிய பட்டேலை ஒற்றுமையை ஏற்படுத்தியவர் என்று அழைப்பது நியாயமா என்று கேட்டு எழுதலாமா,
என்றெல்லாம் மண்டையை போட்டு குழப்பிக் கொண்டிருந்தவேளை ஒரு மீம்ஸ் இத்தனையையும் ஒரு படம் மூலம் கூறிவிட்டது.
மொட்டை ராஜேந்திரன் முகத்தில் பட்டேல் சிலையை வெளிப்படுத்தியதன் மூலம் மோடியின் மூவாயிரம் கோடி ரூபா திட்டத்தை தூக்கியெறிந்துவிட்டார்கள்.
இந்த படத்தை பார்த்தவுடன் ஏற்பட்ட சிரிப்பு இன்னும் அடங்கவில்லை. பாராட்டுகள்.
இப்போது புரிகிறதா அரசியல்வாதிகள் ஏன் மீம்ஸ் கிரியேட்டர்களை சிறையில் அடைக்க முனைகிறார்கள் என்று.

சம்பந்தர் ஜயா!

சம்பந்தர் ஜயா!
நீங்க மட்டும் சாகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லுங்க.
பிச்சை எடுத்தாவது பத்தாயிரம் கோடி ரூபாவில் உங்களுக்கு திருகோணமலையில சிலை வைக்கிறோம்.
சாவீர்களா ஜயா?
குறிப்பு- இது வெறும் நகைச்சுவை பதிவு அல்ல.

Tuesday, October 30, 2018

சுப்பர் சிங்கர் போட்டியில் ஒரு தமிழ் கலைஞர் வென்றார்.



முதலில் சுப்பர் சிங்கர் போட்டியில்
ஒரு தமிழ் கலைஞர் வென்றார்.
அடுத்து பிக்பாஸ் போட்டியில்
ஒரு தமிழ் பெண் வென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழர் வெல்வது
நம்பிக்கை தருகிறது! மகிழ்ச்சி!

தமிழக அரசே! தோழர் திருமுருகன்காந்தியை உடனே விடுதலை செய்!

தமிழக அரசே!
தோழர் திருமுருகன்காந்தியை
உடனே விடுதலை செய்!

முதியோர் தின வாழ்த்துகள்

முதியோர் தின வாழ்த்துகள்

செய்தி- இன்று சர்வதே சிறுவர் தினத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரி அவர்கள் கொண்டாடினார்.

செய்தி- இன்று சர்வதே சிறுவர் தினத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரி அவர்கள் கொண்டாடினார்.
குறிப்பு- தமிழ் சிறுவர்களுக்கு நியாயம் வழங்காத ஜனாதிபதிக்கு சிறுவர் தினம் கொண்டாட என்ன தகுதி இருக்கு என்று உங்கள் மனதில் கேள்வி எழுந்தால் அதற்கு அட்மின் பொறுப்பு இல்லை.

•இந்திய தூதருக்கு வாலாட்டும் யாழ்ப்பாணத்து நாய்க்குட்டிகள்!

•இந்திய தூதருக்கு வாலாட்டும்
யாழ்ப்பாணத்து நாய்க்குட்டிகள்!
பொதுவாக எஜமான் வீசி எறியும் இறைச்சித்துண்டிற்காக வாலாட்டும் நாய்க்குட்டிகள் உண்டு.
ஆனால் யாழ்ப்பாணத்தில் யாழ் இந்திய தூதரின் பெயரைக் சொன்னாலே எழுந்து நின்று வாலாட்டும் நாய்க்குட்டிகள் உண்டு.
திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோரின் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காத இந்திய தாதர் காந்தி ஜயந்தி கொண்டாடுகிறார்.
இந்த நாய்க்குட்டிகள் எந்த முகத்தோடு இந்திய தூதருடன் சேர்ந்து காந்தி ஜயந்தி கொண்டாடுகின்றனர்?
ஒருபுறம் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம் இது பற்றி எந்த அக்கறையும் இன்றி இந்த நாய்க்குட்டிகள் இந்திய தூதருக்காக காந்தி ஜயந்தி கொண்டாடுகின்றனர்.
காந்தி ஜெயந்திக்காக ஒன்று கூடும் இவர்களால் ஏன் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திறந்கு குரல் கொடுக்க முடியவில்லை?

தோழர் திருமுரகன் காந்தி விடுதலை!

•தோழர் திருமுரகன் காந்தி விடுதலை!
தோழர் திருமுருகன் காந்தி விடுதலையாகிறார் என்ற செய்தி வந்துள்ளது. மகிழ்ச்சி.
இந்த விடுதலைக்கு தமிழ் மக்களின் உணர்வுகளே காரணம். தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து இந்த விடுதலையை நிகழ்தியிருக்கிறார்கள்.
அதேபோல் மதுரை சிறையில் 1700 கடந்து வாடும் 5 தமிழ் தேச போராளிகளின் விடுதலைக்கும் குரல் கொடுப்போம்.

•இந்த ஜவருக்கும் ஏன் நீதி மறுக்கப்படுகிறது?

•இந்த ஜவருக்கும் ஏன் நீதி மறுக்கப்படுகிறது?
1700 நாட்களாக மதுரை சிறையில் ஜந்து தமிழ் தேசிய போராளிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் விசாரணையின்றி வேண்டுமென்றே தாமதமாக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி அவர்களுக்கு ஜாமீன் வழங்கவும் அரசு மறுத்து வருகின்றது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும.; இந்த ஜவருக்கும் நீதி மறுக்கப்படுகிறது.
இவர்கள் தோழர் தமிழரசன் பாதையை பின்பற்றுவதால்தான் இவர்கள் இவ்வாறு சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
தமிழ் மக்களுக்காக போராடும் இவ் ஜவருக்காகவும் தமிழ் இன உணர்வாளர்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
தமிழக அரசே!
இந்த ஜவரையும் உடனடியாக விடுதலை செய்!

யாழ் மருத்துமனையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் கருத்தை தமிழக ஆளுநர் கேட்பாரா?

•யாழ் மருத்துமனையில் கொல்லப்பட்டவர்களின்
உறவினர்களின் கருத்தை தமிழக ஆளுநர் கேட்பாரா?
அக்டோபர் 21, 1987:
முப 11 : 00 மணி – யாழ் கோட்டைப் பகுதியில் இருந்த இந்திய ராணுவம் யாழ் மருத்துவமனைப் பகுதியை நோக்கி பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும், உலங்கு வானூர்திகளில் இருந்து குண்டுத் தாக்க்குதல்களும் ஆரம்பித்தது.
முப 11 : 30 மணி – மருத்துவமனையின் வெளிமருத்துவ பீடத்தின் மீது ஏவுகணை ஒன்று வந்து வீழ்ந்தது.
பிப 13 : 00 மணி – அருகில் உள்ள சாந்தி தியேட்டர் பக்கத்தில் இந்திய இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக மருத்துவமனையில் கடமையில் இருந்த மருத்துவ அதிகாரிக்குத் தகவல் வந்தது.
பிப 13 : 30 மணி – 8ம் இலக்க கூடத்தில் ஏவுகணை ஒன்று வீழ்ந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
பிப 15 : 00 மணி – சில ஊழியர்கள் பின்பக்க வழியாக மதிய உணவுக்காக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.
பிப 16 : 00 மணி – ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தின் பக்கமாக 15 – 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதை ஊழியர்கள் கேட்டனர்.
மாலை 16 : 20 மணி முதல் – இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர். நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர்.
அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி, பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர்.
இவர்களில் மேற்பார்வையாளர், மற்றும் முதலுதவி வண்டி சாரதியும் அடங்குவர். ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கிரனேட்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
இன்னும் ஒருவரின் கூற்றுப்படி, இந்திய இராணுவத்தினர் ஊடுகதிரியல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர்.
8, இலக்க வார்டில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்தனர். இறந்து விட்டதாகத் தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர்.
இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் இடம்பெற்றன.
அக்டோபர் 22, 1987:
காலை 08 : 30 மணி – மரு. சிவபாதசுந்தரம் மேலும் மூன்று தாதிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். அவர்கள் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவர்களும் தாதிகளும். நாம் சரணடைகிறோம்,” எனக் கத்தியபடி சென்றனர்.
துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. மரு. சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டார், தாதிகள் மூவரும் கடும் காயங்களுக்குள்ளானார்கள்.
முப 11 : 00 மணி – இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் வார்டு ஒன்றினுள் நுழைந்தார். ஒரு பெண் மருத்தவர் எதிரில் எதிர்ப்பட்டார். அவர் இராணுவ அதிகாரிக்கு நிலைமையை விளக்கிய பின்னர் அவர் ஏனைய பணியாளர்களை கைகளைத் தூக்கியவாறு வெளியேறி வருமாறு கூறினார்.
அங்கு உயிருடன் இருந்த 10 பேர் வெளியேறினர். வெளியேறும் போது அவர்கள் மருத்துவர் கணேசரத்தினம் இறந்து கிடப்பதைக் கண்டனர். அன்று மாலை இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் சேகரிக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன.
கிட்லர்கூட மருத்துவமனைகள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தியது இல்லை. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அப்பாவி தமிழ் மக்களை கொன்றுள்ளனர்.
ஆனால் இங்கு ஆறுதல் தரும் விடயம் என்னவெனில் இறந்தவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் என்பதை இந்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது. ஏனெனில் வழக்கமாக இவர்களால் இறக்கும் அனைவரையும் புலிகள் என்றே கூறி வந்தனர்.
31 வருடமாகியும் இறந்த இந்த அப்பாவி மக்களுக்கு இந்திய அரசு நியாயம் வழங்கவில்லை. ஆனால் அதே மருத்துவமனை வாசலில் காந்தி சிலை வைத்து அதற்கு வருடா வருடம் மாலை அணிவிக்கின்றது.
ராஜீவ் மரண சம்பவத்தில் இறந்தவர்களின் உறவினர்களின் கருத்தை தமிழக ஆளுநர் கேட்டு வருகிறார்.
யாழ் மருத்தவமனையில் ராஜீவ் காந்தியினால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் உறவினர்களிடம் தமிழக ஆளுநர் கருத்து கேட்பாரா?

•தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் இரு பெண்கள்!

•தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் இரு பெண்கள்!
தமிழ்நாடு விடுதலைக்காக போராடிய தோழர் தமிழரசன் பொலிசாரினால் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்.
தனது ஒரே மகன் கொல்லப்பட்டபோதும் தாயார் அஞ்சி துவண்டுவிடவில்லை.
தள்ளாத வயதிலும் இன்றும் தனது மகன் முன்னெடுத்த தமிழ்தேச விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்.
அதேபோன்று தமிழரசன் பாதையில் போராடிய ஜந்து தமிழ்தேச போராளிகள் கடந்த 5 வருடமாக மதுரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்ற கருத்தரங்கில் ஜவரில் ஒருவரான காளை என்பவரின் மனைவி சரண்யாதேவி கலந்து கொண்டார்.
அவர் “ என் கணவர் தமிழ்தேச விடுதலைக்காக களமாடி சிறையில் இருப்பதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி “பெண்கள் தமிழ்தேச விடுதலை அரசியலில் தங்களை இணைத்துக்கொண்டு களமாடவேண்டிய தேவை உள்ளது” என்றும் கூறியுள்ளார்.
தமிழ் இன உணர்வாளர்களை கொன்றாலோ அல்லது சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தாலோ தமிழ் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட முடியாது என்பதை இந்த இரு பெண்களும் நிரூபிக்கின்றார்கள்.
உண்மையில் இவர்களால் தமிழ் இனம் பெருமை கொள்கிறது.
2

•“மெண்டல்” பத்மநாதன் மரணத்திற்கு யார் நியாயம் கேட்பது?

•“மெண்டல்” பத்மநாதன் மரணத்திற்கு
யார் நியாயம் கேட்பது?
யாழ்ப்பாணத்தில் நெல்லியடி என்றதும் சந்தை, இரண்டு தியேட்டர் பாடசாலை என்பன நினைவுக்கு வரும்.
1970களில் நெல்லியடியில் புளங்கியவர்களுக்கு கூடவே மெண்டல் பத்மநாதனும் நினைவுக்கு வரும்.
அவர் ஒரு மனநோயாளி. அவரை எல்லோரும் “மெண்டல் பத்மநாதன்” என்றே அழைத்தார்கள்.
அவர் எப்போதும் நெல்லியடியிலேயே இருப்பார். பசித்தால் சங்குண்ணி கடை வாசலில் போய் நிற்பார். அவர்கள் உணவு வழங்குவார்கள்.
இரவில் ஏதாவது ஒரு கடை வாசலில் படுத்து தூங்குவார். மாதத்திற்கு ஒருமுறை யாராவது முடி வெட்டி குளிக்க வார்த்து விடுவார்கள்.
அவர் மிகவும் சாதுவானவர். யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காதவர். தன்னை நடிகை சரோஜாதேவி திருமணம் செய்ததாக கூறுவார்.
நாம் பாடசாலைக்கு செல்வதற்கு பஸ்க்கு காத்துக்கொண்டிருக்கும் வேளையில் எமது அருகில் வந்து “ நதி எங்கே போகிறது கடலைத் தேடி . நான் எங்கே போகிறேன் சரோஜாதேவியை தேடி “ என்று பாடுவார்.
இந்திய ராணுவம் ஈழத்தில் இருந்தவேளை ஒருநாள் அதிகாலையில் துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டன.
யாருக்கும் எதுவும் புரியவில்லை. காலை இந்திய வானொலியில் “ “நெல்லியடியில் புலிகளின் அதி முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று செய்தி வாசிக்கப்பட்டது.
விடிந்ததும் மக்கள் நெல்லியடிக்கு சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டது மெண்டல் பத்மநாதன் என்று அறிந்து கொண்டார்கள்.
இருட்டில் தவறுதலாக சுட்டுவிட்டோம் என்று இந்திய ராணவத்தினர் கூறியிருந்தால் மக்கள் அதை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் ஒரு மனநோயாளியை சுட்டதும் அல்லாமல் அவரை புலிகளின் முக்கிய தளபதி என்று கூறியது மக்களுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது.
இலங்கை ராணுவம்கூட அவர் ஒரு மனநோயாளி என்பதை தெரிந்து அவருக்கு எதுவும் செய்யவில்லை.
ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் கொஞ்சம்கூட இரக்கமின்றி ஒரு மனநோயாளியை கொன்று விட்டார்களே என மக்கள் கவலை கொண்டனர்.
சரி. இப்ப இதை இங்கு கூறுவதற்கு என்ன காரணம்?
ராஜீவ் மரணத்தின்போது இறந்தவர்களுக்காக சிலர் நியாயம் கேட்கிறார்கள்.
அப்படியென்றால் இந்த மெண்டல் பத்மநாதன் மரணத்திற்கு யார் நியாயம் கேட்பது?
குறிப்பு- காஸ்மீரில் கொல்லப்பட்ட ஒருவரின் உடலை இந்திய ராணுவம் இழுத்துச் செல்லும் படம் கீழே உள்ளது. இந்திய ராணுவம் இறந்தவர் கொடிய பயங்கரவாதி என்கிறது. ஆனால் உண்மை அவர் ஒரு காஸ்மீர் மெண்டல் பத்மநாதனாகவும் இருக்கலாம்.
eye-crossed-out
This photo may show violent or graphic content.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
பொதுவாக ஆசிரியர்கள்
பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்
ஆனால் ஈழத்தில் ஆசிரியர்கள்
பாதுகாப்பும் கொடுப்பார்கள்.
தன் உயிர் போனாலும் பரவாயில்லை
தம் மாணவர் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்
என்று நினைக்கும் அசிரியர்களைப் பெற்றதால்தான்
எம் தமிழ் இனம் மீண்டும் கல்வியில் தலைநிமிர்கிறது.
பாடசாலை பகிஸ்கரிப்பு செய்து
பருத்தித்துறை பொலிசில் பிடிபட்டபோது
ஓடி வந்து எம்மை மீட்ட
காட்லிகல்லூரி அதிபரை மறக்க முடியுமா?
பாடசாலையில் இருந்து அப்படியே
இயக்கத்திற்கு சென்றுவிட்ட மாணவர்களின்
சயிக்கிளை எடுத்துச் சென்று வீடுகளில்
ஒப்படைத்ததோடு, பெற்றோருக்கு ஆறுதலும் கூறிய
அந்த அசிரியர்களையும் மறக்க முடியுமா?
தமிழ் ஆசிரியர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால்
தமிழ் மக்களின் போராட்டம் இந்தளவு வளர்ந்திருக்குமா?
மாதா பிதா குரு தெய்வம் என்று
பெற்றவர்களுக்கு அடுத்து
கடவுளுக்கும் மேலாக
ஆசிரியர்களை மதிப்பதும்
எம் தமிழ் இனம் மட்டுமே!