Wednesday, January 30, 2019

நான் எழுதிய “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்”

நான் எழுதிய “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” மற்றும் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல்களை பொதுமைப் பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
எதிர்வரும் 4.1.19 யன்று சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 222ல் அமைந்துள்ள பொதுமைப்புத்தக பதிப்பகத்தில் அவ் நூல்களை பெற்றுக்கொள்ளலாம்

சுமந்திரனும் அவரது குஞ்சுகளும் மன்னிக்கவும் செம்புகளும்!

•சுமந்திரனும் அவரது குஞ்சுகளும் மன்னிக்கவும் செம்புகளும்!
முதல்ல ஒரு கதை சொல்கிறேன். அப்புறம் விடயத்திற்கு வருகிறேன். அப்பதான் உங்களால் சுமந்திரன் மற்றும் அவரது செம்புகளின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
ஒரு ஊரில் ஒரு அப்பாவி விவசாயி தன் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழக் குலையை சந்தையில் விற்பதற்காக தோளில் காவிச் சென்றான்.
அவனிடமிருந்து இந்த குலையை எப்படியாவது ஏமாற்றி பறித்துவிட வேண்டும் என்று நான்கு ஐயர்கள் திட்டம் போட்டனர்.
அதன்படி முதலாவது ஐயர் அந்த விவசாயியைப் பார்த்து “என்னடாப்பா தோளில் நாயைக் காவிச் செல்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த விவசாயி “ என்ன ஐயரே கண் தெரியவில்லையா? நன்கு பாரும் நான் வாழைக்குலை கொண்டு செல்கிறேன்” என்றான்.
கொஞ்ச தூரம் சென்றதும் இரண்டாவது ஐயர் இந்த விவசாயியைப் பார்த்து “ என்னடாப்பா நாயை தூக்கி செல்கிறாய் “ என்று கேட்டார்.
இப்போது விவசாயிக்கே கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. வாழைக் குலையை தொட்டு பார்த்துவிட்டு “ இல்லையே. நான் வாழைக்குலையைத்தானே கொண்டு செல்கிறேன்” என்றான்.
இப்படியே மூன்றாவது ஐயரும் கேட்கும்போது விவசாயிக்கு பயம் வந்து விட்டது. ஒருவேளை உண்மையில் நாயைத்தான் காவிச் செல்கிறேனோ என அவன் நினைக்க தொடங்கிவிட்டான்.
இறுதியாக நான்காவது ஐயர் கேட்கும்போது அவன் வாழைக்குலையை போட்டுவிட்டு ஓடிவிட்டான்.
இது எல்லோரும் அறிந்த கதைதான். ஆனால் இதையே “ஜயர்” சுமந்திரனும் அவரது குஞ்சுகளும் மன்னிக்கவும் செம்புகளும் செய்வதை உணரமுடியாமல் இருக்கின்றனர்.
முதலில் சயந்தன் தமிழ்தேசியகூட்டமைப்பு என்பது புலிகள் போட்ட “டீல்” என்றார். பின்பு இப்போது சுமந்திரனும் அதையே வேறு வார்த்தைகளில் கூறுகின்றார்.
ஆனால் இங்கு பலரும் “டீல்” என்ற வார்த்தை பற்றியே கவனம் கொள்கின்றனர். ஆனால் “ஜனநாயக அரசியல் செய்ய புலிகள் அனுமதிக்கவில்லை” என்று சுமந்திரன் கூறிய வரியின் சூழ்ச்சியை கவனிக்க தவறிவிட்டனர்.
முதலாவது, பாராளுமன்ற பாதையில் செல்வது மட்டுமே ஜனநாயக அரசியல் என்றும் ஆயுதம் ஏந்தி போராடுவது பயங்கரவாத அரசியல் என்றும் ஒரு கருத்தை திணிக்கிறார்.
ஆயுதம் ஏந்தி போராடிய இளைஞர்களை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவாத்தனா “பயங்கரவாதிகள்” என்றார். தமிழ் தலைவர்கள் “எங்கட பொடியன்கள”; என்றனர். ஆனால் முதன் முதலில் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகதாசனே “போராளிகள்” என்று அழைத்தார்.
அதையும் அவர் வீரகேசரிக்கு அனுப்பும் அறிக்கையில் தமிழில் கூறவில்லை. மாறாக சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமிர்தலிங்கம், கொல்வின் ஆர்டி சில்வா, என் எம். பெரரா தலைவர்களுக்கு மத்தியில் சிங்கள மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறினார்.
அதுமட்டுமல்ல அதே சண்முகதாசன்; “ தமிழ் போராளிகளின் ஆயுதப் போராட்டம் சாரம்சத்தில் ஜனநாயத்திற்கான போராட்டம். அதனை நாம் ஆதரிப்பது கடமை “ என்றார்.
எனவே பாராளுமன்ற பாதையில் பயணிப்பதுதான் ஜனநாயக அரசியல். மற்றவை ஜனநாயக அரசியல் இல்லை என்ற சுமந்திரனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இரண்டாவதாக, புலிகள் பாராளுமன்ற பாதையில் பயணித்தவர்களை சுட்டது தவறு என்றால் சுடச்சொன்னவர்கள் எப்படி சரியானவர்கள் ஆவார்?
ஏனெனில் துரையப்பாவை துரோகி என்று சுடச் சொன்னது யார்? பொத்துவில் எம்.பி கனகரத்தினம் கட்சி மாறிய போது அவருக்கு இயற்கையான மரணம் வராது என்று பாராளுமன்றத்தில் பேசியவர் யார்? அமிர்தலிங்கம்தானே. அப்படியென்றால் ஜனநாயக அரசியலை செய்ய அமிர்தலிங்கம் விடவில்லை என்று சுமந்திரன் கூறுவாரா?
மேலும் புலிகள் மட்டுமல்ல ரெலோவும் தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் போன்றவர்களை சுட்டிருக்கிறது. இவர்களை சுடும்படி சொன்னது இந்திய உளவுப்படை றோ. எனவே ஜனநாயக அரசியல் செய்ய ரெலோவும் இந்திய அரசும் அனுமதிக்கவில்லை என்று ஏன் சுமந்திரன் கூறவதில்லை?
மூன்றாவதாக இலங்கை அரசும் ரவிராஜ் குமார் பொன்னம்பலம் போன்றவர்களை சுட்டிருக்கிறது. ஆனால் இலங்கை அரசு ஜனநாயக அரசியல் செய்ய விடவில்லை என்று சுமந்திரன் இதுவரை கூறியதில்லை. அது ஏன்?
இறுதியாக ஒரு சின்ன குறிப்பு. நெல்சன் மண்டலொ 26 வருடங்களாக சிறை வைக்கப்ட்டிருந்தபோது ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக ஒரு அறிக்கை விட்டால் உடனடியாக விடுதலை செய்வதாக தென்னாபிரிக்க அரசு கூறியது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவர் மனைவி வின்னி மண்டலோ மீது பல கொலைக் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனாலும் எந்தவொரு தென்னாபிரிக்கரும் நெல்சன் மண்டலோ செய்த அரசியல் ஜனநாயக அரசியல் இல்லை என்று கூறியது கிடையாது.(இன்றும் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் நெல்சன் மண்டலோ பெயர் உள்ளது)
நாளைய வரலாறு போராளிகளின் பெயரையே நினைவில் வைத்திருக்கும் சுமந்திரன்களின் பெயரை அல்ல.

•புத்தாண்டு வாழ்த்துக்கள்

•புத்தாண்டு வாழ்த்துக்கள்
2018ம் ஆண்டு முடிந்து 2019 ம் ஆண்டு பிறக்கிறது. அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மசென்ஜர் , வாட்ஸ் அப், வைபர் என பல வழிகளிலும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
ஒவ்வொரு வருடமும் பிறக்கும்போது இந்த வருடமாவது ஒரு வழி பிறக்கும் என நம்புகிறோம். ஆனால் மேலும் மேலும் நெருக்கடிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அவை நாம் தொடர்ந்தும் போராட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எமக்கு எற்படுத்துகின்றன.
நாம் வீழ்வது கேவலம் அல்ல மாறாக வீழ்ந்து கிடப்பதே கேவலம். மீண்டும் எழுந்து நிற்பதையே வரலாறு பதிவு செய்யும்.
மீண்டும் எழுந்து நிற்போம்! இதுவே இந்த வருடத்தின் வரலாற்று கடமையாக இருக்க வேண்டும்.

பலவிதமான நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன

பலவிதமான நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு நூல் பற்றிய விமர்சனங்களே இன்னொரு நூலாக வருவது இப்போதுதான் நான் அறிகிறேன்.
அதுவும் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”நூல் பற்றிய விமர்சனங்களே இன்னொரு நூலாக வந்திருக்கிறது.
நான் எழுதிய “ ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் பற்றி பலர் தங்கள் மதிப்பீடுகளையும் திறனாய்வுகளையும் செய்திருந்தார்கள்.
அதனை தோழர் தமிழ்நேயன் ஒரு நூலாக தொகுத்து பொதுமை பதிப்பகம் சார்பில் வெளியிடுகிறார்.
இவ் நூலை 04.01.19 யன்று சென்னை புத்தக கண்காட்சியில் அரங்கம் 222ல் பெற்றுக்கொள்ளலாம்.
தோழர் தமிழ்நேயனுக்கும் பொதுமை பதிப்பகத்திற்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நானும் இந்த நூலை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

•சிவா சின்னபொடியின் “ நினைவழியா வடுக்கள்”

•சிவா சின்னபொடியின் “ நினைவழியா வடுக்கள்”
கலை இலக்கியத்தின் பணி சதா சர்வகாலமும் அம்பலப்படுத்தும் வேலையை செய்து கொண்டிருப்பதுதான்.- தோழர் மாவோ சேதுங்
சிவா சின்னபொடி அவர்கள் ஏழதிய “ நினைவழியா வடுக்கள்” நூல் 1960 களில் இடம்பெற்ற சாதீய தீண்டாமைக் கொடுமைகளை நன்கு அம்பலப்படுத்தியுள்ளது.
அவர் அதனை தன் சொந்த அனுபவங்களினூடாக விபரித்துள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.
சிவா சின்னபொடி அவர்களை நான் 1985ல் தஞ்சாவூரில் சந்தித்தேன். அப்போது அவர் புளட் இயக்கத்தில் இருந்தார். ஆனாலும் அவர் புரட்சிகர அமைப்புகளுடன் உறவுகளை கொண்டிருந்தார்.
என்னை கேரளாவுக்கு அழைத்தச் சென்று அங்குள்ள நக்சலைட்டுகளுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்த சிவா சின்னபொடி அவர்களின் பங்களிப்பை என்னால் மற்க்க முடியாது.
நானும் சிவா சின்னபொடி அவர்கள் நூலில் குறிப்பிட்ட வடமராட்சிப் பிரதேசத்தை சேர்ந்தவன் என்பதால் அவர் எழுதிய தீண்டாமைக் கொடுமைகளை நன்கு அறிந்திருக்கிறேன்.
ஆனால் அக் கொடுமைகளை சிவா சின்னப்பொடி அனுபவித்திருக்கிறார் என்பதை அவரது இந்த நூலின் மூலமே அறிகிறேன்.
1960 களில் இடம்பெற்ற சாதீய தீண்டாமைக் கொடுமைகளும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் டானியல் போன்றவர்களினால் எற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக 1980 களுக்கு பின்னர் இளைஞர்களின் ஆயதப் போராட்டங்களின் போதும் அதன் பின்னரும் சாதீய மற்றும் தீண்டாமை கொடுமைகள் எந்தளவில் உள்ளன என்பது பற்றி போதிய பதிவுகள் இல்லை.
எனவே சிவா சின்னப்பொடி போன்றவர்கள் அவை குறித்து எழுத வேண்டும் என்பது என் போன்றவர்களின் விரும்பமும் வேண்டுகோளும் ஆகும்.
தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் பெற்றிருக்கும் உரிமைகள் யாவும் போராடிப் பெற்றவை என்பதையும் இனியும் போராட வேண்டும் என்பதையும் இந் நூலில் சிவா சின்னபொடி அவர்கள் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

•இந்த நாய்க்குட்டிக்கு ஆளுநர் விட்டெறிந்த இறைச்சித்துண்டு எது?

•இந்த நாய்க்குட்டிக்கு ஆளுநர் விட்டெறிந்த இறைச்சித்துண்டு எது?
எஜமானைக் கண்டதும் நாய்க்குட்டி வாலாட்டுவதும்
எஜமானைக் காணவில்லையே என நாய்க்குட்டி ஏங்குவதும்
எஜமான் விட்டெறியும் இறைச்சித் துண்டுக்காகவே என்பது யாவரும் அறிந்ததே.
மறவன்புலவு சச்சிதானந்தம் என்ற இந்த நாய் சில நாட்களுக்கு முன்னர் புத்த பிக்குவிற்கு வேட்டி உரிந்துகொடுத்து நாடகம் போட்டது
இப்போது வடமாகாண ஆளுநர் குரே விற்காக இந்துக்கள் ஏங்குவதாக அறிக்கை விடுகுது.
இந்துக்கள் சார்பாக அறிக்கை விடும் அதிகாரத்தை இந்த நாய்க்கு யார் கொடுத்தது?
சிறையில் வாடுபவர்களும் இந்துக்கள்தான்
காணாமல் போனவர்களுக்காக போராடும் உறவுகளும் இந்தக்கள் தான்
தமது சொந்த நிலத்தை கேட்டு போராடுபவர்களும் இந்துக்கள்தான்.
இந்த இந்துக்களுக்காக இதுவரை எந்த அறிக்கையும் விடாத இந்த நாய் இப்போது ஏன் ஆளுநருக்காக விடுகுது?
அப்படி ஆளுநர் என்னத்தை இந்த நாய்க்கு கொடுத்துவிட்டார்? இந்தளவு விசுவாசமாக வாலை ஆட்டுது?
இத்தனை நாளும் யாழ் இந்திய தூதருக்கு வாலாட்டிய இந்த நாய் இப்போது ஆளுநருக்கு ஏன் வாலாட்டுது?
இந்த நாய்க்கு மனைவி பிள்ளைகள் யாரும் இல்லையா? உறவினர்கள்கூட எப்படி இப்படி விட்டு வைத்திருக்கிறார்கள்? ஆச்சரியமாக இருக்கிறது!

தை பிறந்தால் வழி பிறக்கும் இந்த தாயின் துயரம் நீங்குமா?

•தை பிறந்தால் வழி பிறக்கும்
இந்த தாயின் துயரம் நீங்குமா?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நீண்டகால நம்பிக்கை.
தமிழர்களுக்கு வழி பிறக்குதோ இல்லையே இந்த தாயின் துயரத்திற்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் விருப்பம்.
ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 27 வருடங்களாக ஓய்வின்றி தன் மகன் விடுதலைக்காக இந்த தாய் நடந்து திரிகிறார்.
இந்த 27 வருட அலைச்சலில் அவர் ஒருபொழுதுகூட விரக்தி அடைந்ததில்லை. மகனின் போராட்ட உணர்வை குறைகூறியதில்லை.
அவரது ஆசை எல்லாம் தன் வாழ்வின் இந்த இறுதி வேளையிலாவது மகன் பேரறிவாளன் தன் அருகில் இருக்க வேண்டும் என்பதே.
அவர் பெயர் மட்டுமல்ல அவரது வாழ்வும் அற்புதம் தான்.

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல்,

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல், சுய உறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும்.
வெளியிலிருந்து வருகின்ற நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது. படைக்க வேண்டும்
என்ற ஆழமான உள்முனைப்பு உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.
முதலாளித்துவம் நிறைய போர்வைகளைப் போர்த்திக் கொண்டு வருகிறது.
ஜனநாயகப் போர்வை, பாராளுமன்றப் போர்வை இப்படி என்னென்ன வழிகள் இருக்கின்றதோ, அத்தனைக்குள்ளும் தன்னை ஒளித்துக் கொண்டு வருகிறது.
இந்தப் போர்வைகளையெல்லாம் நீக்கி, முதலாளித்துவத்தை அம்மணமாக்கிக் காட்டுகிற வேலைதான் புரட்சியாளர்களின் கடமையாக இருக்கிறது.

சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கம் பங்கு மறைக்கப்படுகிறதா? அல்லது மறக்கபடுகிறதா?

•சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கம் பங்கு
மறைக்கப்படுகிறதா? அல்லது மறக்கபடுகிறதா?
2.1.1982 தோழர் சுந்தரம் கொல்லப்பட்ட நாள்.
பட்டப்பகலில் மக்கள் மத்தியில் நடந்த முதலாவது சகோதரப் படுகொலை நாள்.
"புதியபாதை" சுந்தரம் யாழ் வெலிங்டன் தியேட்டருக்கு முன்னால் சித்திரா அச்சகம் அருகில் கொல்லப்பட்ட நாள்.
முகநூலில் சிலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர். சுந்தரம் நினைவு கூரப்படவேண்டிய ஒரு போராளிதான்.
ஆனால் புலிகளால் சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனரேயொழிய யாரும் சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கை குறிப்பிட வில்லை.
இது சுந்தரம் கொலையில் அமிர்தலிங்கத்தின் பங்கு மறைக்கப்படுகிறதா அல்லது மறக்கப்படுகிறதா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.
புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் வேறு இயக்கத்தில் சேர்ந்து இயங்கக் கூடாது. அவ்வாறு இயங்கினால் அது மரண தண்டனை குற்றமாகும் என்ற புலிகளின் அமைப்பு விதிக்கு அமைய சுந்தரம் கொல்லப்பட்டார் என்றே அன்று புலிகள் கூறினார்கள்.
புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பலர் இருக்கும்போது சுந்தரம் மட்டும்; எதற்காக குறி வைக்கப்பட்டார்? அதுவும் பட்டப்பகலில் மக்கள் மத்தியில் வைத்து ஏன் கொலை செய்யப்பட்டார்?
இந்த சகோதர படுகொலையை ஏன் தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கம் உடனே தலையிட்டு தடுக்க முனையவில்லை?
உண்மை என்னவெனில் இந்த சுந்தரம் படுகொலையின் சூத்திரதாரியே அந்த தலைவர் அமிர்தலிங்கம்தான்
துரையப்பா, கனகரட்ணம் போன்றவர்களை துரோகி என்று முத்திரை குத்தி இளைஞர்களால் சுட வைத்தவரும் அமிர்தலிங்கமே.
அதுபோல் "புதியபாதை" பத்திரிகையில் தன்னை தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதிய சுந்தரத்தையும் கொல்ல வைத்தவர் அமிர்தலிங்கமே.
இந்த உண்மை அன்று போராளிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டிருந்தது.
சுந்தரத்தின் படுகொலையை கண்டித்து நாகராஜா(வாத்தி) பத்மநாபா, விசுவானந்ததேவன், "டெலா" தேவன் போன்றவர்கள் ஒன்று சேர்ந்து பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள். அந்த பிரசுரத்திலும் இந்த உண்மை கூறப்பட்டீருக்கிறது.
இன்று சம்பந்தர் அய்யா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய இளைஞர்களை பயங்கரவாதிகள் என்கிறார்கள்.
ஆனால் துரோகி ஒழிப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்களே என்ற உண்மையை வரலாற்றில் இனி ஒருபோதும் மறைக்க முடியாது.

•“நரி” சம்பந்தர் அய்யாவுக்கு பதவி ஆசை இல்லையாம்!

•“நரி” சம்பந்தர் அய்யாவுக்கு பதவி ஆசை இல்லையாம்!
எட்டாப்பழம் புளிக்கும் என்பது நரிகளுக்கு மட்டுமல்ல சம்பந்தர் அய்யாவுக்கும் பொருந்தும்.
பெருந்தன்மையாக பதவியைவிட்டு விலகியிருந்தால் கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சியிருக்கும்.
அதைவிட்டு தூக்கியெறிந்த பின்பு பதவி ஆசை இல்லை என்று அறிக்கை விடுவதை யாரும் நம்ப தயாரில்லை.
பதவிக்காக சிங்ககொடி ஏந்தியவர்
பதவிக்காக மகிந்தவை தேசிய தலைவர் என்றவர்
பதவிக்காக புலிகளை பயங்கரவாதிகள் என்றவர்
பதவிக்காக ஜ.நா வில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் பெற்றுக்கொடுத்தவர்
பதவிக்காக சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றவர்
பதவிக்காக அந்த உள்ளக விசாரணையைக்கூட வலியுறுத்தாமல் கைவிட்டவர்
தனக்கு,
பதவியோடு இரண்டு சொகுசு பங்களா பெற்றவர்
பதவியோடு 6 சொகுசு வாகனங்கள் பெற்றவர்
பதவியோடு 30 சிங்கள பொலிசார் பாதுகாப்பை பெற்றவர்
தமிழ் இளைஞர்கள் வேலை கேட்டபோது “வேலை கேட்டால் அப்புறம் தீர்வு பெற முடியாமல் போய்விடும்” என்றவர்
தனது பதவிக்காக ஓடி ஓடி மைத்திரி மகிந்த ரணில் ஆகியோருடன் பேசியவர்
காணாமல் போனோர் பிரச்சனை
சிறைக் கைதிகள் விடுதலை
மீள்குடியேற்றம் போன்றவற்றுக்காக பேசவில்லை.
இப்போது பதவி பறிபோனவுடன் தனக்கு பதவி ஆசை இல்லை என்கிறார்.
நம்பிட்டோம் அய்யா? போய் வாருங்கள்!!

•தோழர்

•தோழர்
இன்று ஒருவர் “ பாலன் என்பது உங்கள் பெயர். தோழர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா? “ என்று நக்கலாக் கேட்டார்.
பாவம். அவருக்கு தோழர் என்ற சொல்லின் அர்த்தம் தெரியவில்லை.
எவ்வளதான் படித்தாலும் அதை பெயருக்கு பின்னால்தான் போட முடியும். தாய் தந்தையரின் பெயரைத்தான் இனிசியலாக பெயருக்கு முன்னால் போட முடியும்.
அத்தகைய தாய் தந்தையருக்கு இணையாக பெயருக்கு முன்னால் போடுவதூன் “தோழர்”
ஆம். எங்களிடம் அணுகுண்டைவிட வலிமையான “ தோழர்” உண்டு.
அது சரி “ தோழர்” என்ற சொல்லைக் கண்டு சிலர் ஏன் இந்தளவு பதட்டமடைகிறார்கள்?

அரங்கம் - 222 பொதுமைப் பதிப்பகத்தில்

அரங்கம் - 222 பொதுமைப் பதிப்பகத்தில் எனது “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”நூல் மற்றும் தோழர் தமிழரசன் குறித்த நூல்களை பெற்றுக் கொள்ளலாம்.
பலர் நூல்களை பெற்றுக்கொள்வதுடன் அதனை மகிழ்வுடன் எனக்கு தெரியப்படுத்தியும் வருகின்றனர். மிக்க நன்றிகள்.
தோழர் தமிழரசன் பற்றி அறிய விரும்புவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கருத்து ஒருவரைப் பற்றிக்கொள்ளும்போது அது பௌதிக சக்தியாகிறது.
தோழர் தமிழரசன் கருத்துகளை பற்றிக் கொள்வோம்!