Monday, January 30, 2023

சாமி இருக்கு என்று சொல்பவனைக்கூட

சாமி இருக்கு என்று சொல்பவனைக்கூட நம்பலாம். ஆனால் நான்தான் சாமி என்கிறவனை ஒருபோதும் நம்பக்கூடாது. சுவாமி நித்தியானந்தா மீது நடவடிக்கை எடுத்த தமிழக காவல்துறை, எத்தனையோ குற்றச்சாட்டுகள் இருக்கின்றபோதும் இந்த (ஆ)சாமி ஈஷா மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?

கலைஞர் கருணாநிதி ஊழல்

கலைஞர் கருணாநிதி ஊழல் வழக்குகளில் மாட்டுப்பட்டபோது அவருக்காக பணம் எதுவும் வாங்காமல் இலவசமாக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஈழத்தமிழ் தலைவர்களில் ஒருவரான ஜி.ஜி.பொன்னம்பலம் என்பது இன்றைய (200 ரூபா) உபிஸ் களில் எத்தனை பேருக்கு தெரியும்?

அதிசயம், ஆனால் உண்மை

அதிசயம், ஆனால் உண்மை இந்தியாவில் ஒரு அரசியல்வாதி வீட்டு மரணம் அதுவும் பிரதமர் வீட்டு மரணம் இந்தளவு எளிமையாக நடந்துள்ளது. நம்பவே முடியவில்லை.

நாயிடம் கடிபடுவதைவிட

“நாயிடம் கடிபடுவதைவிட நாய்க்கு வழி விடுவதே மேல்”- ஆபிரகாம் லிங்கன் சிவத்துரோகிகள் தமிழின துரோகிகள் என்று கூறுபவர்களுடன் விவாதிப்பதைவிட அவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதே சிறந்தது.

முதல்ல உங்க கூட்டணி

முதல்ல உங்க கூட்டணி முதல்வரை பேசச்சொல்லுங்க மேடம் அவரு கையிலதானே காவல்துறை இருக்கு. நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்க. முதல்வரைக் கேட்டால் அப்புறம் நாலு சீட்டும் 25 கோடி ரூபாவும் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சமா?

இதுவரை ஆட்சியில் இருக்காத

இதுவரை ஆட்சியில் இருக்காத சீமானிடம் கேள்வி கேட்பவர்கள், மாறி மாறி ஆட்சியில் இருந்த இவ் இருவரிடமும் இத்தனை கோடி ரூபா சொத்து வந்தது எப்படி என்று ஏன் ஒருமுறை கூட கேட்க முடியவில்லை?

சிறப்புமுகாமில் அடைத்து

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் மீது புலிகள் இயக்கத்தை கட்டமைக்க போதைப்பொருள் கடத்துகிறார்கள் என்று வழக்கு பதிவு செய்யும் மோடி அரசு, குஜராத் அதானி துறைமுகத்தில் வந்திறங்கிய போதைப் பொருள் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏனென்றால் அதானி பிரதமர் மோடியின் நண்பர் என்பதாலா?

தமிழ்த்தேசியத்திற்கு ராஜபாட்டை

தமிழ்த்தேசியத்திற்கு ராஜபாட்டை எதுவும் இல்லை. கடினமான பாதையில் பயணிக்க அஞ்சாதவர்களே அதன் ஒளிமயமான விடுதலையை அடைய முடியும்.

செம்பி

•செம்பி குத்து பாட்டு இல்லை பறந்து பறந்து சண்டை இல்லை நகைச்சுவை என்னும் பேரில் டபிள் மீனிங் வசனங்கள் இல்லை. ஆனாலும் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட ஒரு சிறுமிக்கு நீதி கிடைப்பதை விறு விறுப்பாக எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக கோவை சரளா நடிக்கவில்லை. அம்மாச்சியாக வாழ்ந்திருக்கிறார். விருது நிச்சயம்.

பிரபாகரன் மகன் மரணம் தனக்கு

பிரபாகரன் மகன் மரணம் தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று கூறியவர் இளங்கோவன். இன்று அவர் மகன் மரணத்தின் மூலம் காலம் அவருக்கு ஒரு பாடத்தை கொடுத்திருக்கிறது. இனியாவது உயிர் இழப்பின் வலியை அவர் உணரட்டும்.

வன்மையான கண்டனங்கள்

வன்மையான கண்டனங்கள் தமிழக மீனவர்களை கொடிய பயங்கரவாதிகள் போன்று சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்ற சிங்கள அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

எதிரி உன்னை பாராட்டுகிறான்

எதிரி உன்னை பாராட்டுகிறான் எனில் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம் - மாவோ செய்தி – மகிந்த ராஜபக்சா தமிழத்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

கேள்வி – வாரிசு , துணிவு எது முதல் பார்ப்பீர்கள்?

கேள்வி – வாரிசு , துணிவு எது முதல் பார்ப்பீர்கள்? என் பதில் - தமிழ் ராக்கர்ஸ் எது முதலில் ரிலீஸ் செய்கிறார்களோ அதையே முதல் பார்வையிடுவேன். கேள்வி – வாரிசு, துணிவு எந்த டிரெயிலர் டிரெண்டிங்கில் உள்ளது? என் பதில் - உண்மையை சொல்லனும்னா உதயநிதியின் வாரிசு இன்பநிதி டிரெயிலர்தான் பட்டைய கிளப்புது.

02.01.2006 யன்று திருகோணமலையில்

02.01.2006 யன்று திருகோணமலையில் சிங்கள படையால் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை மருத்துவர் மனோகரன் ஜ.நா மனித உரிமை சபையில் 15.02.2013 யன்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனாலும் இதுவரை அந்த மாணவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.

உடன்பிறப்பு – அடுத்தவன்

உடன்பிறப்பு – அடுத்தவன் (இன்பநிதியின்) படுக்கையறையை எட்டிப்பார்ப்பது தவறு. அது அறம் இல்லை புரோ அப்பாவி தமிழன் - அப்படியா? அப்ப நித்தியானந்தா சாமியின் படுக்கையறைக்குள்ள கமிராவை வைத்து அதை சன் டிவியில் ஒளிபரப்பியது என்ன? அப்ப உங்க அறம் என்ன அடைவுக்கடையிலா இருந்தது? 😂😂

சீப்பை ஒளித்து வைத்தால்

சீப்பை ஒளித்து வைத்தால் கலியாணம் நின்றுவிடாது. தமிழகம் என சொல்வதால் தமிழ்நாடு தனிநாடாக மலர்வதை தடுத்துவிட முடியாது.

சிறப்புமுகாமில் அடைத்து

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க போதைப்பொருள் கடத்துவதாக எழுதிய (200 ரூபா) உபிஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். முகத்தில் காறித் துப்ப மாட்டேன். பயப்படாமல் வரவும்.

ஊரான் வீட்டு பிள்ளைகளை

ஊரான் வீட்டு பிள்ளைகளை மொட்டை அடித்து சந்நியாசியாக்கிவிட்டு தன் பிள்ளையை காதலனுடன் கலியாணம் கட்டி வாழ வைத்திருக்கிறார் (ஆ)சாமி ஜக்கி. இவர் மீது கொலை, நில ஆக்கிரமிப்பு, கஞ்சா என பல குற்றச்சாட்டுகள் வந்தபின்பும் திராவிட முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்?

உழைப்பு தனிமனிதனுடைய

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல், சுய உறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது. படைக்க வேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பு உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும். முதலாளித்துவம் நிறைய போர்வைகளைப் போர்த்திக் கொண்டு வருகிறது. ஜனநாயகப் போர்வை, பாராளுமன்றப் போர்வை இப்படி என்னென்ன வழிகள் இருக்கின்றதோ, அத்தனைக்குள்ளும் தன்னை ஒளித்துக் கொண்டு வருகிறது. இந்தப் போர்வைகளையெல்லாம் நீக்கி, முதலாளித்துவத்தை அம்மணமாக்கிக் காட்டுகிற வேலைதான் புரட்சியாளர்களின் கடமையாக இருக்கிறது.

வரிகள் அற்ற அரசு சாத்தியமா?

•வரிகள் அற்ற அரசு சாத்தியமா? அரசு இருக்கும்வரை வரியும் இருக்கும். எனவே வரிகள் அற்ற அரசு சாத்தியம் இல்லை என்று கூறுகின்றனர். சரி. அப்படியென்றால் அரசு அற்ற ஒரு சமூகம் குறித்து சிந்தித்தால் என்ன என்று கேட்டால் அதை ஏதோ பையித்தியக்கார சிந்தனைபோல் பார்க்கின்றனர். ஆனால் காரல் மாக்ஸ் கம்யுனிச சமூகத்தில் அரசு வாடி உதிர்ந்துவிடும் என்று கூறியிருக்கிறார். எனவே அரசு அற்ற ஒரு சமூகத்தை நாம் இப்போது சிந்திக்க முடியாது என்றாலும் குறைந்த பட்சம் வரிகள் குறைவான ஒரு அரசையாவது சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்று உலகில் அதிகளவு வரி அறவிடும் நாடுகளாக பெரும்பாலும் ஜரோப்பிய நாடுகள் இருக்கின்றன. உதாரணமாக பிரிட்டனில் அறவிடப்படும் வரிகளாக இவைகள் இருக்கின்றன. List of UK Taxes • INCOME TAX • CORPORATION TAX • VALUE ADDED TAX • NATIONAL INSURANCE CONTRIBUTIONS • CAPITAL GAINS TAX • INHERITANCE TAX • BUSINESS RATES • COUNCIL TAX • STAMP DUTY • ALCOHOL DUTY • HYDROCARBON OILS DUTY • TOBACCO DUTY • CUSTOMS DUTY • PETROLEUM REVENUE TAX • MOTOR VEHICLE DUTY • AIR PASSENGER DUTY • INSURANCE PREMIUM TAX • LANDFILL TAX • OIL ROYALTY • AGRICULTURAL LEVY • CLIMATE CHANGE LEVY • AGGREGATES LEVY இவ்வாறு பல்வேறு வடிவங்களில் சுமார் 32% வரியாக மக்களிடமிருந்து அறவிடப்படுகிறது . அதாவது ஒருவர் 100 ரூபா உழைத்தால் அவரிடமிருந்து அண்ணளவாக 32ரூபாவை வரியாக அரசு பறித்துக் கொள்கிறது என்கிறார்கள். இந்தளவு வரியை அறவிடும் அரசானது இதில் எந்தளனவு பணத்தை மக்களுக்கு செலவு செய்கிறது என்பது பற்றிய விபரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. உதாரணமாக அரசானது 100 ரூபாவை மக்களுக்கு ஒதுக்கினால் இது மக்களை சென்றடைய அரசுக்கு 65 ரூபா செலவாகிறது என்கிறார்கள். எனவேதான் இந்த மலை விழுங்கி மகாதேவனாகிய அரசை இல்லாமற் செய்ய வேண்டியது பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். மக்களுக்கு அபிவிருத்தி செய்ய பணம் இல்லை என்று அரசு கூறுகிறது. மக்களுக்கு வழங்கி வந்த உதவிகளை படிப்படியாக குறைத்து வருகின்றது. ஆனால் அதேவேளை மக்களின் வரிப் பணத்தில் மகாராணியின் குடும்பத்தை அரசு பேணி வருகின்றது. எனவேதான் இனி தான் மக்களின் வரிப் பணத்தில் வாழப்போவதில்லை என்று இளவரசர் ஹரி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் வீதியில் தன் தாயுடன் படுத்து போராடும் இந்த கேப்பாப்புலவு குழந்தைக்கு அதன் சொந்த நிலம் மீண்டும் கிடைக்குமா?

40 வருடங்களாக அகதிகளாக

40 வருடங்களாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு அரசு தமக்கு எவ்வளவு நிதி ஒதுக்கிறது என்ற தகவல் அறியும் உரிமை இல்லையா? என்னே கொடுமை இது?

தமிழ்நாடு விடுதலைக்காக போராடி

தமிழ்நாடு விடுதலைக்காக போராடி உயிர் நீத்த தோழர் தமிழரசன் குறித்து நூல்கள் பொதுமை பதிப்பக அரங்கில் பெற்றுகொள்ளலாம்

தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்

• தமிழாராய்ச்சி மாநாடும் துரோகி துரையப்பாவும்! யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி நடைபெற்ற இறுதி நிகழ்வில் 11 அப்பாவி தமிழர்கள் பொலிசாரினால் கொல்லப்பட்டனர். இந்த 11 பேரின் கொலைக்கும் காரணமாக இருந்தவர் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் கைக்கூலியாக செயற்பட்ட மேயர் துரையப்பாவே. இச் சம்பவம் பல தமிழ் இளைஞர்கள் துரையப்பா மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று விரும்பினார்கள். இந்நிலையில் துரையப்பாவை “துரோகி” என்று முத்திரை குத்தி அவரை இளைஞர்கள் மூலம் கொல்ல வைத்தவர்கள் தமிழர்விடுதலைக் கூட்டணியினரே. ஆனால் இன்று அவர்களே துரையப்பாவை கொன்றது தவறு என்கிறார்கள். அதுமட்டுமல்ல துரையப்பாவை துரோகி என்றும் கூறக்கூடாது என்கிறார்கள். சரி பரவாயில்லை, என்னவாவது சொல்லிவிட்டு போங்கள். ஏனென்றால் இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாறும் காலம். ஆனால் தயவு செய்து 11 பேரையும் துரையப்பா கொன்றது சரி என்றுமட்டும் சொல்லிவிடாதீர்கள். அதை தாங்கும் சக்தி தமிழனுக்கு இல்லை.

சாரதியின் தவறுக்கு வாகனத்தை

சாரதியின் தவறுக்கு வாகனத்தை குறை கூறுவது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது சில (போலி) கம்யுனிஸ்டுகளின் தவறுக்கு கம்யுனிசத்தை குறை கூறுவது.

தேசியத்தை மறுத்துவிட்டு

தேசியத்தை மறுத்துவிட்டு சர்வதேசியத்தை அடைய முடியாது. எனவே ஒருவர் கம்யுனிஸ்டாக இருந்தால் தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக, தமிழத்தேசியத்தை மறுத்தால் அவர் ஒரு கம்யுனிஸ்டாக இருக்க முடியாது. தேசிய இனம் மற்றும் சுயநிர்ணய உரிமை குறித்து தெளிவான வரையறைகளை வகுத்து முன்வைத்தவர்கள் மாபெரும் ஆசான் லெனின் மற்றும் ஸ்டாலின். இது தெரியாமல் தமிழத்தேசியம் பேசும் சிலர் கம்யுனிசத்தை விமர்சிக்கின்றனர்.

இன்று திருச்சி சிறப்புமுகாமில்

இன்று திருச்சி சிறப்புமுகாமில் இருந்து 6 ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அதேபோல் மீதிப் பேரையும் தமிழக முதல்வர் விரைவில் விடுதலை செய்ய வேண்டும்.

நான் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்”

நான் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” என்னும் நூலை அரங்கு எண் 372ல் உள்ள பொதுமை பதிப்பகத்தில் பெற்றுக்கொள்ளலாம். 1990ல் கலைஞர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் இன்றுவரை ஈழத் தமிழ் அகதிகளை அடைத்து வைக்கும் சித்திரவதை முகாமாக இயங்கும் விபரங்களை அறியலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “சரிகமப” நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சுதர்சினி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். ஏற்கனவே லண்டனில் இருக்கும் ஈழத் தமிழரான மாதுளானி என்பவருக்கு இதே நிகழ்ச்சியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை புரிந்த

இனப்படுகொலை புரிந்த மகிந்த மற்றும் கோத்தபாயா ராஜபக்சாவுக்கு கனடிய அரசு பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இதேபோல் இந்திய அரசும் தடை விதிக்க தமிழக திராவிட முதல்வர் வலியுறுத்துவாரா?

கனடாவில் வெறும் மூன்று லட்சம்

கனடாவில் வெறும் மூன்று லட்சம் தமிழர்களே இருக்கின்றனர். ஆனாலும் அவர்களின் உணர்வுகளுக்கு கனடா அரசு மதிப்பளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர் இருக்கின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு இந்திய அரசு ஏன் மதிப்பளிப்பதில்லை?

ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்

ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கோருகிறார். ஆளுநருக்கு எதிராக தனது எம்எல்.ஏ யாரும் பேசக்கூடாது என்கிறார் திராவிட முதல்வர். இப்போது தெரிகிறதா தமிழ்த்தேசியம் மட்டுமே ஆரியத்தை எதிர்த்து உறுதியாக நிற்கும் என்பது.

சிங்கம் நீண்ட உறக்கத்தில்

சிங்கம் நீண்ட உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு விட்டது. அண்மையில் ஏதும் தேர்தல் வரப்போகிறதா? சரணடைந்தவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்று தனக்கு தெரியும் என்று அண்மையில் கூறியவர், இப்போது சரணடைந்த எழிலனை ஆஜர் படுத்த வேண்டும் என்று அறிக்கை விடுகிறார். அது எப்படி? பாவம் தமிழ் மக்கள், இன்னும் என்னென்ன எல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டுமோ?

தமிழரசன் புதைக்கப்படவில்லை.

தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளார். அவர் ஆயிரம் ஆயிரம் தமிழரசன்களாக முளைத்தெழுகிறார். அவர் விரும்பிய தமிழத்தேசிய விடுதலை விரைவில் நிறைவேறும். இது நிச்சயம்.

இது தல பொங்கலும் இல்லை.

இது தல பொங்கலும் இல்லை. தளபதி பொங்கலும் இல்லை. இது தமிழ்ரக்கர்ஸ் பொங்கல். அந்தளவுக்கு துணிவு வாரிசு இரண்டும் சிறந்த கொப்பி ரிலீஸ் செய்து அசத்தியுள்ளனர். மற்றும்படி, வாரிசைவிட துணிவு நன்றாக இருக்கிறது. அஜித் இன்னொரு மங்காத்தா ஆடியிருக்கிறார்.

இனப்படுகொலை செய்த சிங்கள

இனப்படுகொலை செய்த சிங்கள அரசை கியூப அரசு ஆதரிப்பதை யாராவது ஒரு தமிழ் இன உணர்வாளர் சே யின் மகளுக்கு சுட்டிக்காட்டி அவர் பதில் என்ன என்பதை அறிய முடியுமா?

இந்தியா என்ற சொல் 300 வருடங்களுக்கு முன்னர்தான் வந்தது.

இந்தியா என்ற சொல் 300 வருடங்களுக்கு முன்னர்தான் வந்தது. ஆனால் தமிழ்நாடு என்பது 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே உள்ளது. தமிழ்நாடு வேண்டாம் என்று கூற கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியனுக்கு என்ன உரிமை இருக்கு? இது திராவிட நாடு என்றும் பெரியார் மண் என்றும் கூறிவந்தவர்கள் இப்போது ஆளுநர் தமிழகம் என்றதும் வேறு வழியின்றி தமிழ்நாடு என்று முழங்க ஆரம்பித்துள்ளனர். இனியாவது இது தமிழ்நாடு, தமிழர் மண் என்று உரத்து கூறட்டும்.

சுமந்திரன் சேர் “அல்வா” கொடுக்கிறாரா?

சுமந்திரன் சேர் “அல்வா” கொடுக்கிறாரா? சுமந்திரன் கேட்டால் ஸ்டாலின் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்வார். ஆனால் ஏனோ சுமந்திரன் ஒருபோதும் கேட்பதில்லை. சுமந்திரன் கேட்காமலே ஸ்டாலின் அகதிகளை விடுதலை செய்ய முடியும். ஆனால் ஏனோ ஸ்டாலின் அகதிகளை விடுதலை செய்வதில்லை. ஆனால் இருவரும் சேர்ந்து அயலக தமிழர் தினம் கொண்டாடுகிறார்கள் ?

எல்லா ஆசைகளையும் துறந்தவர் புத்தர்.

எல்லா ஆசைகளையும் துறந்தவர் புத்தர். ஆனால் இந்த சிங்கள புத்த பிக்குகளால் லாட்டரி ரிக்கட்டைக்கூட துறக்க முடியவில்லை. பாவம் புத்தர்!

15 நாட்களில் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு

15 நாட்களில் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் இரண்டரை வருடங்களுக்கு மேலாக கர்நாடக அரசு அடைத்து வைத்திருக்கிறது. தமிழ்நாடு சென்று திராவிட முதல்வருடன் சேர்ந்து அயலக தமிழர் தினம் கொண்டாடும் சுமந்திரன், மனோ கணேசன் போன்றவர்கள் இவ் அப்பாவிகளின் விடுதலைக்கு குரல் கொடுப்பார்களா?

சுமந்திரன் சேர்!

சுமந்திரன் சேர்! 2009ல் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது உங்கள் அண்ணர் என்ன கோமாவில் இருந்தாரா? ஸ்டாலின் காலை நக்குவது என்று முடிவு எடுத்தால் தாராளமாக நக்கவும். ஆனால் தமிழருக்கு எரிச்சல் தார வசனங்கள் பேச வேண்டாம் பிளீஸ்.

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். உழவர் மக்களின் உன்னத நாளாம் உழைக்கும் மக்களின் உரிமை நாளாம் தமிழ் மக்களின் புத்தாண்டு நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்!

நான் எழுதிய “ஒரு ஈழப் போராளியின்

நான் எழுதிய “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் பற்றிய திறனாய்வுகள் கொண்ட நூல் அரங்கு எண் 272ல் அமைந்துள்ள களம் வெளியீட்டகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இதில் தோழர் தமிழரசனுடன் பழகிய ஈழத் தோழர்கள் பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் இந்தி திணிப்பு

தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும். ஏனெனில் இந்தி திணிப்பு என்பது இன்று தமிழகத்தை தாண்டி ஈழத்திற்கும் வந்துவிட்டது.

கலைஞர் தத்தெடுத்து வளர்த்த

கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அந்த அகதிச் சிறுவன் மணி இந்த படத்தில் ஏன் இல்லை? அந்த அப்பாவி சிறுவன் எங்கே என்பதையாவது யாராவது திராவிட முதல்வரிடம் கேட்டுச் சொல்ல மாட்டீர்களா?

தோழர் ஜீவாவை நினைவுகூரும்

தோழர் ஜீவாவை நினைவுகூரும் இன்றைய கம்யுனிஸ்டுகள் ஜீவா முன்வைத்த தமிழத்தேசிய இனத்திற்கான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை இன்று முன்வைக்க தயாரா? அல்லது குறைந்தபட்சம் அதை முன்வைத்து போராடும் தமிழத்தேசியவாதிகளை “பாசிட்டுக்கள்” என்று அழைப்பதையாவது நிறுத்துவார்களா?

எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோன

எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோன பின்பும் எதிர்க்கட்சி தலைவருக்குரிய பங்களாவை கேட்டு வாங்கி அதில் வாழ்ந்துவரும் சம்பந்தர் ஐயா, தனது சொந்த நிலத்தை கேட்டு வீதியில் படுத்து போராடும் இந்த கேப்பாபுலவு குழந்தைக்கு அதன் நிலத்தை ஏன் கேட்டு வாங்கிக் கொடுக்க முடியவில்லை

இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி

இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேலாக வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தலைமீது எப்படி 58 பில்லியன் டாலர் கடன் வந்தது? பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 3 லட்சம் ரூபா கடனுடன் பிறக்கிறது என்கிறீர்களே, அப்படியென்றால் அந்த பணம் எல்லாம் எங்கேயடா போயிற்று?

இந்திய தூதரும் ஆறு வெங்காயங்களும்

• இந்திய தூதரும் ஆறு வெங்காயங்களும் கடந்த வருடம் இதே காலப் பகுதியில் இந்த ஆறு வெங்காயங்களும் மன்னிக்கவும் தலைவர்களும் இந்திய தூதரின் பேச்சைக் கேட்டு தீர்வு 13 ஐ வலியுறுத்தி இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள். அப்புறம் அதே இந்திய தூதர் கேட்டுக் கொண்டதற்கிணங்க யாழ்ப்பாணத்தில் ஊடக கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதில் தீர்வு 13க்கு எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டனர். ஒரு வருடமாகிவிட்டது. இன்னும் இவர்களின் கடிதத்திற்கு இந்திய பிரதமர் பதில் அளிக்கவில்லை. இது குறித்து இவர்கள் இந்திய பிரதமர் மீதோ அல்லது தம்மை தூண்டி விட்ட இந்திய தூதர் மீதோ கோபம் கொள்ளவில்லை. மாறாக தமிழத்தேசிய கூட்டமைப்பை உடைத்துவிட்டனர். இனி இன்னொரு கூட்டமைப்பை உருவாக்கப் போகிறார்களாம். இந்திய தூதரின் பேச்சைக்கேட்டு இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதுவதற்கு இவர்களுக்கு எதற்கு கூட்டமைப்பு?

எதற்காக நம்மவர்கள் சிங்கள படைத் தளபதிகளை

எதற்காக நம்மவர்கள் சிங்கள படைத் தளபதிகளை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள்? அவர்களை அழைத்துத்தான் விழா நடத்த வேண்டும் என்று ஏதும் கட்டாயம் அல்லது நிர்ப்பந்தம் இருக்கிறதா? ஒருபுறம் கனடா உட்பட பல நாடுகள் போர்க்குற்றம் செய்த தளபதிகளுக்கு தடை விதிக்கிறது. மறுபுறம் நம்மவர்களே அவ் இனப்படுகொலை செய்த தளபதிகளை அழைத்து விழா நடத்தினால் அதனை எப்படி புரிந்துகொள்வது?

மாவை சேனாதிராசா மட்டுமல்ல

மாவை சேனாதிராசா மட்டுமல்ல அவர் வீட்டு மதில்களும் உயரமானவை ஊரான் வீட்டு பிள்ளைகளை இயக்கத்திற்கு பிடித்து அனுப்பிவிட்டு தன் பிள்ளைகளை இந்தியா அனுப்பி படிக்க வைத்தவர். பாதுகாப்பு வலயத்தில் இருந்த தன் வீட்டை மீட்டு அதற்கு உயரமான மதில்களையும் கட்டிய அவரால் கேப்பாப்புலவில் தன் சொந்த நிலத்தை கேட்டு வீதியில் படுத்து போராடும் குழந்தைக்கு அதன் நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

ஒருபுறம் ஓட்டு போட்ட மக்கள் போராடுகின்றனர்

ஒருபுறம் ஓட்டு போட்ட மக்கள் போராடுகின்றனர் மறுபுறம் பதவி பெற்ற தலைவாகள் நீண்ட உறக்கத்தில் இருக்கின்றனர். எந்தவொரு நீண்ட இரவுக்கும் விடிவு உண்டு தமிழரின் இந்த துயரத்திற்கு ஒரு முடிவு கிட்டாதோ?

தன் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில்

தன் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் படிக்க வேண்டும் என்பதற்காக நல்லூரில் புது வீடு வாங்கிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் அவர் பிள்ளைகளும் அவருக்கு ஓட்டுப்போட்டுவிட்டு தம் சொந்த நிலத்தை கேட்டு வீதியில் படுத்து போராடும் கேப்பாப்புலவு தாயும் அவர் மகனும்

75 வயதான மன்னர் சார்ல்ஸ்

75 வயதான மன்னர் சார்ல்ஸ் தன் கையால் தனக்கு குடை பிடிக்கிறார். ஆனால் நம் தலைவர்களுக்கு தம் கையால் தமக்கு குடை பிடிக்க முடியவில்லை. இவர்களுக்கு குடை பிடிக்கவே இன்னொருவர் தேவைப்படுகிறது. அப்படி என்னதான் கிழித்து தள்ளுகிறார்கள்?

செய்தி- 1

செய்தி- 1 சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையான பின்னரே நான் எனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வேன் என பல வருடங்களாக அரசியல் கைதியாக இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட ரகுபதி சர்மா தெரிவித்துள்ளளார். செய்தி - 2 சின்னம் தரவில்லை என விக்னேசுவரன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார். இதில் யார் தமிழ் மக்களுக்கானவர்?

தோழர் தென்தமிழன்- 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தோழர் தென்தமிழன்- 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி 25 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடும் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. வெளியில் சிகிச்சை பெறவும் பரோல் விடுதலை அளிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் தோழர் தமிழரசன் அரசியலை ஏற்று தமிழ்நாடு விடுதலைக்கு பயணித்ததே காரணம்.

என்னது, பிக்பாஸில்

என்னது, பிக்பாஸில் விக்ரமன் வெற்றி பெற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி கேட்கிறாரா? அடேய், இது ரொம்பவும் ஓவரடா! 😂😂

மாபெரும் ஆசான் தோழர் லெனின் நினைவுதினம்

மாபெரும் ஆசான் தோழர் லெனின் நினைவுதினம் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. சோவியத் ரசியா அன்றைய தினம் மயான அமைதியில் கழிந்தது. ஒவ்வொரு வீடும் இழவு வீடு போல காட்சியளித்தது. பெரியவர்களும், குழந்தைகளும் அழுது தீர்த்தனர். பெண்கள் ஒப்பாரி வைத்தனர். ஆண்கள் கனத்த இதயத்துடன் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். கடுமையான குளிர் வாட்டியது. வீதிகள் பனிப் பாளங்களால் மூடப்பட்டிருந்தன. சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது

வீரமணி - மேடம்! பெரியார் இல்லை

வீரமணி - மேடம்! பெரியார் இல்லை என்றால் உங்க அப்பா சேகுவாரா ஆஜென்டீனாவில் மருத்துவம் படித்திருக்க முடியாது. சே யின் மகள் - பெரியாரா? அதெப்படி? வீரமணி - பெரியார்தான் உலகின் மூத்தகுடி தமிழருக்கு கல்வி அறிவு தந்தவர் என்று இங்கே பல காலமாக கூறிவருகிறோம். அதை மக்களும் இத்தனை காலமாக நம்பி வருகிறார்கள். யாரும் அதெப்படி என்று திருப்பி கேட்டதில்லை. சே யின் மகள் - அப்ப சங்க இலக்கியம் படைத்த புலவர்கள் எல்லாம் படிக்காமலா படைத்தார்கள்? வீரமணி – அப்படியெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. இங்கே இதுவரை யாரும் அப்படி கேட்டதில்லை. அதுமட்டுமல்ல கியூப மொழி காட்டுமிராண்டி மொழி என்று நீங்கள் கூறவேண்டும். சே யின் மகள் - யோவ் அப்படி சொன்னால் எங்க நாட்டில உதைப்பாங்கள். வீரமணி – தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று இங்கே கூறி வருகிறோம். ஆனால் எந்த தமிழனும் இதுவரை எம்மை உதைக்கவில்லையே? சேயின் மகள் - ??????

சீமான் “தமிழ்நாடு” என்றபோது

சீமான் “தமிழ்நாடு” என்றபோது அவரை இனவெறியர் என்றவர்கள் கியூபாவில் இருந்து வந்த சேகுவாராவின் மகள் கூறியதும் “தமிழ்நாடு” என்று உரத்து முழங்குகிறார்கள். அது சரி, நாம் “தமிழீழம்” என்று உரத்து முழங்கினால் அதை சேயின் மகளும் இந்த கம்யுனிஸ்டுகளும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?

செய்தி – ஜனாதிபதி ரணிலை சம்பந்தர் ஐயாவும்

செய்தி – ஜனாதிபதி ரணிலை சம்பந்தர் ஐயாவும் சுமந்திரன் சேரும் சந்தித்தனர். ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் ரணில் பல உறுதி மொழிகளை வழங்கியுள்ளதாக சுமந்திரன் சேர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு தமிழத் தலைவர்களை

இந்திய அரசு தமிழத் தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் தமிழ் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது. சில தருணங்களில் துப்பாக்கிகளைவிட செருப்பை சிறந்த ஆயுதமாக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தன் மகன் விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு

தன் மகன் விடுதலைக்காக குரல் கொடுக்குமாறு முருகனின் தாயார் சம்பந்தர் ஐயாவிடம் மனுக் கொடுத்தும் ஐயா இதுவரை குரல் கொடுக்கவில்லை. சிறையில் இருந்து விடுவித்து இன்னொரு சிறையான சிறப்புமுகாமில் தற்போது முருகனை அடைத்து வைத்துள்ளார்கள். இப்பவும்கூட குரல் கொடுக்க சம்பந்தர் மறுக்கிறாரே?

இவர் சிங்கள இனத்தவர்.

இவர் சிங்கள இனத்தவர். தன் கணவர் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடந்த 13ஆண்டுகளாக தேடி வருகிறார் அவருக்கு நீதி கிடைக்காமையால் கடந்த வருடம் கோவிலில் தன்முடியை காணிக்கை கொடுத்து கடவுளிடம் வேண்டியுள்ளார் ஒரு சிங்களவருக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழ்மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் ?

விரும்பியிருந்தால் பாமக போல்

விரும்பியிருந்தால் பாமக போல் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க முடியும் ஆனால் பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணிக்காக மற்ற கட்சிகளின் அலுவலகங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கையில் தனித்து போட்டியிடுவோம் என தைரியமாக அறிவித்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. வரவேற்கத்தக்கது. மக்களை சந்திக்க அஞ்சாத தலைவரே மக்களுக்கு தலைமை தாங்க தகுதியுடையவர்.

ஏற்கனவே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்

ஏற்கனவே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் மட்டுமன்றி, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வெற்றியாளருக்காக நடத்தப்படுகின்ற நிகழ்ச்சியே "பிக்பாஸ் " இது நன்கு தெரிந்தும் திருமா ஏன் விக்ரமனுக்காக அறிக்கை விட்டார் என்று புரியவில்லை. அறம் வெல்லவில்லை – மாறாக , வழக்கம்போல விஜய் டிவி வியாபாரம் வென்றது.

ஒரு சிறுவன் செத்திட்டான்

ஒரு சிறுவன் செத்திட்டான் என்று செய்தி வந்தது. அது பிரபாகரன் மகன் என்று அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்- இளங்கோவன் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் தோல்வி என்று செய்தி வந்தது. அது இளங்கோவன் என்று அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தோம்- ஈழத் தமிழர் 2009ற்கு பின்னர் இதுவரை இளங்கோவன் வெற்றி பெற்றதில்லை. இம்முறையும் அவர் வெற்றி பெறவில்லை என்ற செய்தி வரவேண்டும். இப்படியொரு செய்தியை ஈரோடு மக்கள் தர வேண்டும்.

சிறைச்சாலை ஒரு சிறந்த பல்கலைக்கழகம்

சிறைச்சாலை ஒரு சிறந்த பல்கலைக்கழகம் என்பார்கள் நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை நிறைய நூல்கள் படிப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தது அங்கிருந்த நூலகமே. சிறைவாசிகள் பலருக்கு சிறையினுள் ஒரு நூலகம் இருப்பதும் அதற்கு பொறுப்பாக ஒருவர் இருக்கிறார் என்பதும் தெரியாது. ஆச்சரியம் என்னவெனில் வெளியே நான் தேடிய பல கம்யுனிஸ்ட் நூல்கள்கூட அந்த நூலகத்தில் இருந்தன. என்னுடைய படிக்கும் ஆர்வத்தைக் கண்ட அந்த நூலகப் பொறுப்பாளர் சில நல்ல நூல்கள் வெளியில் இருந்தும் கொண்டு வந்து தந்து உதவினார். தயவு செய்து சிறைச்சாலைக்கு நிறைய நூல்களை அன்பளிப்பு செய்யுங்கள்.

டைட்டில் கிட்டாது போயிருக்கலாம்.

டைட்டில் கிட்டாது போயிருக்கலாம். ஆனால் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார் அதனால் மற்றவர்களுக்கு கிடைக்காத விஜய் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. வீட்டிற்கு திரும்பிபோக முடியாத அளவிற்கு பிஸியாகிவிட்டார். உண்மையில் பிக்பாஸ் வின்னர் ஜனனிதான். வாழ்த்துக்கள்.

கடந்த வருடம் இதே நாளில் “கம்பவாணர் அருணகிரிநாதர்”

கடந்த வருடம் இதே நாளில் “கம்பவாணர் அருணகிரிநாதர்” என்னும் பட்டம் சுமந்திரனுக்கு வழங்கப்பட்டது அதென்ன “கம்பவாணர் அருணகிரிநாதர்” ? அப்படியென்றால் “தரம் மிக்க போராளி” என்று பொருளாம் அது சரி சுமந்திரன் சேர் செய்த போராட்டம் என்ன? யாராவது அவரின் தம்பிகள் கூறுவார்களா?

அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம்

அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக கூறிவருபவர்கள் இன்று தவிர்க்க முடியாமல் ஆயுத வழியில் போராடிய சுபாஷ் சந்திரபோசை நினைவு கூர்ந்துள்ளனர் ஒருபுறம் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை வன்முறையாளர்கள் என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் ஆயுதம் ஏந்திப் போராடியவரை நினைவு கூர்வது எதற்காக?

சீமான் திருப்பி அடிப்பாரா இல்லையா

சீமான் திருப்பி அடிப்பாரா இல்லையா என்பது முக்கியம் இல்லை. திருப்பி அடிக்க வேண்டும் என்ற கருத்தை பல்லாயிரம் தமிழ் இளைஞர் மத்தியில் விதைக்கிறார். இதுதான் ஆரியத்திற்கு மட்டுமல்ல திராவிடத்திற்கும் பெரும் அச்சத்தைக் கொடுக்கிறது.

ஒரு கன்னட நடிகர் தமிழ் இளைஞர்களை

ஒரு கன்னட நடிகர் தமிழ் இளைஞர்களை தன் காலில் விழ வைப்பதை பார்க்கும்போது, ஒரு கன்னட நடிகரை தன் அருகில் கைகட்டி அமர வைத்த தமிழன் வீரப்பன் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. வீரப்பன் ஏன் கொல்லப்பட்டார் என்று இப்போது புரிகிறது.

ஒருபுறம் சிறுவன் பாலச்சந்திரனுக்கு

ஒருபுறம் சிறுவன் பாலச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்துகிறார். மறுபுறம் அச் சிறுவன் இறந்தது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறிய இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இவரின் உண்மை முகம் எது?

செய்தி – சிறுவன் பாலச்சந்திரன் மரணம்

செய்தி – சிறுவன் பாலச்சந்திரன் மரணம் அறிந்து மகிழ்ச்சி அடைந்த காங்கிரஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் திருமா தமிழர்கள் வீரத்தால் வீழ்த்தப்பட்டதைவிட துரோகத்தால் அழிக்கப்பட்டதே அதிகம்.

கேள்வி – சிறப்புமுகாம் மூடப்படுமா?

கேள்வி – சிறப்புமுகாம் மூடப்படுமா? ஸ்டாலின் - அகதிகளுக்கு 308 கோடி ரூபா வழங்கப்படும் கேள்வி – சிறப்புமுகாம் மூடப்படுமா? ஸ்டாலின் - அகதிமுகாம் மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் கேள்வி – சிறப்புமுகாம் மூடப்படுமா? ஸ்டாலின் - ஈழத் தமிழர் நலன் காக்கப்படும். கேள்வி –யோவ் நீ என்ன லூசா?

மய்யம் கரை ஒதுங்கிவிட்டது!

மய்யம் கரை ஒதுங்கிவிட்டது! திமுக கூட்டணி இளங்கோவனுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கியதன் மூலம் , ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் தார்மீக தகுதியை கமல் இழந்துவிட்டார். பாவம் இவரை நம்பிய இளைஞர்கள்.

தொல்காப்பியம் குறித்து

தொல்காப்பியம் குறித்து இன்று தமிழ் இனம் பெருமை கொள்கிறது எனில் அதற்கு முக்கிய காரணம் ஈழத்தில் இருந்து வந்த அறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளை. ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்று கூச்சல்போடும் 200 ரூபா உ.பி களுக்கு இந்த வரலாறு தெரியுமா?

கடவுள்

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் வைன்ஷொப்பில் இருக்கமாட்டாரா என்ன? 😂😂

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த அகதி இளைஞனுக்கு வழி பிறக்குமா?

திராவிடர் கழகம் 1944 ல் தொடங்கப்படுகிறது.

திராவிடர் கழகம் 1944 ல் தொடங்கப்படுகிறது. திமுக 1949 ல் தொடங்கப்படுகிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1938 ல் ஈழத்து சிவானந்த அடிகளால் தொடங்கப்படுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வைத்து பதவியை அனுபவிக்கும் திமுக உபிஸ் கூறுகிறார்கள் “ ஈழத்தமிழர் தமிழக அரசியல் பேசக்கூடாதாம்” என்னே கொடுமை இது தமிழனுக்கு?

எந்தவித பொலிஸ் பாதுகாப்பும்

எந்தவித பொலிஸ் பாதுகாப்பும் இன்றி சுமந்திரன் சுதந்திரமாக திரிகிறார் ஆனால் அவரை கொல்ல முயன்றதாக 20 க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர் அவர்கள் சிறையில் சித்திரவதை அனுபவிப்பது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் அவர்கள் இன்றி குடும்பங்கள் கஸ்டப்படுகின்றன

தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா – தோழர் தமிழரசன்

தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா – தோழர் தமிழரசன்

சிறை விதிகள் சிறைவாவாசிகளின்

சிறை விதிகள் சிறைவாவாசிகளின் உரிமைகள் சலுகைகள் அடங்கிய “ஜெயில் மனுவல்” என்னும் புத்தகத்தை ஜெயில் சுப்பிரண்டனிடம் வாங்கி படித்த முதல் சிறைவாசி பழனிபாபாதான். ஜெயில் மனுவலை படித்து விபரங்களை சக கைதிகளுக்கு கூறி இன்று கைதிகள் அனுபவிக்கும் உரிமைகள் சலுகைகள் பலவற்றுக்கு அவரே காரணம்.

காங்கிரசையும் திமுகவையும்

காங்கிரசையும் திமுகவையும் எதிர்த்து நீ உன் உயிரை விட்டாய். உன் உடலை தூக்கி சுமந்தவர்கள் இப்போது அதே காங்கிரசையும் திமுகவையும் தூக்கி சுமக்க ஆரம்பித்து விட்டார்கள். மன்னித்துவிடு முத்துக்குமாரா, உன்னை நினைவு கூரக்கூட எமக்கு நேரம் இல்லை. 29.01.2022 முத்துக்குமாரின் நினைவு தினம்

இதைத்தானே இத்தனை நாளும் சீமான் சொல்லி வந்தார்

இதைத்தானே இத்தனை நாளும் சீமான் சொல்லி வந்தார். சீமான் சொன்னபோது அவரை “இனவெறியர்” என்றார்கள். இப்போது அவர்களே சொல்ல ஆரம்பித்துள்ளனர். இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?

பிஜேபி வரப்போகுது என்று திமுக கூட்டணிக்கு

பிஜேபி வரப்போகுது என்று திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த அந்த 32 அமைப்புகளும் இதற்கு எப்படி முட்டுக் கொடுக்கப்போகின்றன? ஐ ஆம் வெயிட்டிங். அவங்க மானஸ்தர்களாச்சே! ஒருவேளை இந் நேரம் தூக்கில தொங்கியிருப்பாங்களோ?

எம்.ஜி.ஆர் மது புகை பழக்கம் எதுவும் இல்லை

எம்.ஜி.ஆர் மது புகை பழக்கம் எதுவும் இல்லை. தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்வாராம். ஆனாலும் நோய்வாய்ப்பட்டு 70 வயதில் மரணமடைந்தார். கலைஞர் மது புகை இறைச்சி மட்டுமல்ல மாது பழக்கமும் உண்டு. ஆனாலும் 95 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார். ரஜனி பதில் பிளீஸ்!

1997ம் ஆண்டு திண்டுக்கல் முதன்மை நீதிமன்றத்தில்

1997ம் ஆண்டு திண்டுக்கல் முதன்மை நீதிமன்றத்தில் கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கு விசாரணை நடைபெறுகிறது. பொலிஸ் காவலுடன் அழைத்து வரப்பட்ட என்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள். இன்னொருவருக்காக ஆஜராக சென்னையில் இருந்து வந்திருந்த வழக்கறிஞர் சந்திரசேகரிடம் என்னைக்காட்டி ஒரு ஈழத் தமிழர் என்று கூறப்படுகிறது. ஒரு ஈழத் தமிழர் என்ற அந்த ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் உடனே எழுந்து என் அருகில் வந்தார். வந்தவர் என் கைகளைப் பற்றிக்கொண்டு உங்களுக்கு யாரும் வழக்கறிஞர் இருக்காரா? இல்லை என்றால் நான் உங்களுக்காக வாதாடுகிறேன்.பணம் எதுவும் தர தேவையில்லை என்றார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர். மிகவும் பிசியான வழக்கறிஞர். இருந்தும் எனக்காக வழக்காட முன்வந்தது அவருடைய ஈழத் தமிழர் மீதான பற்றைக் காட்டியது. இதை இங்கு நான் எழுதுவதற்கு காரணம் நேற்று கிளப்கவுசில் ஒரு கனடா வாழ் ஈழத் தமிழர் இவரை ஈழத் தமிழருக்கு விரோதமானவர் என்று கூறிக்கொண்டிருந்தார். ஒருவரைப் பற்றி தாராளமாக விமர்சிக்கலாம். அது தவறு இல்லை. ஆனால் அவரைப் பற்றி நன்கு அறிந்துவிட்டு அதைச் செய்ய வேண்டும்.

செய்தி – வீரமணி மீது யாராவது கை வைச்சால் வெட்டுவேன் - டி.ஆர்.பாலு

செய்தி – வீரமணி மீது யாராவது கை வைச்சால் வெட்டுவேன் - டி.ஆர்.பாலு கை வைச்சவன் மகிந்த ராஜபக்சா என்று சொல்லிப்பாருங்க நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு ஓடி வந்து கை குலுக்குவார்.

சிங்கள அரசு தொடர்ந்து தமிழருக்கு

சிங்கள அரசு தொடர்ந்து தமிழருக்கு தீர்வு வழங்க மறுத்து வருகிறது. இந்திய அரசு தொடர்ந்து அந்த சிங்கள அரசுக்கு உதவி செய்து வருகிறது. அப்பாவி தமிழர்கள் தொடர்ந்தும் இந்திய அரசு தீர்வு பெற்று தரும் என நம்பிக் கொண்டிருக்கின்றனர். தொடரும் இந்த அவல நிலை என்றுதான் மாறுமோ?

எந்த நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு உண்டு.

எந்த நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு உண்டு. தமிழனுக்கு மட்டும் ஒரு விடிவு வராமல் போய்விடுமா? காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகின்றது. தமிழன் மட்டும் அடிமையாக வீழ்ந்து கிடந்துவிடுவானா? பட்ட மரம்கூட ஒரு துளி நீர் பட்டதும் துளிர்க்கிறது. தமிழன் துளிர்த்துவிட மாட்டானா?

அடேல் பாலசிங்கம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அடேல் பாலசிங்கம் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(31.01.2023) இந்திய ராணுவம் பிடித்துவிடவெறிகொண்டு அலைந்தபோது இவர் வெள்ளை இனத்தவர் என்பதால் மறைந்து வாழ்வது கூட பிரச்சனையாக இருந்தது இவரால் ஈழப் போராட்டம் பற்றி நிறைய பேச முடியும். ஆனால் ஏன் மௌனமாக இருக்கின்றார் என்று தெரியவில்லை. இவர் பேச வேண்டும்.

யார் கட்டினாலும் வேட்டி அழகுதான்.

யார் கட்டினாலும் வேட்டி அழகுதான். தமிழருக்கு அது நிச்சயம் பெருமைதான்.

இவரை “பயங்கரவாதி” என்றார்கள்

இவரை “பயங்கரவாதி” என்றார்கள் இவர் ஆயுதம் ஏந்தியது “வன்முறை” என்றார்கள் இவரை கொன்று அழித்தால் இலங்கை மக்களுக்கு அனைத்து வளமும் கிடைக்கும் என்றார்கள் யுத்தம் முடிந்து 14 வருடமாகிவிட்டது. இலங்கைமக்களுக்கு கிடைத்தது என்ன? ஆனால் இலங்கை அரசோ 75வது சுதந்திரதினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறது

தலைவர்களை விலைக்கு வாங்கலாம்.

தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது. சுதந்திரநாள் தமிழருக்கு கரி நாள் என்பதை உலகிற்கு காட்ட பல்கலைகழக மாணவர்கள் மக்களை திரட்டுகிறார்கள். மாணவர் போராட்டம் வெற்றி பெறட்டும். மக்கள் போராட்டமாக அது மாறட்டும்.

சுதந்திரநாள் தமிழருக்கு கரி நாள்

சுதந்திரநாள் தமிழருக்கு கரி நாள் என்பது உண்மைதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதே சுமந்திரன் சிங்கள அரசு கொண்டாடிய சுதந்திரதின விழாவில் தன் மனைவியுடன் சென்று பங்கு பற்றியவர். அவர் இப்போது சுதந்திரநாள் கரி நாள் என்கிறார். அதுதான் சந்தேகமாக இருக்கிறது.

தமிழீழம் அமைய ஒருபோதும்

தமிழீழம் அமைய ஒருபோதும் இடமளியோம் என இந்திய அரசு 1983 முதல் உறுதியாக கூறிவருகிறது. ஆனால் இவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தமிழீழம் அமைவது அவசியம் என்று டில்லி சென்று கூட்டம் போட்டு கூறுகிறார்கள். பரவாயில்லை. ஆனால் இவர்கள் 40 வருடமாக இந்தியாவில் அகதியாக இருப்பவர்களுக்கு குடியுரிழமை வழங்குமாறோ அல்லது சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறோ ஏன் கோருவதில்லை? மீண்டும் புலிகள் இயக்கத்தை கட்ட போதைப்பொருள் கடத்துவதாக கூறி அகதிகளை கைது செய்து சிறப்புமுகாமில் அடைக்கிறது இந்திய அரசு. இவ்வாறு ஈழத் தமிழர் மீது பொய்யாக முத்திரை குத்துவதையாவது நிறுத்துமாறு இவர்கள் இந்திய அரசிடம் கோரலாமே?

வட இந்தியர்கள் தமிழரை

வட இந்தியர்கள் தமிழரை விரட்டி அடிக்கவில்லை என்றார்கள். அவ்வாறு வந்த செய்தி வதந்தி என்றார்கள். இப்போது இரண்டு வட இந்தியர்களை கைது செய்துள்ளார்கள். வட இந்தியர்கள் பெரும் கூட்டமாக திரண்டு தமிழரை தாக்கியுள்ளனர். ஆனால் இரண்டு பேரை மட்டுமே கைது செய்து தமிழரை ஏமாற்றுவது ஏன்?

சீமானின் தொடர் பேச்சு.

சீமானின் தொடர் பேச்சு. அதனால் பெற்றுவரும் வளர்ச்சி ஈழத் தமிழருக்காக மத்திய அரசை வற்புறுத்த வேண்டிய நிலைக்கு திமுக அரசை தள்ளியுள்ளது. 40 வருடமாக அகதிகளாக இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறும் இந்திய அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.