• தோழர் தியாகுவும் உண்ணாவிரத போராட்ட பாதையும்.
தோழர் தியாகு கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உடலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நிலையிலும் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அவர் உணர்வும் அர்ப்பணிப்பும் உண்மையில் மதிக்கத் தக்கது. பாராட்டத்தக்கது.
தோழர் தியாகு நக்சலைட்டு அமைப்பில் தனது புரட்சிகர பயணத்தை நடாத்தியவர். ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சியை மேற்கொள்ள முனைந்தவர். நீண்டகாலம் சிறைத் தண்டனை பெற்றவர். ஆசான் கால் மாக்ஸ் அவர்களின் மூலதனம் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர். அப்படிப்பட்டவர் இன்று உண்ணாவிரதம் இருந்து தனது உடலை வருத்துவது வேதனையளிக்கிறது.
நான் தமிழ்நாடு சிறை மற்றும் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த வேளையில் பல முறை உண்ணாவிரதம் இருந்துள்ளேன். சிறையில் எமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேறு வழியின்றி இவ் வழிகளைத் தேர்ந்தெடுதோம். ஒருமுறை துறையூர் சிறப்பு முகாமில் பத்திரிகை படிக்க அனுமதி கோரி 14 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து இறுதியாக திருச்சி கலெக்டர் வந்து கோரிக்கையை நிறைவேற்றினார். எனவே உண்ணாவிரதத்தின் வலியை நன்கு உணர்ந்தவன் நான்.
சிறையில் வேறு வழியின்றி உண்ணாவிரதம் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில் எனக்கு இந்த உண்ணாவிரத போராட்டங்களில் நம்பிக்கையில்லை. ஏனெனில் அரசு ஒருபோதும் எம்மீது இரங்கப் போவதுமில்லை. எமது கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதுமில்லை. கடந்த காலங்களில் பல முறை சிறப்பு முகாம்களில் உள்ளே இருப்பவர்களும் அவர்களுக்காக வெளியே இருப்பவர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்தும் தமிழக அரசு இன்னும் சிறப்பு முகாம்களை மூடவுமில்லை. அங்கிருப்பவர்களை விடுதலை செய்யவுமில்லை.
எனவே உண்ணாவிரதப் போராட்டதின் மூலமோ அல்லது தீக்குளிப்பு மூலமோ எமது உயிர்கள் இனியும் வீணாகப் போகக்கூடாது. எமது மாக்சிய ஆசான்கள் கூறியது போல் ஆயுதப் போராட்டத்தின் மூலமே எமது இலட்சியங்கள் நிறைவேறும் என்பதை புரிந்து கொள்வோம்.
இதனை நன்கு புரிந்து கொண்ட தோழர் தியாகு எதற்காக தனது உடலை வருத்துகிறார்? எதற்காக வீணாக தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்? முத்துக்குமார் முதல் எத்தனை தியாகிகள் தங்கள் உடலை தீயிட்டுக் கொளுத்தினார்கள்? அவர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்தும் நாம் கண்ட பலன் என்ன? சில மாதங்களுக்கு மன்னர் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்களே! இந்திய அரசு சிறு துளிகூட மனம் இரங்க வில்லையே? அரக்க குணம் படைத்த அரசுகள் ஒருபோதும் எமது உயிரை மதிக்கப் போவதில்லை. எனவே மதிப்பு மிக்க எமது உயிர்கள் வீணாக மடியக்கூடாது.
நான் 1991ம் ஆண்டு கியூ பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு இரகசியமாக வைத்து துன்புறுத்தப்பட்டபோது தோழர் பொழிலன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தோழர் தியாகுவே உடன் விரைந்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவர் அவ்வாறு தாக்கல் செய்தமையினாலே நான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டேன். அன்று எனது ஒரு உயிரைக் காப்பாற்றிய தோழர் இன்று எமது மக்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அவரது உணர்வுகளை மதிக்கிறேன். பாராட்டுகிறேன்.
ஆனால் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். அவரை நம்பும் இளைஞர்களுக்கு ஆயுதப் போராட்டத்தை போதிக்க வேண்டும். தோழர் தமிழரசன் பாதையில் அவரே அந்த வகையான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
துப்பாக்கி குழாயிலிருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றார் தோழர் மாவோ அவர்கள். எனவே ஆயுதப் போராட்டமே புரட்சிக்கான பாதையாகும். அகிம்சைப் பாதையானது சரணாகதிப் பாதையாகும். அது ஆளும் வர்க்கத்திற்கு துணை போகும் பாதையாகும். எனவே தோழர் தியாகு உண்ணாவிரதம் என்னும் அகிம்சை வழியை விட்டு தோழர் தமிழரசன் காட்டிய புரட்சிப்பாதையை மக்களுக்கு காட்ட வேண்டும் என விரும்புகிறேன்.

No comments:
Post a Comment