• பாலுமகேந்திரா கைக்குண்டு வீசியதாக கூறும் சீமான் இதற்குரிய ஆதாரத்தை முன்வைப்பாரா?
இயக்குனர் பாலுமகேந்திராவின் மறைவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் அவர்கள் காசிஆனந்தனும் பாலுமகேந்திராவும் சைக்கிளில் சென்று கைக்குண்டு வீசியதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய செய்தி இதுவரை நாம் அறியவில்லை. எனவே இதற்குரிய ஆதாரத்தை சீமான் அவர்கள் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பாலுமகேந்திரா தனது திரைப்படங்களில்கூட கைக்குண்டு எறியும் காட்சிகள் வைத்ததில்லை. அப்படிப்பட்டவரை காசி ஆனந்தனுடன் சென்று கைக்குண்டு வீசியதாக குறிப்பிடுவது நம்பமுடியாமல் இருக்கிறது. அதேபோல் காசிஆனந்தன் பஸ்க்குகூட கல் எறியாதவர். அவரையும் கைக்குண்டு அதுவும் சைக்கிளில் சென்று எறிந்ததாக கூறுவதை எப்படி நம்புவது?
பாலுமகேந்திரா எப்போது எறிந்தார்? எங்கு எறிந்தார்? எந்த இயக்கத்தின் சார்பில் எறிந்தார? என்ற விபரங்களை அறிய ஆர்வமாக இருக்கிறோம் . எனவே சீமான் தயவு செய்து இந்த விபரங்களை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பாலு மகேந்திராவைப் பொறுத்தவரையில் நல்ல ஒளிப்பதிவாளர். நல்ல இயக்குனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக அவரை ஏதோ தமிழ் போராளி ரேஞ்சுக்கு கதை கட்ட வேண்டாம். அதற்குரிய தகுதி அவருக்கு இல்லை.
தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என்பவர் தலைமையில் இயங்கிய தமிழீழ இராணுவம் என்னும் இயக்கமே இலங்கையின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையான காத்தான்குடி வங்கிக்கொள்ளையை செய்தது. அந்த வங்கிக்கொள்ளை பணத்திலேயே வீடு படம் தயாரிக்கப்பட்டது. இது பாலு மகேந்திராவுக்கும் தெரியும். ஆனால் அவர் எந்த சலுகையும் செய்யவில்லை. இந்த படம் அவருக்கு விருது வாங்கிக் கொடுத்தது. ஆனால் படம் தயாரித்தவர்களுக்கு இலாபம் கொடுக்கவில்லை. மேலும் இந்த படத்திற்காக கட்டிய வீட்டையும் பாலுமகேந்திராவே எடுத்துவிட்டார் என்று தம்பாபிள்ளை மகேஸ்வரனே வருத்தத்துடன் என்னிடம் கூறியிருக்கிறார்.
காசி ஆனந்தனும் பாலுமகேந்திராவும் கைக்குண்டு வீசிய போராளிகள் என்று சீமான் கூறியதன் மூலம் போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது.

No comments:
Post a Comment