• (குமுதம்) நாட்டான்மை தீர்ப்பை மாத்து
அல்லது எமக்கும் ஒரு தீர்ப்பு சொல்லு!
குமுதம் ஆசிரியருக்கு!
லீனா மணிமேகலையின் புகாரை ஏற்று அலுவலகத்திற்கு வெளியே நடந்த ஒரு விடயத்திற்கு நாட்டான்மையாக தீர்ப்பு கூறியிருக்கிறீர்கள். நல்லது! அதேபோல் எமக்கும் ஒரு தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் அல்லது காட்டுனிஸ்ட் பாலாவுக்கு வழங்கிய தீர்ப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
லீனா மணிமேகலை என்ற பெண்ணை தரக் குறைவாக எழுதியிருந்தால் அது தவறுதான். அதற்கு நீங்கள் வழங்கிய தீர்ப்பும் சரி என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் இதே லீனா மணிமேகலை என்ற பெண்மனி நாம் பெரிதும் மதிப்பு வைத்திருக்கும் மாக்சிய ஆசான்களை கொச்சைப்படுத்தி தரக் குறைவாக கவிதை எழுதியிருக்கிறார். இதனால் நாமும் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறோம்.
லீனா அம்மையார் தனக்கு சட்டத்தின் மூலம் நீதி பெற செல்வாக்கு இல்லை என்று உங்களிடம் முறையிட்டதாக கூறுகிறார். அவருக்காவது உங்களிடம் முறையிட்டு நீதி பெற செல்வாக்கு இருக்கிறது. ஆனால் எமக்கு அந்த செல்வாக்கும் இல்லை. எனவே எமக்குரிய நீதியை நாம் எங்கே பெறுவது?
உங்கள் நீதி கிடைக்காவிடினும் பரவாயில்லை
உங்கள் பதிலாவது எமக்கு கிடைக்குமா?
இப்படிக்கு
லீனா மனிமேகலையின் மாக்சிய ஆசான்கள் மீதான அவதூறால்
வருத்தப்படுவோர் சங்கம்
குறிப்பு- இது குமுதம் ஆசிரியருக்கு அனுப்பப்படாத கடிதம். ஆனால் இப்படியும் ஒரு கடிதம் அனுப்ப முடியும் என்பதை லீனா மனிமேகலைக்கு உணர்த்துவதற்கு எழுதிய கடிதம் .

No comments:
Post a Comment