Saturday, July 19, 2014

அவுஸ்ரேலிய அரசே! • அகதிகளை திருப்பி அனுப்பாதே! • அகதிகளை அடைத்துவைத்து துன்புறுத்தாதே!

அவுஸ்ரேலிய அரசே!

• அகதிகளை திருப்பி அனுப்பாதே!
• அகதிகளை அடைத்துவைத்து துன்புறுத்தாதே!

மனிதாபிமானமற்ற முறையில், ஜ.நா விதிகளுக்கு எதிராக அகதிகளை துன்புறுத்துவதிலும் அவர்களை திருப்பி அனுப்புவதிலும் சில நாடுகள் முயற்சி செய்கின்றன. அதில் குறிப்பாக அவுஸ்ரேலிய நாடு முதன்மை வகிக்கின்றது. தொடர்ந்தும் மிக மோசமாக ஈடுபட்டு வருகின்றது.

அவுஸ்ரேலியாவில் அண்மையில் ஒரு தமிழ் இளைஞர் தன்னை திருப்பி அனுப்ப முயற்சி செய்தபோது தற்கொலை செய்தார். இன்னொரு நபர் தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால் அந்த நாட்டு அரசு ஈவு இரக்கமின்றி தொடர்ந்தும் அரக்கத்தனமாக செயற்படுகின்றது.

தமிழ் நாட்டில் தங்கியிருந்த பல அகதிகளே அங்கு தொடர்ந்தும் வாழ முடியாத நிலையில் அவுஸ்ரேலியா செல்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. தனது நாட்டில் இருக்கும் தமிழ் அகதிகளை பராமரிக்காத தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் பெற்றுக் கொடுப்பதாக அறிக்கை விடுகிறது. மேலும் அகதிகளை பிடித்து சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைத்து வருகிறது. இது தொடர்பாக பல மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தும்கூட தமிழ்நாடு அரசு அந்த அகதிகளை விடுதலை செய்ய மறுத்து வருகிறது.

தமிழ் அகதிகளின் இந்த துன்ப நிலை குறித்து தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் வாய் திறப்பதேயில்லை. மாகாண சபையோ தனக்கு ஆடம்பர சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்துகிறதேயொழிய இந்த அகதிகள் தொடர்பாக அக்கறை கொள்வதில்லை. புலம்பெயர்ந்த நாடடில் இருக்கும் பண பலம் பொருந்திய அமைப்புகள்கூட இந்த அகதிகள் விடயத்தில் அக்கறை கொள்வதில்லை.

இந் நிலையில் லண்டனில் “தமிழ்அகதிகளுக்கான போராட்டக்குழு” பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அவர்கள் தமிழ் அகதிகளுக்கு பல்வேறு வடிவங்களில் குரல் எழுப்பி வருகின்றமை உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. குறிப்பாக தமிழக சிறப்புமுகாம் கொடுமை தொடர்பாக கண்டனம் தெரிவித்தமை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Photo: அவுஸ்ரேலிய அரசே!

No comments:

Post a Comment