• தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.
தலைவர்களோ “போராட வேண்டாம்” என்கிறார்கள்.
தலைவர்களோ “போராட வேண்டாம்” என்கிறார்கள்.
ஜெனிவா முன்பு ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் போராடுகின்றனர்.
லண்டனில் ஜனாதிபதி வந்தபோதும் மக்கள் எதிர்ப்பு காட்டினார்கள்.
தமிழ்நாட்டில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டுள்ளார்கள்.
ஆனால்,
தலைவர் விக்கினேஸ்வரன் தமிழக மக்களை போராட வேண்டாம் என்கிறார்.
இன்னொரு தலைவர் சுமந்திரன் மைத்திரிக்கு எதிர்ப்பு காட்டவேண்டாம் என்கிறார்.
தலைவர் மாவை சேனாதிராசா ஜனாதிபதி தமிழில் பேசினால் போதும் என்கிறார்.
தலைவர் சம்பந்தன் தொடர்ந்தும் இந்திய அரசின் புகழ் பாடுகிறார்.
ஆனால் மோடியோ தமிழ் மக்கள் அனுசரித்துவாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்துள்ளார்.
இலங்கை அரசம் அதன் ராணுவமும்,
தமிழ் மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்யும்.
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய மறுக்கும்.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி ஒப்படைக்காது.
ஆனால் இதையெல்லாம் சகித்தக்கொண்டு அனுசரித்து வாழ பழக வேண்டும் என்றால் அதன் அர்த்தம் என்ன?
இவ்வாறு சொல்லும் இந்திய அரசை இலங்கை தமிழ் மக்களின் நண்பன் என்று கூறும் தலைவர்களை என்னவென்று அழைப்பது?
தமிழ் தலைவர்கள் போராட தயங்கலாம்
தமிழ் தலைவர்கள் துரோகம் இழைக்கலாம்
ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்.
விடுதலை அடையும்வரை போராடியே தீருவார்கள்.
தமிழ் தலைவர்கள் துரோகம் இழைக்கலாம்
ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்.
விடுதலை அடையும்வரை போராடியே தீருவார்கள்.
No comments:
Post a Comment