தமிழன் என்றால் "இளிச்சவாயன்" என்று அர்த்தமா?
திலீபன் என்ற தமிழ் இளைஞன் தேசியகொடியை எரித்து தனது எதிhப்பை பதிவு செய்தான்.
அவனை கைது செய்யுமாறு மற்ற இனத்தவர்கள் யாரும் கோரவில்லை.
ஆனால் தங்களையும் தமிழன் என்று கூறுகிற சில இந்து முன்னனியினர் கோரியுள்ளனராம்.
உடனே தமிழக காவல்துறை அவனை கைது செய்து சிறையில் அடைத்தவிட்டது.
இங்கு எனது கேள்வி என்னவெனில்,
சங்கர ராமனை கொலை செய்தவனை இன்னும் கைது செய்யவில்லை.
ராமஜெயத்தை கொலை செய்தவனை இன்னும் கைது செய்யவில்லை.
தா.கிருட்ணனை கொலை செய்தவனை இன்னும் கைது செய்யவில்லை
தினகரன் ஊழியர்களை கொலை செய்தவனை இன்னும் கைது செய்யவில்லை.
இவர்களை கைது செய்யாதது மட்டுமன்றி இந்த கொலைகாரர்களை கைது செய்யும்படிகூட இதுவரை யாரும் கோரவில்லை.
ஆனால் தேசிய கொடி எரித்த திலீபனை உடனே கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள்.
கொடி எரித்தமைக்கு காட்டிய இந்த அவசரத்தை ஏன் இந்த கொலைகாரர்களை பிடிக்க பொலிசார் காட்டவில்லை?
திலீபனை பிடிக்கும்படி கோரிய இந்து முன்னனி ஏன் இந்த கொலைகாரர்களை பிடிக்கும்படி கோரவில்லை?
இந்த இந்துமுன்னனியினர் உண்மையில் இந்து மதத்தின்மீது அக்கறை உள்ளவர்கள் என்றால் இலங்கையில் 40 ஆயிரம் தமிழ் இந்துக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டபோது என் குரல் கொடுக்கவில்லை?
அப்பொது அவர்கள் என்ன கோமாவில் இருந்தார்களா?
அப்பொது அவர்கள் என்ன கோமாவில் இருந்தார்களா?
இலங்கையில் இந்து ஆலயங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டபோது ஏன் அதை தடுக்க முனையவில்லை?
அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்களா?
அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்களா?
இவர்களுக்கு தமிழ் இன பற்றும் இல்லை. இந்து மதப் பற்றும் இஇல்லை. எல்லாம் வேஷம்.
கெயில் எரி வாயு திட்டத்திற்கு விவசாய நிலங்களினூடாக பைப் லைன் போடுவதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதுமட்டுமல்ல அதை தடுப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளது.
கேரள மற்றும் கர்நாடாவில் தேசிய நெடுஞ்சாலைகள் ஊடாக பைப் பதிக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டில் மட்டும் விவசாய நிலங்களினூடாக பைப்புகளை பதிக்கிறது. இது என்ன நியாயம்?
தமிழன் என்ன இளிச்சவாயனா?
தமிழன் என்ன இளிச்சவாயனா?
திலீபனை கைது செய்யும்படி கோரிய எந்த முன்னனியாவது தமிழனுக்கு இழைக்கப்படும் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்குமா?
No comments:
Post a Comment