•நம்ம தமிழ் எம்.பி மார்களால் ஏன் இப்படி பேச முடியவில்லை?
எங்கட எம்.பி மார்கள் சோறு தின்கிறார்களா அல்லது வேறு ஏதும் தின்கிறார்களா என்று தெரியில்லை.
ஜே.வி.பி யை சிங்கள கட்சி என்றார்கள். ஜே.வி.பியை இனவாத கட்சி என்றார்கள். ஆனால் அந்த கட்சி எம்.பி மார்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அளவுக்குகூட ஏன் எங்கட எம்.பி மாரால் பேச முடியவில்லை?
இதோ ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசநாயக்கா எம.பி கிளிநொச்சியில் பேசிய பேச்சைப் பாருங்கள்.
"அமைச்சர்களின் மலசலங்கள் கூட மிக தரமாக காணப்படுகிறது சிலரின் மலசல கூடங்களுக்கு ஏசி கூட பொருத்தி இருக்கிறார்கள்,
விமல் வீரவன்வசவின் மாதாந்த மின் கட்டணம் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா, ஹெகலிய ரம்புக்வெலவின் மாதாந்த வீட்டு மின் கட்டணம் ஒரு இலட்சத்து 19 ஆயிரம் ரூபா.
ஆனால் மீள்குடியேறிய மக்களுக்கு அரசு வழங்கியது பத்து தகரங்களும், 25,000 ரூபா பணமும் இதில் அவர்கள் எப்படி வீடுகளை அமைத்து வாழ முடியும்? " என்று கேட்டுள்ளார்.
ஒரு சிங்கள எம்.பி தமிழ் மக்களை தேடி வந்து சந்திக்கிறார். தமிழ் மக்களுக்காக இப்படி குரல் கொடுக்கிறார்.
ஆனால் எங்கட எம்.பி மார்கள் பாராளுமன்றம் சென்று தூங்குகிறார்கள். அல்லது தங்களுக்கு சம்பள உயர்வு கேட்கிறார்கள். தங்களுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்கள்.
இன்னும்,
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை.
அகதிகள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
ஆனால்,
தமிழர் பகுதிகளில் புதிதாக புத்த ஆலயங்கள் நிறுவப்படுகின்றன.
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.
காணிகள் சுவீகரித்து இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் கண்டித்து குரல் எழுப்ப வேண்டிய எமது தலைவர் சம்பந்தர் அய்யா அவர்களோ "நல்லாட்சி நடைபெறுகிறது" என்று சேட்டிபிக்கேட் கொடுக்கிறார்.
இவ்வாறு அரசுக்கு முண்டு கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கு நம்மில் சிலர் "வாழ்நாள் வீரர்" விருது கொடுக்கிறார்கள்.
என்னே அவலம் இது? எப்பதான் இதற்கு ஒரு முடிவு வரும்?
No comments:
Post a Comment