Friday, April 29, 2016

தமிழ் மக்களுக்கு மிஞ்சியிருப்பது கோமணம் மட்டுமே. அதையும் இந்தியா உருவிப் பறிப்பதற்கு முயல்கிறது

தமிழ் மக்களுக்கு மிஞ்சியிருப்பது கோமணம் மட்டுமே.
அதையும் இந்தியா உருவிப் பறிப்பதற்கு முயல்கிறது
இந்தியாவுக்கு,
•பலாலி விமான நிலையம் கொடுத்தாயிற்று
•காங்சேசன்துறை துறைமுகம் கொடுத்தாயிற்று
•சீமெந்து தொழிற்சாலை கொடுத்தாயிற்று
•மன்னார் பெற்றேல் கிணறுகள் கொடுத்தாயிற்று
•புல்மோட்டை இல்மனைற் கொடுத்தாயிற்று
•சம்பூர் அனல்மின் நிலையம் கொடுத்தாயிற்று
•திருகோணமலையில் 650 ஏக்கர் நிலம் கொடுத்தாயிற்று
•துறைமுகத்தில் உள்ள எண்ணெய் குதங்கள் கொடுத்தாயிற்று
•திக்கம் வடி சாராய உற்பத்தி நிலையமும் கொடுத்தாயிற்று
தமிழ் மக்களுக்கு மிஞ்சியிருப்பது அவர்கள் கட்டியிருக்கும் கோமணம் மட்டுமே. அதையும் விரைவில் உருவாமல் விடமாட்டார் யாழ் இந்திய தூதுவர்.
இத்தனையும் பெற்றுக்கொண்ட இந்திய தூதுவர்
தமிழ் மக்களுக்கு,
கடந்த சித்திரை புத்தாண்டு "பொங்கல்" வழங்கியுள்ளார்.
இனி அடுத்து வரும் தீபாவளிக்கு "அல்வா" வழங்கவுள்ளார்.
அதுமட்டுமல்ல, தமிழக மக்கள் இந்தி படிப்பதுபோல் இலங்கை தமிழரும் சிங்களம் படிக்க வேண்டும் என்று இலவச ஆலோசனையும் வழங்குவார்.
தமிழ் மக்கள் இத்தனை காலம் போராடியது இந்தியாவின் நலனுக்காகவா?
தமிழ் மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்தது இந்தியா சுரண்டுவதற்காகவா?
தமிழ் மக்கள் தங்கள் உடமைகளை இழந்தது இந்திய ஆக்கிரமிப்பாகவா?
போர்த்துக்கேயரை விரட்டிய தமிழ் மக்கள்
ஒல்லாந்தரை விரட்டிய தமிழ் மக்கள்
ஆங்கிலேயரை விரட்டிய தமிழ் மக்கள்
இந்தியாவுக்க மட்டும் அடிமையாக இருந்துவிடுவார்களா?
1லட்சத்து 20 ஆயிரம் இந்திய ராணுவத்தை இரண்டரை வருடத்தில் விரட்டி அடித்து ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது என்பதை நிரூபித்தவர்கள் தமிழ் மக்கள்.
கேரளாவில் தன் சொந்த மகளுடன் வாழும் சம்பந்தர் அய்யா இந்தியாவுக்கு துணை போகலாம்
சென்னையில் தன் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் மாவை சேனாதிராசா இந்தியாவுக்கு துணை போகலாம்
தன் மகளின் டில்லி மருத்துவ படிப்பிற்காக சுரேஸ் பிரேமசந்திரன் இந்தியாவுக்கு துணை போகலாம்
.
தமிழ்நாட்டில் இருக்கும் தனது கோடிக்கணக்கான சொத்துகளுக்காக செல்வம் அடைக்லநாதன் இந்தியாவுக்கு துணை போகலாம்
தமிழகத்தில் வாழ்ந்து வரும் காசி அனந்தன் அவர்களும் இந்தியாவுக்கு துணை போகலாம்.
சீனா வந்து விட்டது. எனவே இந்தியா தமிழீழம் எடுக்க உதவும் என்று எழுதி சில அரசியல் ஆய்வாளர்களும் இந்தியாவுக்கு துணை போகலாம்.
ஆனால் தமிழ் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.
தமிழ் மக்கள் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். அவர்கள் அடிமைத்தனத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளமாட்டார்கள்.

No comments:

Post a Comment