•ஜெயா அம்மையாரின் இரட்டை முகம்!
குறிப்பு- இந்தப் பதிவு தி.மு.க விடம் 300 ருபா பெற்றுக்கொண்டு எழுதிய பதிவு அல்ல என்று உறுதியளிக்கிறேன்.
மண்டபம் அகதிமுகாமில் ஒரு இளம் அகதிப் பெண் 4 பொலிசாரால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டுள்ளார். அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குமிடிப்பூண்டி அகதிமுகாமில் ஒரு அகதி பொலிசாரினால் பிடித்து சென்று கால் உடைத்து அனுப்பப்பட்டுள்ளார். அது குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மதுரையில் வருவாய்துறை மற்றும் கியூ பிரிவு பொலிசாரின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு அகதி தற்கொலை செய்துள்ளார். அது குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கலைஞர் தத்து எடுத்து வளர்த்த மணி என்ற அகதி சிறுவன் எங்கே எனக் கேட்டு ஜெயா அம்மையாருக்கு மனு அனுப்பியிருந்தேன். அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் மது வேண்டாம் என்று பாட்டு பாடியதற்காக இரு சிறுமிகளுக்கு மேல் வழக்கு போடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த 6 இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
தனக்கு 21 நாளில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் விடுதலை பெற்ற ஜெயா அம்மையார் மதுரையில் 6 இளைஞர்கள் மீதான வழக்கை விசாரணையும் செய்யாமல் ஜாமீனிலும் விடுதலை செய்யாமல் இழுத்தடிக்கிறார்.
பேரறிவாளன் தனது தந்தையாரைப் பார்ப்பதற்கு பரோல் லீவு கேட்டார். ஆனால் அவருக்கு பரோல் லீவு வழங்கப்படவில்லை.
மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி எழுவரையும் விடுதலை செய்திருக்கமுடியும். ஆனால் வேண்டுமென்றே மத்திய அரசு அனுமதி கேட்டு இழுத்தடிக்கிறார்.
ஜெயா அம்மையாரின் இந்த இரட்டை முகத்தை இனியாவது தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
•ஜெயா அம்மையாருக்கு எதிராக முகநூலில் எழுதுவதற்காக நாள் ஒன்றுக்கு 300 ரூபா தி.மு.க வழங்குவதாக தினமணி இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே இந்த ஜெயா அம்மையாருக்கு எதிரான பதிவும் அவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு எழுதப்பட்டதாக கருத வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment