•சாமியை படம் பிடித்தால் “பவர்” குறைந்துவிடுமா?
கோயிலுக்கு வெளியே படம் பிடிக்க அனுமதிக்கிறார்கள்.
ஆனால் கோயிலுக்குள் படம் பிடிக்க அனுமதி மறுக்கிறார்கள்.
ஆனால் கோயிலுக்குள் படம் பிடிக்க அனுமதி மறுக்கிறார்கள்.
நல்லூர் கோயிலின் உள்ளே படம் பிடிக்க அனுமதி இல்லை என்கிறார்கள்
இதற்கு என்ன காரணம் என்று யாராவது பக்தர்கள் விளக்குவார்களா?
இதற்கு என்ன காரணம் என்று யாராவது பக்தர்கள் விளக்குவார்களா?
தன்னை கோயிலின் உள்ளே படம் பிடிக்ககூடாது என்று எந்த சாமியாவது எங்கேயாவது சொல்லியதுண்டா?
அல்லது கோயின் உள்ளே படம் பிடிக்க கூடாது என்று எந்த நாயன்மாராவது தேவாரம் பாடியிருக்கிறார்களா?
படம் பிடிக்க வேண்டாம் என்பதையே ஒரு பக்தன் படம் பிடித்துவிட்டான். அதை தனது பேஸ்புக்கிலும் பகிர்ந்துவிட்டான். அப்படியென்றால் அவன் ரத்தம் கக்கி சாகப் போகிறானா?
கோயில் மீது குண்டு போட்ட ராணுவத்தையே தண்டிக்காத ஆண்டவன், படம் பிடித்த தன்னையா தண்டிக்கப் போகிறார் என்று அந்த பக்தன் கருதியிருக்கலாம்.
எல்லாம் வல்ல ஆண்டவர் என்கிறோம். ஆனால் கோயிலின் உள்ளே படம் பிடிக்க கூடாது என்கிறோம்.
இதுகூடப் பரவாயில்லை. எங்களைக் காக்கும் ஆண்டவர் என்கிறோம். ஆனால் அவர் களவு போய்விடக்கூடாது என்பதற்காக பெரிய பூட்டு நாலு போடுகிறோம்.
என்ன கோமாளித்தனமாக இருக்கிறது. எப்போதுதான் நாம் பகுத்தறிவுடன் சிந்திக்கப் போகிறோம்?
கிளிநொச்சியில் 5 கோடி ரூபா செலவு செய்து கோயில் கோபுரம் கட்டுகிறார்கள். ஆனால் அதே கிளிநொச்சியில் கூரை மேயாத பல பாடசாலைகள் இருக்கின்றன.
சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் 50 பேர்கூட வரவில்லை. ஆனால் நல்லூர் திருவிழாவில் ஆயிரக் கணக்கில் கூடுகிறார்கள்.
மக்களின் சேவையே மகேசன் சேவை என்று ஒருபுறம் கூறுகிறார்கள். மறுபுறத்தில் மக்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை என்பதுபோல் கோயில்களில் புரள்கிறார்கள்.
இந்த நிலை என்று மாறும்?
எமது இனம் எப்போது விடுதலை பெறும்?
எமது இனம் எப்போது விடுதலை பெறும்?
No comments:
Post a Comment