Thursday, August 18, 2016

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் பிரதிநிதி சசிகலா புஸ்பா இரு நாட்களுக்கு முன்னர் தன் தலைவியை தரக்குறைவாக பேசியதால் இன்னொரு மக்கள் பிரதிநிதி சிவா அவர்களை கன்னத்தில் அறைந்ததாக பேசினார்.
ஒரு பிரதிநிதி இன்னொரு பிரதிநிதியின் கன்னத்தில் மக்கள் முன் அறைந்த நாகரீகமற்ற செயலை யாரும் கண்டிக்கவில்லை. மாறாக அவர் ஒரு முறை கன்னத்தில் அடித்தாரா அல்லது நாலு முறை அடித்தாரா என பட்டிமன்றம் நடத்தினார்கள்.
இன்று தன் தலைவி ஜெயா அம்மையார் தன் கன்னத்தில் அறைந்ததாகவும் தனக்கு பாதுகாப்பு தரும்படியும் சசிகலா புஸ்பா பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.
ஒரு மக்கள் பிரதிநிதி தன் தலைவியால் உயிருக்கு ஆபத்து என்று பாதுகாப்பு கோரும் அவலம் பாராளுமன்றத்தில் அரங்கேறியுள்ளது.
ஆனால் தமிழக ஊடகங்கள் சசிகலா புஸ்பாவுக்கே கன்னத்தில் அடியென்றால் ஓ.பி .பன்னீர்செல்வத்திற்கு எத்தனை அடி எங்கெல்லாம் விழுந்திருக்கும் என ஆராய்கிறார்கள்.
கடந்தவாரம் ஒரு தமிழக விவசாயி தண்ணீருக்காக பாலாற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார்.
அது குறித்து எந்தவொரு தமிழக பிரதிநிதியும் பாராளுமன்றதில் பேசவில்லை. ஏன் பாராளுமன்றத்திற்கே மக்கள் பிரச்சனை குறித்து அக்கறை இல்லை.
குடிப்பது. குடித்துவிட்டு கூத்தடிப்பது. தமது தலைவர் தலைவிகளை புகழ் பாடுவது. மிகுதி நேரங்களில் தூங்குவது. இதைத்தானே பிரதிநிதிகள் பாராளுமன்றில் செய்கிறார்கள்.
இதற்காக மக்கள் வரிப் பணத்தில் வெட்டியாக பாராளுமன்றம் நடத்ததான் வேண்டுமா?

No comments:

Post a Comment