Monday, December 12, 2016

•இன்று மனிதவுரிமைகள் தினமாம்!

•இன்று மனிதவுரிமைகள் தினமாம்!
குழந்தைகளையே காக்க முடியாத ஜ.நா வுக்கு
மனிதவுரிமைகள் தினம் என்ன வேண்டிக் கிடக்கு?
இலங்கையில் மட்டுமன்றி உலகில் எல்லாம்
என்றுமில்லாதவாறு மனிதவுரிமை மீறல்கள்
ஜ.நா வழமைபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கு!
வன்னியில் மக்கள் வறுமையில் தற்கொலை செய்கின்றனர்.
ஆனால் நல்லாட்சி நடப்பதாக தலைவர்கள் கூறுகின்றனர்.
ஈழத் தாய் என்று ஜெயா அம்மையாரை புகழ்கின்றனர்.
ஆனால் சிறப்புமகாமில் அகதிகள் அடைபட்டுக் கிடக்கின்றனர்.
“புரட்சியாளர் பிடல் காஸ்ரோ” என்று வணக்கம் செலுத்துகினறனர்.
ஆனால் பெண் வழக்கறிஞரை என்கவுண்டரில் கொல்லுகின்றனர்.
இதுவரை 127 அப்பாவி மக்கள் வங்கி வாசலில் மாண்டு விட்டனர்.
ஆனால் இந்திய பிரதமரின் விளம்பர செலவொ 1100 கோடி ரூபா.
போங்கடா நீங்களும் உங்கட மனிதவுரிமை தினமும்!

No comments:

Post a Comment