Saturday, December 31, 2016

•இன்னுமா இந்தியாவை நம்ப வேண்டும்?

•இன்னுமா இந்தியாவை நம்ப வேண்டும்?
இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் யாவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.
ஜரோப்பிய நாடுகளில் அகதியாக வந்த தமிழர்களுக்கு 7 வருடங்களில் அந் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 34 வருடங்கள் இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மறுப்பதோடு அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றார்கள்.
பாகிஸ்தானில் இருந்து வந்த பாடகருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பங்களாதேசில் இருந்து வந்த அகதிகளுக்கும் குடியுரிமை வழஙக்கப்பட இருக்கிறது.
ஆனால் தமிழ் அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பதோடு கல்வியுரிமை, வேலைவாயப்புரிமை எல்லாம்கூட மறுக்கப்படுகிறது.
தீபெத் அகதிகள் முதல் அனைத்து அகதிகளும் இந்தியாவில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தமிழ் அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கின்றனர்.
“இந்து தமிழீழம்” கேட்டால் இந்திய அரசு உதவும் என்று காசி ஆனந்தன் அய்யா நம்புகிறார். பாவம் அவருக்குகூட ஒரு கடவுச் சீட்டு எடுக்க இந்திய அரசு இன்னும் உதவவில்லை.
இந்தியாவுக்காக சிவசேனை அமைத்துள்ள சச்சி அய்யா நாலு பிள்ளை பெற்றால் உதவி கிடைக்கும் என்கிறார். ஆனால் இந்தியாவில் உள்ள இந்து தமிழ் அகதிகளுக்கு அவரால் எந்த உதவியும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
தனது நாட்டில் இருக்கும் இந்த தமிழ் அகதிகளுக்குகூட குடியுரிமை வழங்காத இந்திய அரசு இந்து தமிழீழத்திற்கு உதவும் என்று எப்படி காசி அய்யா நம்புகிறார்?
தனது நாட்டில் உள்ள இந்து தமிழ் அகதிகளுக்கு எந்த உதவியும் வழங்காது அவர்களை வெளியேறும்படி கேட்கும் இந்திய அரசு இலங்கையில் வந்து இந்துக்களுக்கு உதவும் என்று எப்படி சச்சிஅய்யா நம்புகிறார்?
இவர்களால் இன்னும் எப்படி இந்தியாவை நம்பும்படி கூறமுடிகிறது?
பொதுவாக இறைச்சித்; துண்டு போட்டால்தான் நாய்க்குட்டிகள் வாலாட்டும். ஆனால் இந்தியா எந்த உதவியும் வழங்காத நிலையிலும் எப்படி இவர்களால் இந்தளவு நன்றியுடன் வாலாட்ட முடிகிறது?

No comments:

Post a Comment