Sunday, January 22, 2017

•இந்த முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?

•இந்த முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?
மழைக்காக யாகம் செய்து குடை பிடித்த
ஒரு முட்டாள் வாத்தியின் கதை இது!
ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால்
அதற்கு கல்வி அறிவு மிகவும் முக்கியம்.
சமூகம் கல்வி அறிவு பெற வேண்டுமாயின்
கல்லி கற்ற பாடசாலை செல்ல வேண்டும்
பாடசாலையில் நல்ல வாத்தி இல்லை என்றால்
தமிழ் சமூகம் எப்படி முன்னேற முடியும்?
அற்பனுக்கு காலம் வந்தால் அர்த்த ராத்திரியில்
குடை பிடிப்பான் என்று கூறுவார்கள்.
வாத்தி சிறீதரனுக்கும் குடை பிடிப்பது என்றால்
என்னவோ தெரியவில்லை, எப்போதும் அலாதி பிரியம்.
மழைக்காக யாகம் செய்தது மட்டுமல்லாமல்
யாகம் முடிந்தவுடன் மழை பெய்யப் போகுது என்று
குடை பிடித்து வந்து வானத்தை அன்னாந்து பார்த்த
சிறீ வாத்தியின் முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?
அரசியல்வாதி சிறீதரன் மழைக்காக யாகம் செய்தது ஆச்சரியம் இல்லை.
யாகம் முடிந்ததும் மழை வரும் என்று நம்பி குடை பிடித்ததும் ஆச்சரியம் இல்லை.
எமது ஆச்சரியம் எல்லாம் சிறீவாத்தி பாராளுமன்ற உறுப்பினரானது அல்ல.
மாறாக இவர் எப்படி கொஞ்ச காலம் வாத்தியாக இருந்தார் என்பதே.
இவரிடம் படித்த மாணவர்கள் எப்படி அறிவு பெற்றிருக்க முடியும்?

No comments:

Post a Comment