Wednesday, January 11, 2017

•இனியும் நிபந்தனை அற்ற ஆதரவை தொடர்ந்து வழங்குவது தமிழர் நலனுக்கு உகந்தது அல்ல என்பதை உணர வேண்டும்!

•இனியும் நிபந்தனை அற்ற ஆதரவை தொடர்ந்து வழங்குவது
தமிழர் நலனுக்கு உகந்தது அல்ல என்பதை உணர வேண்டும்!
சம்பந்தர் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவை இலங்கை அரசுக்கு வழங்கி வருகிறது.
இனியும் இவ்வாறு நிபந்தனை அற்ற ஆதரவை தொடர்ந்து வழங்குவது தமிழர் நலனுக்கு உகந்தது அல்ல என்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் உணர வேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் இவ் ஆதரவின் துணையுடன் இலங்கை அரசு தன்னை ஜ.நா நெருக்கடியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முனைகிறது.
மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஜ.நா கூட்டத்தொடரில் இலங்கை அரசு தமிழ்தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் நீண்டகால அவகாசத்தை பெற்று தப்பிக்க முனைகிறது.
எனவே இலங்கை அரசின் இந்த சூழ்ச்சித் திட்டத்திற்கு தமிழ்தேசியகூட்டமைப்பு இடம் கொடுக்கக்கூடாது.
மார்ச் மாதத்திற்கு முன்னர் அரசியல் கைதிகள் விடுதலை , காணாமல் போனோர் பிரச்சனை, மீள்குடியேற்றம் போன்றவற்றுக்கு முடிவு காணப்பட வேண்டும் என அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
மார்ச் மாத்திற்கு முன்னர் அரசியல்கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சனை, மீள்குடியேற்றம் போன்றவற்றுக்கு முடிவு காணாவிட்டமால் மார்ச் மாத ஜ.நா கூட்டத்தொடரில் இலங்கைப அரசுக்கு எதிராகவே குரல் கொடுப்போம் என்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசுக்கு நிபந்தனையாக முன்வைக்க வேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது வெறும் சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும் அல்ல. அல்லது சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும் தமிழர் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக இருக்க முடியாது.
தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தீர்மானம் எடுத்து அதனை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் இனியும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் பங்காளராக மாற வேண்டும்.

No comments:

Post a Comment