•போராட்டம் தொடர்கிறது
போராட்டம் பரவுகிறது
போராட்டம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கிறது
போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை
போராட்டம் பரவுகிறது
போராட்டம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கிறது
போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை
ஜல்லிக்கட்டிற்கான தமிழக மக்களின் போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது.
அலங்காநல்லூரில் ஆரம்பித்த போராட்டம் தமிழகமெங்கும் பரவுகிறது
தமிழக மக்களுக்கு ஆதரவாக லண்டனில் கடும் குளிருக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளனர்.
தமிழக மக்களுக்கு ஆதரவாக ஈழத்திலும் நல்லூரில் தமிழ் இளைஞர்கள் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளனர்.
எந்தவொரு பெரிய அரசியல் கட்சியும் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை
எந்தவொரு பெரிய அமைப்பும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை
எந்தவொரு பெரிய ஊடகமும் செய்திகளை வெளியிடவில்லை
மக்கள் தாங்களாகவே ஒன்று கூடுகிறார்கள்
மக்கள் தாங்களாகவே தமது சமூக வலைத் தளங்கள் ஊடாக செய்திகளை பரப்புகின்றார்கள்.
மக்கள் தாங்களாகவே ஒன்று திரண்டு போராடுகின்றார்கள்.
அலங்காநல்லூரில் ஒரு பெண் மயக்கமுற்றுள்ளார்.
மதுரையில் 3 மாணவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர்.
திண்டுக்கல்லில் ஒருவர் உயரமான கட்டிடத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இந்திய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
மெரினா கடற்கரையில் கடல் அலைகளுக்கு மேலாக மக்கள் அலை பொங்குகிறது.
மாணவர்கள் வகுப்புகளை பகிஸ்கரித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்
அரசு ஊழியர்கள் நாளை முதல் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் சங்கம் ஒரு நாள் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது.
இன்று மாலை 6 மணிக்குள் அரசு தீர்வு தராவிடின்
குடியரசு தினத்தை பகிஸ்கரிக்கப்போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
குடியரசு தினத்தை பகிஸ்கரிக்கப்போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது என்றார் தோழர் மாசேதுங்.
அதை தமிழக மக்கள் தமது போராட்டம் மூலம் நிரூபித்தக்கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment