•கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது!
கேப்பாப்பிலவு மக்களின் அமைதிவழியிலான போராட்டம் 12 வது நாளாக தொடர்கிறது. ஆனால் நல்லாட்சி அரசு இதுவரை எந்த பதிலும் கூறாமல் இருக்கிறது.
69வது சுதந்திர தினத்தை கொண்டாடிய அரசு கேப்பாப்பிலவு மக்களை இலங்கை மக்களாக கருதவில்லையா? அல்லது அவர்கள் தமது சொந்த நிலத்தில் வாழ சுதந்திரம் இல்லை என கருதுகிறதா?
குழந்தைகள்கூட கடும் குளிரிலும் கும்மிருட்டிலும் ராணுவ வேலியோரத்தில் படுத்து போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் நல்லாட்சி அரசு இரக்கம் கொள்ளவில்லையே!
இந்த மக்கள் பிரிவினை கேட்கவில்லையே. இவர்கள் ஆயுதம் ஏந்தும் பயங்கரவாதிகள் இல்லையே. அப்படியிருக்க நல்லாட்சி அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
புலிகள் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள். அதனால்தான் இந்தியா உட்பட எந்த உலக நாடும் உதவவில்லை என்று கூறுpயவர்கள் இப்போது என்ன கூறப்போகிறார்கள்?
அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியும் என்று கூறியவர்கள் இந்த கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?
சிங்கள மக்களும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்ட நியாயத்தை உணர்ந்து ஆதரிக்க ஆரம்பித்துள்ளார்கள். இனி நல்லாட்சி அரசு யாரைக் காரணம் காட்டி இந்த மக்களை ஏமாற்றப் போகிறார்கள்?
தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பிரித்து வைத்து தனது ஆக்கிரமிப்பு நலனை பேணிய இந்திய அரசு இனி என்ன செய்யப்போகிறது?
தமிழ் பிரதேசங்களில் 20 காந்தி சிலைகளை நிறுவியே தீருவேன் என அடம்பிடிக்கும் இந்திய தூதர் இந்த மக்களின் போராட்டத்திற்கு உதவ மறுப்பது ஏன்?
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஜ.நா வாசலிலும் ஆதரவு குரல் எழுப்பப்படுகிறது. இவர்களுக்கு ஜ.நா என்ன பதில் கூறப்போகிறது?
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் எழுப்பியுள்ள இந்த கேள்விகள் இலங்கை இந்திய அரசை மட்டுமல்ல அவற்றை ஆதரிப்போரையும் அம்பலப்படுத்துகிறது.
No comments:
Post a Comment