Saturday, February 11, 2017

•2020ல் இந்தியா வல்லரசு !

•2020ல் இந்தியா வல்லரசு !
கடலில் கொட்டிய ஆயிலை வாளியால் அள்ளும் இந்தியா வல்லரசு ஆகுமா என சிலர் கேட்கிறார்கள்.
கடலில் கொட்டிய ஆயிலையே அள்ள முடியாத இந்தியா கூடங்குளம் அணு உலை வெடித்தால் மக்களை எப்படி காப்பாற்றப்போகிறது என இன்னும் சிலர் கேட்கிறார்கள்.
2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று சொல்லியிருப்பவர் பிரதமர் மோடி. எனவே நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.
தான் பிரதமர் ஆனவுடன் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய அக்கவுண்டிலும் 15 லட்சம் ரூபா போடுவேன் என்று இந்த மோடி தானே சொன்னார். அப்ப நாம் நம்பவில்லையா?
அவர் பிரதமராகி இரண்டு வருடமாகிவிட்டது. எங்கே அந்த 15 லட்சம் ரூபா என்று யாராவது எம்மில் கேட்டிருக்கிறோமா? இல்லைதானே?
30வீதம் மக்கள் கழிப்பறை வசதிகூட இல்லாத நாட்டில் ஒரு பிரதமர் விளம்பரத்திற்கு 1200 கோடி ரூபா செலவு செய்வது என்ன நியாயம் என்றாவது நாம் கேட்டிருக்கிறோமா? இல்லைதானே?
எனவே இப்போதும் 2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று மோடி சொல்வதை அப்படியே நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
இல்லை என்று மோடியை விமர்சித்தால் அப்புறம் பிரதமரை விமர்சிப்பவன் சமூகவிரோதி என்பார்கள். பாகிஸ்தான் போ என்பார்கள்.
இது தேவையா?
குறிப்பு-
வருடந்தோறும் 85ஆயிரம் கோடி ரூபாவை தமிழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு தமிழகத்திற்கு 25ஆயிரம் கோடி ரூபாவையே வழங்குகின்றனது.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் மீண்டும் இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலேயே பயிற்சி வழங்க இருக்கிறது இந்திய அரசு.
இந்த அநியாயத்தையாவது தமிழக மக்களால் கேட்க முடியுமா

No comments:

Post a Comment