•அன்று ஈழ அகதிகளை அந்தமான் சிறைக்கு அனுப்ப முனைந்தவர்கள்
இன்று தங்களை தமிழக சிறைக்கு மாற்ற முயல்கிறார்கள் !
இன்று தங்களை தமிழக சிறைக்கு மாற்ற முயல்கிறார்கள் !
ஜெயா அம்மையாரின் முதலாவது ஆட்சிக்காலத்தில் ஈழ அகதிகள் பல சிறப்புமுகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் இருந்து அகதிகள் தப்பிவிட்டார்கள் என்ற காரணத்தைக் காட்டி ஈழ அகதிகள் எல்லோரையும் அந்தமானுக்கு அனுப்பும்படி ஜெயா அம்மையார் கோரினார்.
ஆனால் மத்திய அரசு அவ்வாறு செய்ய சட்டத்தில் இடமில்லை என கூறி ஜெயா அம்மையாரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
எந்தவித குற்றச்சாட்டும் அற்ற , எந்தவித தண்டனையும் பெறாத அப்பாவி அகதிகளை அந்தமானுக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரிய ஜெயா அம்மையாரின் சகோதரி சசிகலா தன்னை தமிழக சிறைக்கு மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
ஆந்திரா மற்றும் கர்நாடக சிறைகளில் பல தமிழர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவரையும் தமிழக சிறைக்கு மாற்ற முயற்சி செய்யாத ஜெயா அம்மையாரின் தமிழக அரசு இன்று சசிகலாவை சிறை மாற்ற முயற்சி செய்கிறது.
ஆட்சியில் இருக்கும்போது சிறை குறித்து எந்தவித கவனமும் செலுத்தாத இந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு சிறை என்றவுடன் அதில் சலுகைகள் பெற முயற்சி செய்கின்றனர்.
இனியாவது சிறப்புமுகாமில் இருக்கும் அகதிகளை விடுதலை செய்ய சசிகலாவும் அவரது கட்சியின் அரசும் முன்வரவேண்டும்.
ஆங்கிலேயர் காலத்து சிறை விதிகளே இன்றும் தமிழக சிறைகளில் நடைமுறையில் இருக்கின்றது. இனியாவது இன்றைய காலத்திற்கு ஏற்ப சிறைவிதிகளை மாற்ற தமிழக அரசு முன்வரவேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் இப்பவும் சிறை சுப்பிரண்டனை (கண்காணிப்பாளர்) துரை என்றே அழைக்கிறார்கள். அதையாவது முதலில் நீக்க வேண்டும்.
No comments:
Post a Comment