நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமார் அவர்களே!
நாடுகடந்த தமிழீழ அரசின் 7 வது அமர்வில் கலைஞர் சார்பில் கலந்துகொள்ள தன்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் சோனியாவுடன் கலைஞருக்கும் பங்கு உண்டு என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் கலைஞர் சார்பாக ஸ்டாலின் அழைக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை தமிழ் மக்கள் மறக்கவோ அல்லது மன்னிக்கவோ தயாராக இல்லாத நிலையில் அவரை நாடு கடந்த தமிழீழ அரசு எதற்காக அழைக்க வேண்டும்?
கலைஞர் ஆட்சியின் போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முத்துக்குமார் முதல் 16 தமிழர்கள் தீக்குளித்து இறந்ததை மறந்துவிட்டதா நாடுகடந்த தமிழீழ அரசு?
கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமில் இன்றும் ஈழஅகதிகள் அடைபட்டுக்கிடக்கும்போது கலைஞர் சார்பாக ஸ்டாலின் அழைக்கப்பட்டால் அதன் அர்த்தம் என்ன?
வயதான பெண் என்றும்கூட பாராமல் பார்வதி அம்மாளை மருத்துவ சிகிச்சை பெறவிடாமல் திருப்பி அனுப்பிய கலைஞரை நாடு கடந்த தமிழீழ அரசு அழைத்தால் அதன் அர்த்தம் என்ன?
செய்த துரோகத்திற்கு கலைஞர் இதுவரை மன்னிப்பு கேட்டாரா? கலைஞரின் துரோகத்தை ஏன் நாடுகடந்த தமிழீழ அரசு மறக்க முனைகிறது?
அப்படியென்றால் அடுத்து சோனியா அம்மையார் சார்பில் அவர் மகன் ராகுல் காந்தியை நாடு கடந்த தமிழீழ அரசு அழைக்கப் போகிறதா?
போகிற போக்கைப் பார்த்தால் மகிந்த ராஜபக்ச சார்பில் நாமல் ராஜபக்சவைக்கூட நாடு கடந்த தமிழீழ அரசு அழைக்கும் போல் இருக்கிறது.
பதில் தருவீர்களா பிரதமர் அவர்களே!
No comments:
Post a Comment