•கனடா பிரதமரும் இந்திய பிரதமரும்!
கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்;களை நினைவு கூர்ந்துள்ளார். ஆனால் அண்மையில் இலங்கை வந்த இந்திய பிரதமர் மோடி இனப் படுகொலை பற்றி வாய் திறக்கவேயில்லை.
கனடா பிரதமர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சர்வதேச நீதிபதிகள் மூலம் விசாரணை செய்யப்பட வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் இந்திய அரசு சர்வதேச விசாரணையை மட்டுமல்ல உள்ளுர் விசாரணையைக்கூட இதுவரை கோரவில்லை.
கனடா பிரதமர் கனடாவில் உள்ள 3 லட்சம் தமிழ் மக்களின் உணர்வுகளை தான் புரிந்துகொள்வதாக தெரிவித்தள்ளார். ஆனால் இந்திய பிரதமர் இந்தியாவில் 7 கோடி தமிழ் மக்கள் இருந்தும்கூட உணர்வுகளை புரிந்துகொள்ள அக்கறை கொள்ளவில்லை.
கனடாவிற்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர்களுக்கு 7 வருடத்தில் குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 33 வருடங்களாக இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.
இத்தனைக்கும் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு பிரதமர் மோடி குடியுரிமை வழங்கியுள்ளார். ஆனால் ஈழ அகதி இந்துவாக இருந்தும் குடியுரிமையை மறுக்கிறார்.
கனடாவில் ஈழ அகதி கல்லூரியில் படிக்க முடியும். வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெற முடியும். வியாபாரம் செய்ய முடியும். ஆனால் இந்தியாவில் ஈழ அகதிகளுக்கு இவையாவும் மறுக்கப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் தீபெத் அகதிகள், பர்மா அகதிகள், வங்காள அகதிகள் என எல்லா அகதிகளும் சுதந்திரமாக நடமாட முடியும். ஆனால் ஈழ அகதியை மட்டும் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்படுகிறது.
கனடா தன்னை வந்தாரை வாழவைக்கும் நாடு என்று சொல்வதில்லை. கனடா தமது தொப்புள்கொடி நாடு என்று தமிழரும் கூறவதில்லை. ஆனாலும் கனடா தன்னை நம்பி வந்த ஈழ அகதிகளை வாழ வைத்pருக்கிறது.
ஆனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் ஆயிரம் ஆயிர மாண்டு உறவு உள்ளது என்றும் தான் தமிழ் பேசுவதில் பெருமை கொள்கிறேன் என்றும் கூறும் பிரதமர் மோடி இந்தியாவை நம்பி வந்த ஈழ அகதிகளை வாழ வைக்கவில்லை.
இத்தனைக்கு பிறகும் இந்த மோடியை நம்பியை நம்மவர் சிலர் இந்து தமிழீழம் கேட்கிறார்கள். இந்த கொடுமையை என்னவென்று அழைப்பது?
No comments:
Post a Comment