•கழுதை,
முன்னுக்கு போனால் முட்டும்
பின்னுக்கு போனால் உதைக்கும்
முன்னுக்கு போனால் முட்டும்
பின்னுக்கு போனால் உதைக்கும்
புலிகள் இருக்கும்வரை தீர்வு கிடைக்காமல் இருப்பதற்கு புலிகளே காரணம் என்று கூறிவந்தது இந்தியா.
இப்போது புலிகள் அற்ற நிலையில் புலிகளின் போராட்டம் தோல்வியடைந்தமையினால் தீர்வு பெற்றுத் தர முடியவில்லை என்று இந்தியா கூறுகிறது.
வடமாகாணசபை முதல்வரும் மற்றும் உறுப்பினர்களும் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக அவ்வப்போது தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இதனை அவதானித்த இந்தியா அவர்களை அழைத்து டில்லியில் வைத்து “ புலிகளின் போராட்டம் தோல்வியடைந்தமையால் தீர்வு பெறுவதற்கான வாய்ப்பு அரிது என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளும்படி” அறிவுறுத்தியுள்ளது.
14 வடமாகாணசபை உறுப்பினர்களும் 5 அதிகாரிகளும் இந்தியா சென்றுள்ளனர். அதில் ஒருவர்கூட “இத்தனை நாளும் தீர்வு பெற்றுத் தருவதாக கூறிவிட்டு இப்போது தீர்வு பெற முடியாது என்று சொல்வது என்ன நியாயம் ? என்று இந்தியாவிடம் கேட்க வில்லை.
தமிழ் மக்களுக்கு தீர்வு தர முடியாது என்று இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவாக சொல்லிவிட்டார்கள்.
தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தரமுடியாது என்று இந்தியாவும் உறுதியாக கூறிவிட்டது.
ஆனால் இத்தனை அழிவுக்கு பின்னரும் இத்தனை அழிவுக்கும் உதவி புரிந்த இந்தியா தீர்வு பெற்றுத் தரும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களை என்னவென்று அழைப்பது?
குறிப்பு-
யாழ் மருத்துவமனையில் அப்பாவி தமிழ் மக்களை இந்திய ராணுவம் கொன்ற நாளைய தினத்தில் இந்திய தூதர் வன்னியில் தமிழ் விவசாயிகளை சந்திக்கின்றார்.
டில்லியில் தமிழ் விவசாயிகள் நிர்வாணமாக போராடுகின்றார்கள். அவர்களை சந்திக்க மறுக்கும் இந்திய அரசு வன்னியில் ஈழத்து விவசாயிகளை நாளை சந்திக்கின்றது.
No comments:
Post a Comment