•திருமுருகன்காந்தி விடுதலை!
தமிழ்நாட்டில் ஒரு தமிழன் ஈழத் தமிழனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த முடியாது என்றார்கள்.
மீறி அஞ்சலி செலுத்த முயன்றால் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
மெழுகு திரியுடன் அஞ்சலி செலுத்த முயன்றதை பயங்கரவாதம் என்று குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள்.
8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தவனைக்கூட விடுதலை செய்தார்கள்.
ஆனால் தமிழ் இன உணர்வாளர்களை விடுதலை செய்யாமல் வேண்டுமென்றே வாய்தா பெற்று இழுத்தடித்தார்கள்.
சிறையில் அடைத்து சித்திரவதை செய்தால் இன உணர்வாளர்கள் பயந்து அடங்கி விடுவார்கள் என நினைத்தார்கள்.
ஆனால் சிறைப்பட்டவர்கள் அஞ்சவில்லை. மாறாக சிறையில் இருந்துகொண்டே மக்களுக்கு வழி காட்டினார்கள்.
சிறைப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள்கூட தாம் பெருமை கொள்வதாக அறிவித்தார்கள்.
நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் இவர்களுக்கான ஆதரவு பெருகியது. முகநூல் போன்ற ஊடகங்களில் இவர்களுக்கு ஆதரவு அலை வீசியது.
இதனால் வேறு வழியின்றி இவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் நீதிமன்றம் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமுருகன்காந்தி மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரின் விடுதலை மூலம் தெரியவருவது என்னவெனில்,
மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மக்கள் உங்களுக்கு விடுதலை பெற்று தருவார்கள்.
No comments:
Post a Comment