ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 2 new photos.
•கருத்துகள் மக்களை பற்றிக்கொண்டால்
அது பௌதிக சக்தியாக மாறும்!
அது பௌதிக சக்தியாக மாறும்!
நான் எழுதிய “ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் மக்கள் மத்தியில் பரவி வருவது உற்சாகம் அளிக்கிறது.
பலர் தாங்களாகவே நூலைப் பெற்று படிப்பது மட்டுமன்றி அது தொடர்பாக தமது கருத்துக்களையும் ஆர்வமுடன் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, மற்றும் கஜேந்திரனுடன் அமெரிக்காவைச் சேர்ந்த ஜயாத்துரை அவர்களும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
எனது நூல் குறித்து தமது கருத்துக்களை தெரிவித்துள்ள அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு தூத்துக்குடியில் இருக்கும் முத்துப்பாண்டி .சே அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
வணக்கம் தோழர் !
நீங்கள் எழுதிய “ஓரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலைப் படிக்கும் போது எழுந்து போரடவேண்டும் என்று மனம் துடிக்கிறது. ஆனல் எதோ ஒன்று தடுக்கிறது.
கிளர்ச்சியடன் எழந்து நிற்பவர்கள் எதோ ஒரு சக்தியால் தடுக்கப் படுகிறார்கள், அல்லது நசுக்கப்படுகிற்கள். சிலர் போராட மனம் இருந்தும் முடியாமல் தவிக்கிறர்கள்.
தோழர் தமிழரசன் நடத்திய போரட்டம் மேதகு பிரபாகரன் நடத்தியதுபோல் மதிப்பு மிக்க போராட்டம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மார்க்சி லெனினிச மாவோயிசம் என்றல் என்ன என்று எனக்கு சரியாக புரிய வில்லை. நான் அவைகுறித்து சில புத்தகங்கள்தான் படித்துள்ளேன்.
சே வின் பயணிக்குறிப்பு லெனின் காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு போன்ற நூல்களே படித்துள்ளேன்.
தோழர் தமிழரசன் மற்றும் உங்கள் புரட்சியைப் பற்றி இன்னும் ஆழமாக அதிகம் எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் ஒருவேளை அந்த ஆழத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையோ என நினைக்கிறேன்.
தோழர் தமிழரசன் அவர்களை பற்றி நீங்கள் எழுதி இருப்பது படிப்பதற்கு மிகவும் ஆர்வம் தருகின்றது. தோழர் தமிழரசன் மேற்கொண்ட புரட்சி எட்டகனியாய் அடக்குமுறை அரசாங்கத்தால் நசுக்கப்பட்டு இருக்கலாம்
ஆனால் தோழர் தமிழரசன் இருந்திருந்தால்; இன்று தமிழ்நாடு தனிநாடாக விடுதலை பெற்றிருக்கும். ஈழத் தமிழருக்கும் அது உதவிகரமாக இருந்திருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
தோழர் தமிழரசன் சிறையில் இருந்து தப்பிக்க முயன்றது. பாலத்திற்கு வெடிகுன்டு வைத்தல், மக்களுக்கு தீங்கின்றி. மக்களுக்காக அவர் போராடியது யாவும் படிக்கும்போது அவருடைய தியாகம் புரிந்துகொள்ள முடிகிறது.
நூல் அருமையாக உள்ளது. உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
முத்துபாண்டி செ
தமிழ்நாடு சென்னையில் இருக்கும் கஜேந்திரன் அவர்கள்(Karuthiah Gajendran ) தெரிவித்த கருத்துகள் வருமாறு,
ஐயா,
தோழர் தமிழரசன் அவர்களைப்பற்றிய தங்களின் நூலைப் படித்தேன்.
தமிழரசனை ஆதிக்கரசின் அதிகார சக்திகள் வஞ்சகமாக கொலை செய்யப்பட்ட காலத்திலே, அநியாயமாக ஒரு வரலாற்று வீரனை வீழ்த்திவிட்டார்களே என்று வருத்தப்பட்டேன்.
உங்கள் நூலில் உள்ள பல விவரங்கள் தூயவீரனை மென்மேலும் நினைவு கொள்ள வைத்தன.
தமிழரசனின் சாதி ஒழிப்பு தொடர்பான மீன்சுருட்டி அறிக்கையை முழுமையாக தங்கள் நூலில் பதிவு செய்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது.
அந்த அறிக்கையின் உள்ளடக்கம் தங்கள் வசமிருந்தால் முகநூலில் அல்லது வேறு வழியிலாவது அனைவரும் அறிய வெளியிட வேண்டுகிறேன்.
அம்மாவீரனின் எண்ணங்களை தமிழர்களறிந்து தங்கள் செயல்பாட்டினூடக கூர்மைப்படுத்துவார்கள்.
நன்றி
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருக்கும் ஜெகதீஸ்வரன் ஜயாத்துரை அவர்கள் ( Jegatheeswaran Iyathurai) தெரிவித்த கருத்துகள் வருமாறு,
வணக்கம் தோழர்
மன்னிக்கவும் நான் கொஞ்சம் வேலையாக இருந்ததால். உங்கள் புத்தகத்தை வாசித்து முடிக்க கொஞ்சம் சுனங்கிவிட்டது. அத்தனையும் அருமையான பதிவுகள் நன்றி தோழர்.
அரசியல் ராணூவ பொருளாதார கலாசார.சாதியம். அத்தனையும் உண்மையாகவும். நேர்மையாகவும். எடுத்து சொல்லி இருக்கிறீங்கள். வாழ்த்துகள் தோழர்.
மற்றது 90 ம் ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து எதுவும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை தோழர். மற்றது தோழர் தமிழரசன் பற்றி முன்பு எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை உங்கள் நூல் மூலம் தான் தற்போது அறிந்து கொண்டேன்.
உண்மையில் இந்த புத்தகம் மூலம் ஒரு விஷயம் நன்றாக எனக்கு புரிகிறது. அது என்ன வென்றால் எமது தமிழ் சமூகத்தில் நடந்த நடந்து கொண்டிருக்கிற. நடக்கப்போற விடயங்களை தெட்டத்தெளிவாக. சுட்டிக்காட்டி இருக்கிறீங்கள்
அதோடு சாதியின் பெயரால் நடந்த கொடூரத்தையும். தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள் அது ஒரு பெரிய விஷயம் தோழர்.
திரும்ப திரும்ப இன்னும் வாசித்து வருகிறேன் தோழர். என்னைப் பொறுத்தவரை எனக்கு உங்கள் புத்தகம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இதுதான் உண்மை நிலை.
நான் நினைக்கிறேன் இன்னும் இன்னும் புதிய பதிவுகளை நீங்கள் செய்வது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் கேட்டதற்கு நீங்கள் உடனே எனக்கு உங்கள் புத்தகம் அனுப்பி இருந்தீர்கள் உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் தோழர்.
நீங்கள் எம் இனத்தின் மீதும் நம்ம மண் மீதும் பற்றுக்கொண்டு இப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உண்மையான. நேர்மையான பதிவுகளையும். புத்தகங்களையும். வெளியிடுகிறீர்கள்.
உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் தோழர். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
நன்றி
ஜெகதீஸ்வரன் ஐயாத்துரை
ஜெகதீஸ்வரன் ஐயாத்துரை
No comments:
Post a Comment