•அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும்கூட சம்பந்தம் இருக்கலாம்
அப்துல் கலாமிற்கும் ஈழத் தமிழருக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?
அப்துல் கலாமிற்கும் ஈழத் தமிழருக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதர் ஏன் அப்துல் கலாமிற்கு பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார்?
அந்த பிறந்தநாள் விழாவில் ஏன் யாழ் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்?
எதற்காக இந்த யாழ் இந்திய தூதரின் எல்லா விழாக்களிலும் மாணவர்களை கட்டாயப்படுத்தி பங்கெடுக்க வைக்கிறார்கள்?
யாழ் இந்திய தூதரின் விழாவில் மாணவர்களை வலுக் கட்டாயமாக பங்கெடுக்க வைக்கும் அதிபர்களின் மீது இலங்கை அரசு ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?
யாழ் நூலகத்தில் எதற்காக அப்துல் கலாமிற்கு சிலை வைத்து அதற்கு பிறந்தநாள் விழா இந்திய தூதர் கொண்டாடுகிறார்?
யாழ் மருத்துமனையில் படுகொலைகளை நடத்திவிட்டு அதற்கு முன்னால் காந்தி சிலையை நிறுவி மாலை அணிவிக்கிறார் யாழ் இந்திய தூதர்.
19 வது நாளாக மூன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். 9 வருடமாக தன் கணவனையும் மகனையும் தேடி அலைந்த பெண் மரணமடைந்துள்ளார்.
ஆனால் வடக்கு கிழ்க்கு முழுவதும் மேலும் 20 காந்தி சிலைகளை நிறுவப் போவதாக யாழ் இந்திய தூதர் புன்னகையுடன் கூறுகிறார்.
அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டில்கூட அவரை நினைவு கூரப்படாத நிலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏன் இந்த இந்திய தூதர் நினைவு கூருகிறார்.
நாம் அறிந்த வரையில் இலங்கையில் தமிழ் இனம் படுகொலை செய்யப்பட்ட வேளையில் அதை தடுக்காமல் பதவியில் இருந்தவர் அப்துல் கலாம்.
அதுமட்டுமன்றி இனப் படுகொழைல செய்த மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பு வந்து கொஞ்சம்கூட கூச்சமின்றி கைகுலுக்கியவர் இந்த அப்துல்கலாம்.
அவருக்கு யாழ்ப்பாணத்தில் சிலை வைத்தது மட்டுமல்டலாமல் அதற்கு மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து விழா கொண்டாடும் இந்திய தூதரை என்னவென்று அழைப்பது?
அதைவிட, இந்த இந்திய தூதர் விட்டெறியும் இறைச்சி துண்டிற்காக அலையும் நம் யாழ் பிரமுகர்களை என்னவென்று அழைப்பது?
குறிப்பு- இந்திய தாதரின் விழாவில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பங்கெடுக்க வைக்கும் கல்லூரி அதிபர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்பது பற்றி வழக்கறிஞர்களின் கருத்தை அறிய விரும்புகிறோம்.
மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட வழக்கறிஞர்கள் யாராவது இது பற்றி கருத்து தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment