•இந்தியாவும் ஈழ அகதிகளும்!
இதோ! அவுஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் ஒரு ஈழத் தமிழர். அவர் பெயர் சமந்தா ரட்ணம்
இவருடைய குடும்பம் அகதியாக அவுஸ்ரேலியா சென்றது. அங்கு அவர் குடியுரிமை பெற்றார். கல்வி கற்றார். தற்போது ஒரு கட்சியின் தலைவியாக உள்ளார்.
அகதியாக சென்றவர் கவுன்சிலராக, மேயராக இருந்து தற்போது பாராளுமன்ற உறுப்பினராகி( MP ) உள்ளார்.
இதோ! படத்தில் அடுத்து இருப்பவர் நளினியின் மகள் அரித்ரா. இந்திய தாய்க்கு இந்திய சிறையில் பிறந்தவர். சட்டப்படி அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்திய குடியுரிமை மட்டுமல்ல அவர் சிறையில் இருக்கும் தன் தாய் தந்தையரைப் பார்ப்பதற்கு இந்திய விசாகூட மறுக்கப்படுகிறது.
லண்டனில் தற்போது இருக்கும் அரித்ராவுக்கு பிரித்தானியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதுடன் அவர் மருத்துவக் கல்வி பெறுவதற்குரிய வாய்ப்பும் வழங்கப்பட்டது.
அரித்ராவின் தாய் தந்தையர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறை வைக்கப்பட்டிருப்பதால்தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என சிலர் நினைக்கக்கூடும்.
அப்படி நினைப்பவர்களுக்கு இன்னொரு தகவலையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
தமிழக அகதிமுகாமில் இருக்கும் நந்தினி என்று ஒரு அகதி மாணவி மருத்துவக் கல்விக்குத் தேவையான புள்ளிகள் எடுத்திருந்தும் அவர் அகதி என்பதால் அவருக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்த மாணவியோ அல்லது இவரின் தாய் தந்தையரோ எந்த குற்றமும் செய்யவில்லை. எந்த வழக்கும் இவர்கள் மீது இல்லை.
இருப்பினும் அகதி என்பதால் இவருக்கான மருத்துவ கல்வி வாய்ப்பு இந்திய அரசால் மறுக்கப்பட்டது.
இவர் தனக்கு நீதிகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் “ஈழத்தாய்” ஜெயா அம்மையார் இரக்கம் காட்டவேயில்லை.
ஒரு ஈழ அகதிப்பெண் அவுஸ்ரேலியா சென்றதால் அங்கு உயர் கல்வி கற்று MPயாகிறார்.
இன்னொரு பெண் சிறையில் பிறந்திருந்தாலும் லண்டன் சென்றதால் அங்கு கல்வி பெற்று தற்போது டாக்டராக இருக்கிறார்.
ஆனால் இன்னொரு மாணவி இந்தியா சென்றதால் தேவையான புள்ளிகள் எடுத்திருந்தும் அகதி என்றுகூறி கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளார்.
லண்டன், அவுஸ்ரேலிய நாடுகள் அகதியாக வந்த தமிழர்களுக்கு கல்வி வேலை மட்டுமல்ல குடியுரிமையும் வழங்குகின்றன.
ஆனால் தொப்புள்கொடி உறவுநாடு என்று நம்பிச் சென்ற இந்தியாவோ குடியுரிமை தராதது மட்டுமன்றி கல்வியைக்கூட தர மறுக்கிறது.
இத்தனைக்குப் பிறகும் இந்தியா ஈழத் தமிழ் மக்களுக்கு உதவும் என்று கூறிக்கொண்டு திரிபவர்களை என்னவென்று அழைப்பது?
No comments:
Post a Comment