•இன்று சர்வதேச அகதிகள் தினமாம்!
ஒருநாள் அகதியாக இருந்து பார். அகதியின் வலி அப்போது புரியும்.
ஒன்றல்ல இரண்டல்ல 34 ஆண்டுகளாக இந்தியாவில் அகதியாக இருக்கும் ஈழத் தமிழர்களின் வலியை வார்த்தைகளில் வடிக்க முடியாது.
அதுவும் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி ஈழ அகதிகளின் விடுதலை குறித்து யாருமே அக்கறை கொள்வதில்லை.
யுத்தம் முடிந்து 9 வருடங்களாகி விட்டது. ஆனால் இன்னமும் இந்தியாவில் இருக்கும் அகதிகளுக்கு விடிவு பிறக்கவில்லை.
உலகில் பிற நாடுகளுக்கு சென்ற ஈழ அகதிகளுக்கு 7 வருடங்களில் குடியுரிமை வழங்கப்படுகிறது. கல்வி வெலை வாயப்பு எல்லாம் வழங்கப்டுகிறது.
பல நாடுகளில் ஈழ அகதிகள் கவுன்சிலராக, மேயராக, பாராளுமன்ற உறுப்பினராக எல்லாம் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
ஆனால் தாய்த் தமிழகம் , தொப்புள்கொடி உறவு என்று நம்பி சென்ற இந்தியாவில் 34 வருடமாகியும் குடியுரிமை வழங்கப்படவில்லை
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் ஈழ அகதி இந்துவானாலும் குடியுரிமை வழங்கப்படவில்லை.
அகதிகளை பாரபட்சமாக நடத்தும் இந்த இந்தியா ஈழத் தமிழருக்கு இந்து தமிழீழம் பெற்று தரும் என்று சிவசேனை சச்சிதானந்தம் கூறுகிறார்.
இந்தியா இந்து தமிழீழம் எடுத்து தர வேண்டாம். அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டாம்.
குறைந்த பட்சம் சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளையாவது விடுதலை செய்யட்டும்.
அகதிகள் தினத்தில் இதையாவது இந்திய அரசு செய்ய முன்வருமா?
No comments:
Post a Comment