Saturday, June 30, 2018

பேரறிவாளனை கருணைக் கொலை செய்து விடுங்கள்

பேரறிவாளனை கருணைக் கொலை செய்து விடுங்கள்
- தாயார் அற்புதம்மாள் உருக்கமான கோரிக்கை.
பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலையை மத்திய அரசின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
அதையடுத்து தனது மகனை விடுதலை செய்ய முடியாவிடில் கருணைக் கொலை செய்து விடுங்கள் என தாயார் அற்புதம்மாள் கோரியுள்ளார்.
ஒரு தாயார் எந்தவொரு சூழ்நிலையிpலும் தன் மகனை கருணைக் கொலை செய்யும்படி கேட்கமாட்டார்.
ஆனால் இங்கு அற்புதம்மாள் கேட்கிறார் எனில் அவர் எந்தளவுதூரம் விரக்தி அடைந்துள்ளார் என்பதை உணர முடியும்.
ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் இருபத்தியேழு ஆண்டுகள் தன் மகனின் விடுதலைக்காக அயராது உழைத்த தாய் விரக்தி அடைந்துள்ளார்.
இப்போது தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?
மாநில அரசு, மத்தியஅரசு, உச்சநீதிமன்றம் என மாறி மாறி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டபோது தலையிடாத மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் எழுவர் விடுதலையில் தலையிடுவது ஏன்?
இந்த எழுவரும் தமிழர் என்பதால்தானே மத்தியஅரசும் உச்சநீதிமன்றமும் நியாயம் வழங்க மறுக்கின்றன.
இப்போது இருக்கும் தமிழக அரசு மத்திய பாஜக அரசின் கைப்பொம்மை அரசாக இருக்கிறது. இது ஒருபோதும் மத்திய அரசை எதிர்த்து எழுவரையும் விடுதலை செய்ய முன்வராது.
எனவே இந்த எழுவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமெனில் தமிழ் மக்களின் ஒருமித்த போராட்டத்தினால் மட்டுமே முடியும்.

No comments:

Post a Comment