அடி மேல் அடி அடித்தால் அம்மி நகரும்
ஆனால், எத்தனை அடி விழுந்தாலும்
சரவணபவன் எம்.பி திருந்தவேமாட்டார்!
ஆனால், எத்தனை அடி விழுந்தாலும்
சரவணபவன் எம்.பி திருந்தவேமாட்டார்!
உழைக்கும் மக்கள் தமக்கு ஒரு கஸ்டம் என்றால் எம்.பி யிடம் சென்று முறையிடுவார்கள். அந்த எம்.பி யே அவர்களிடம் திருடினால் அவர்கள் யாரிடம்தான் சென்று முறையிட முடியும்?
உதயன் பத்திரிகையில் பணிபுரியும் ஊழியர்களின் சேமலாப நிதியைக் கட்டாமல் அதன் நிறுவனர் சரவணபவன் சுருட்டியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரே அதுவும் தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ் தொழிலாளர்களின் பணத்தை மோசடி செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
முன்பு சப்றா நிதி நிறுவனம் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களின் சேமிப்பு பணத்தை சுருட்டியவர் இப்போது தொழிலாளர்களின் சேமலாப நிதியை சுருட்டியுள்ளார்.
இப்போது பழியை தனது கணக்காளர் மீது போட்டு அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.
சேமலாபநிதியைக் கட்டத் தவறியமைக்கான தண்டப் பணம் செலுத்துவதாக சரவணபவன் எம்.பி சம்மதம் தெரிவித்துள்ளார்.
டக்லஸ் தேவானந்தா தொடர்ந்த அவதூறு வழக்கில் 20 மில்லியன் ரூபா மானநஷ்டஈடு செலுத்துமாறு கடந்தவாரம் நீதிமன்றம் இவருக்கு தீர்ப்பு வழங்கியிருந்தது.
இவ்வாறு எத்தனை லட்சம் ரூபா தண்டமாக செலுத்த நேரிட்டாலும் இந்த சரவணபவன் எம.பி ஒருபோதும் திருந்தமாட்டார்.
ஆனால் இங்கு எமது வருத்தம் என்னவெனில் இப்படிப்பட்டவர்களுக்கு ஏன் பாராளுமன்ற பதவிகளை தமிழ்தேசியகூட்டமைப்பு வழங்குகிறது?
இவருக்கு குடை பிடிக்க இன்னொருவர் தேவை. இவர் பவனி வர 5 கோடி ரூபா சொகுசு வாகனம் தேவை.
ஆனாலும் இவர் தமிழ் மக்களைப் பற்றி சிந்தித்ததேயில்லை. மாறாக தன் மகளுக்கு ஜனாதிபதியை அழைத்து வந்து பிறந்தநாள் கொண்டாடினார்.
அதுமட்டுமன்றி “போராட்டம்தான் இனி வழி. வேறு வழியில்லை” என்று மக்கள் மத்தியில் வந்து பேசி ஏமாற்ற முயல்கிறார்.
இப்படிப்பட்டவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். அந்த நாள் எப்போது வரும்?
No comments:
Post a Comment