Saturday, June 30, 2018

இரண்டு ஆடுகள் வேறு வேறு திசையில் சென்றன

இரண்டு ஆடுகள் வேறு வேறு திசையில் சென்றன
அவை இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே !!
முதலமைச்சர்- வணக்கம் அய்யா! இது நீங்கள் உட்கார வைச்ச பதவி. உங்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன்
சம்பந்தர் அய்யா- அப்ப பாராளுமன்ற தேர்தலின்போது நல்லவர்களுக்கு வாக்களிக்கும்படி கூறியது, உள்ளுராட்சி தேர்தலில் சின்னங்களை பார்க்க வேண்டாம். நல்லெண்ணங்களை பார்த்து வாக்களிக்கும்படி கூறியது ஏன்?
முதலமைச்சர்- நீங்களும் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்று ஒவ்வொரு வருடமும் கூறுகிறீர்கள். ஏன் தீர்வு வரவில்லை என்று நான் எப்பவாவது கேட்டிருக்கின்றேனா?
சம்பந்தர் அய்யா- சரி சரி அடுத்தமுறையும் உங்களுக்கு சீட் கொடுக்கும்படி இந்தியாக்காரர் சொல்லுயினம். எனக்கு பிரச்சனை இல்லை. அனால் தம்பி மாவையும் சுமந்திரனும்தான் கொஞ்சம் எதிர்க்கினம்.
முதலமைச்சர்- உங்களோட அனுசரித்து போகும்படிதான் இந்தியா போனபோது அவை எனக்கும் சொன்னவை.

No comments:

Post a Comment