Saturday, June 30, 2018

இந்து கலாச்சார பிரதி அமைச்சு பதவியை

 இந்து கலாச்சார பிரதி அமைச்சு பதவியை
காதர் மஸ்தானுக்கு வழங்கிய சம்பந்தர் அய்யா வாழ்க!
ஜனாதிபதி மைத்திரி- மிஸ்டர் சம்பந்தன்! டக்லஸ்க்கு அமைச்சு பதவி வழங்கலாமா?
சம்பந்தர் அய்யா- நோ! ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். டக்ளஸ்க்கு பதவி வழங்கப்படாது என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். மறந்து விட்டீர்களா?
ஜனாதிபதி மைத்திரி- ஆம். எமக்கு ஆதரவு தர நீங்கள் போட்ட ஒப்பந்தம் அல்லவா. நன்றாக நினைவிருக்கிறது. அப்படியென்றால் அங்கஜன் ராமநாதனுக்கு பிரதி சபாநாயகர் பதவியை வழங்கட்டுமா?
சம்பந்தர் அய்யா- அஞ்கஜனுக்கு பதவி கொடுப்பதை எனது அன்புத் தம்பி சுமந்திரன் விரும்பவில்லை. எனவே அதையும் ஆதரிக்க முடியாது.
ஜனாதிபதி மைத்திரி- அப்படியென்றால் என்ன செய்வது? பேசாமல் உங்கள் கட்சியே அமைச்சு பதவிகளை ஏற்கலாமே?
சம்பந்தர் அய்யா- அமைச்சு பதவிகளை ஏற்பதில் எனக்கும் விருப்பம்தான். ஆனால் இப்பவே தமிழ் மக்கள் எங்களை விரட்டுகிறார்கள் என்று மாவை சேனாதிராசா கவலைப்படுகிறார். அமைச்சு பதவி எற்றால் அப்புறம் தேர்தலுக்கு மக்கள் மத்தியில் போகவே முடியாது.
ஜனாதிபதி மைத்திரி- அப்படியென்றால் நான் என்ன செய்வது, இந்து கலாச்சார பிரதி அமைச்சர் பதவியை காதர் மஸ்தானுக்கு வழங்கட்டுமா?
சம்பந்தர் அய்யா- ஆம். தாராளமாக வழங்குங்கள்.
ஜனாதிபதி மைத்திரி- இநது கலாச்சார பிரதி அமைச்சு பதவியை ஒரு முஸ்லிம்க்கு வழங்கினால் தமிழ் மக்கள் கோபப்பட மாட்டார்களா மிஸ்டர் சம்பந்தன்?
சம்பந்தர் அய்யா- உணர்வுள்ள சில தமிழர் கோபப்படத்தான் செய்வார்கள். ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஒரு முஸ்லிம்க்கு நான் வழங்கியபோது முதலில் கோபப்பட்டுவிட்டு பின்னர் எப்படி அமைதியானார்களோ அதே மாதிரி இதற்கும் பின்னர் அமைதியாகி விடுவார்கள்.
ஜனாதிபதி மைத்திரி- புரியவில்லை மிஸ்டர் சம்பந்தன்! எப்படி தமிழ்மக்களை சமாளிக்கப் போகிறீர்கள்?
சம்பந்தர் அய்யா- “இந்துக் கலாச்சார பிரதி அமைச்சுப்பதவியை ஒரு முஸ்லிம்க்கு வழங்கி தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு வழி சமைத்த சம்பந்தர் அய்யா” என்று தம்பி சுமந்திரன் ஒரு பேட்டி கொடுப்பார். இதனை சுமந்திரனிடம் லப்டப் கம்பியூட்டர் வாங்கிய ஊடகவியலாளர்கள் நன்றியுணர்வுடன் பிரசுரிப்பார்கள். தமிழ் மக்களும் நாளடைவில் மறந்து விடுவார்கள்.
குறிப்பு-
இந்து கலாச்சார அமைச்சு பதவியை ஒரு முஸ்லிம்க்கு கொடுப்பதில் ஜனாதிபதியும் பொருட்படுத்தவில்லை
இந்துகாலாச்சார அமைச்சு பதவியை எற்பதில் முஸ்லிம் காதர் மஸ்தானும் தயக்கம் காட்டவில்லை.
இந்துகலாச்சார அமைச்சு பதவி ஒரு முஸ்லிம்க்கு வழங்குவது பற்றி சம்பந்தர் அய்யாவும் வெட்கப்படவில்லை.
எந்தவித அதிகாரமும் அற்ற இந்த பதவி யாருக்கு போனால்தான் என்னவென்று மக்களும் அக்கறை கொள்ளவில்லை.
ஆனால் ஒரேயொரு கேள்வி,
இதேபோல் பௌத்தசாசன அமைச்சு பதவியை ஒரு பௌத்தர் அல்லாதவருக்கு ஜனாபதியால் வழங்க முடியுமா?
ஆம், வழங்க முடியுமென்றால் இந்து கலாச்சார அமைச்சு பதவியை முஸ்லிக்கு வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

No comments:

Post a Comment