•மோடியின் பந்து வீச்சுகளை
சிக்சர் அடிக்கும் இம்ரான்கான்!
சிக்சர் அடிக்கும் இம்ரான்கான்!
கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரரை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
மோடி தனது தேர்தல் வெற்றிக்காக செய்த அனைத்து போர் முயற்சிகளையும் இம்ரான்கான் முறியடித்து வருகிறார்.
இம்ரான்கான் சிறந்த கிரிக்கட் வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தனது அரசியல் பந்து வீச்சையும் அவர் சிதறடிப்பார் என மோடி நிச்சயம் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
இந்திய மக்கள் மட்டுமல்ல பாகிஸ்தான் மக்களும் போரை விரும்பவில்லை என்பதை இம்ரான்கான் உணர்ந்திருந்தார்.
அதனால்தான் அவர் ஆரம்பத்தில் இருந்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்ப்போம் என அழைப்பு விட்டுக்கொண்டிருந்தார்.
அவர் நினைத்திருந்தால் இந்திய விமானியை பாகிஸ்தான் மக்கள் அடித்து கொல்ல விட்டிருக்கலாம்.
அவர் நினைத்திருந்தால் இந்திய விமானியை சிறையில் அடைத்து சித்திரவதை செய்திருக்கலாம்.
அவர் நினைத்திருந்தால் இந்திய விமானியை வைத்து ஏதாவது பேரம் பேசியிருக்கலாம்.
ஆனால் அவர் இந்திய விமானியை காப்பாற்றி அவரை கௌரவமாக நடத்தியதுடன் நாளை விடுதலையும் செய்கிறார்.
இம்ரான்கான்,
முதலில் 300 பயங்கரவாதிகளை கொன்றதாக இந்தியா கூறியது பொய் என்று மோடியின் பிரச்சாரத்தை முறியடித்தார்.
அடுத்து பிடிபட்ட இந்திய விமானியை டிவியில் காட்டி மோடியின் முகத்தில் கரியை பூசினார்.
இப்போது இந்திய விமானியை விடுதலை செய்வதன் மூலம் மோடியின் போர் முயற்சிக்கு செருப்பால் அடித்துள்ளார்.
அதைவிட அவர் செய்த இன்னொரு விடயம்தான் இப்போது இந்தியாவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
இந்திய விமானி பிடிபட்டவுடன் அவரை இந்தியாவின் எந்தப்பகுதியை சேர்ந்தவர் என்று கேட்டு “தென்னிந்தியர்” என உறுதிப்படுத்துகின்றனர்.
அதாவது அவர்கள் இந்தியாவின் “வடஇந்தியா” “தென்இந்தியா” முரண்பாட்டை கவனிக்க தொடங்கிவிட்டனர் என்பதை இது காட்டுகிறது.
எனவேதான் இந்தியவிமானியை விடுதலை செய்வதன் மூலம் (1)விடுதலை செய்தாயிற்று (2)தென்னிந்தியா மக்களிடம் மதிப்பும் பெறலாம் என்று ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்துள்ளார்
அவர்களது இந்த கணிப்பு நிச்சயம் பயன் அளிக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் இம்ரான்கான் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு இந்திய மொழிகளில் தமிழ் மொழிபெயர்ப்புதான் அதிகம் பரவியுள்ளது.
ஏற்கனவே தமிழகம் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. எனவே பாகிஸ்தானின் இந்த அணுகுமுறை தென்னிந்தியாவில் பெரு நெருப்பையே பற்ற வைத்துவிடுமோ என்று இந்திய அரசு அச்சம் கொள்கிறது.
அதனால்தான் “பிச்சை வேண்டாம். நாயைப்பிடி” என்ற நிலை மோடிக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment