• சுனந்த தேசப்பிரிய
இவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவரே.
கொல்லப்பட்ட ராணுவத்தினர் இவருடைய சிங்கள இனத்தவரே
கொல்லப்பட்ட ராணுவத்தினர் இவருடைய ஊரைச் சேர்ந்தவரே
கொல்லப்பட்ட ராணுவத்தினர் இவருடைய உறவினராககூட இருந்தனரே.
ஆனாலும் இவர் கொல்லப்பட்ட ராணுவத்தினருக்கு ஒருபோதும் வீரவணக்கம் செலுத்தவில்லை.
மாறாக இனப்படுகொலை சாட்சியங்களை தேடி எடுத்து உலகிற்கு வழங்கினார்.
இவர் பெற்றுக்கொடுத்த படங்களையும் வீடீயோக்களையும் சனல்4 தொலைக்காட்சி பயன்படுத்தியது.
ஆனால் சனல்4வின் கெலம் மக்ரேயை தெரிந்த அளவிற்கு இவரை தமிழ் மக்களுக்கு தெரியவில்லை.
இவர் இலங்கை செல்ல முடியாமல் தற்சமயம் ஜரோப்பிய நாடொன்றில் தஞ்சம் பெற்றிருக்கிறார்.
புலிகளின் பிரமுகராக இருந்த இமானுவேல் அடிகளாரைக்கூட இலங்கை திரும்ப அனுமதித்த இலங்கை அரசு இவரை அனுமதிக்க மறுக்கிறது.
இதில் இருந்தே இவர் மீது இலங்கை அரசு எந்தளவு கோபத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஆனாலும் இவர் இலங்கை அரசின் தமிழின படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
ஆனால் கொடுமை என்னவெனில் லண்டன் கனடா வில் இருக்கும் புலம்பெயர்;ந்த தமிழ் பிரமுகர்கள் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரவை வரவேற்று அவருடன் விருந்துண்ணுகிறார்கள்.
ஆனால் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் சுனந்த தேசப்பிரியவை வரவேற்பதில்லை. அவருடன் விருந்துண்ணுவதும் இல்லை.
No comments:
Post a Comment