•இதைத்தானேடா நாங்களும் இத்தனைநாளாய் கேட்கிறோம்?
பெரிய இடத்து மனிதர் யாராவது நிர்மலாதேவி வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா?
அந்த பெரிய மனிதரை காப்பாற்றுவதற்காகவா நிர்மலாதேவிக்கு இன்னும் ஜாமீன் வழங்கப்படவில்லை?
கொலை வழக்கில்கூட ஜாமீன் வழங்கப்படுகையில் நிர்மலாதேவிக்கு ஒரு வருடமாகியும் ஏன் ஜாமீன் வழங்கப்படவில்லை?
நிர்மலாதேவி ஜாமீன் வழங்க முடியாத அளவிற்கு அந்தளவு பெரிய கிரிமினலா?
இத்தனை கேள்வியையும் மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இதுவரை விசாரணை செய்துவந்த தமிழக குற்றப்புலனாய்வு துறையினருக்கு தடையும் உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
இதைத்தானேடா நாங்களும் இத்தனைநாளாய் கூறிவருகிறோம். இப்போது உயர்நீதிமன்றமும் கூறியுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட தமிழக ஆளுநரைக் காப்பாற்றுவதற்காகவே தமிழக அரசும் அதன் காவல்துறையும் ஆரம்பத்தில் இருந்து செயற்படுகிறது.
எனவே இனியாவது இதில் நீதியான விசாரணை நடைபெற வேண்டுமாயின் முதலில் ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
ஆனால் ஆளுநரை விசாரிக்க வேண்டிய தமிழக காவல்துறை ஆளுநரைப் பற்றி எழுதியதாக தமிழரசன் அப்துல்காதர் என்ற உணர்வாளரை கைது செய்து வழக்கு போடுகிறது.
நல்லவேளையாக சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி தமிழரசன் அப்துல் காதருக்கு ஜாமீன் வழங்கி விடுதலை செய்துள்ளார்.
இந்த தமிழக ஆளுநருக்காக இன்னும் என்னென்ன வேலைகளை எல்லாம் தமிழக அரசும் அதன் காவல்துறையும் செய்யப் போகிறது?
No comments:
Post a Comment