பிரதமர் சார் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா?
உங்களுக்கு தெரிஞ்ச கதைதான்.
ஒரு சிறுவன் கூனி குறகி படுத்திருந்தான்.
அதைப்பார்த்த அவனது தாயார் “ ஏன் மகனே காலை நல்லாய் நீட்டி படுக்காமல் இப்படி குறுகிப்படுத்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த மகன் “ ஒரு பக்கம் தமிழன் ஒதுக்கிறான். இன்னொரு பக்கம் இந்து சமுத்திரம் ஒதுக்கிறது. நான் எப்படி நீட்டி நிமிர்ந்து படுக்க முடியும் அம்மா?” என்று கேட்டான்.
அவ்வாறு படுத்து கிடந்த அந்த சிறுவன்தான் பின்னாளில் தனக்கு மட்டுமல்ல தன் இன மக்களும் நிம்மதியாய் உறங்க வழி சமைத்தான்.
இதைத்தான் துட்ட கைமுனு வரலாறு என்று இன்றும் நீங்கள் சிங்கள மக்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்.
இப்போது அதேபோன்று ஒரு கதை எம் மண்ணில் நடக்கிறது பிரதமரே.
எமது தமிழ் சிறுவன் கேப்பாப்புலவில் கூனி குறுகிகூட படுப்பதற்கு சொந்த நிலம் இன்றி ரோட்டில் படுத்திருக்கிறான்.
இப்போது கூறுங்கள் பிரதமரே, இந்த தமிழ் சிறுவன் என்ன செய்ய வேண்டும்?
மறப்போம் மன்னிப்போம் என்று கூறிவிட்டு ரோட்டில் படுத்திருக்க வேண்டுமா அல்லது தான் நிம்மதியாய் உறங்க தன் சொந்த நிலத்தை மீட்க வேண்டுமா?
அப்ப வரட்டா பிரதமரே!
No comments:
Post a Comment