• சில கேள்விகளும் பதில்களும்
கேள்வி - இந்தியாவில் சாதி ஒழிப்பு குறித்து கம்யுனிஸ்ட் கட்சி எதுவும் தனி திட்டமோ அறிக்கையோ கொண்டிருக்கவில்லையா?
பதில் - நான் அறிந்தவரையில் தோழர் தமிழரசன் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சியினர் சாதி ஒழிப்பு குறித்து தனியான அறிக்கை முன்வைத்துள்ளனர்.
1985ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டத்தில் மீன்சுருட்டி என்னும் இடத்தில் நடந்த கருத்தரங்கில் தோழர் தமிழரசனால் முன்வைக்கப்பட்ட இவ் அறிக்கை மீன்சுருட்டி அறிக்கை என அழைக்கப்படுகிறது.
கேள்வி- இவ் அறிக்கையில் பெரியார் மற்றும் அம்பேத்கார் கருத்துகள் பற்றி தோழர் தமிழரசன் என்ன கூறுகிறார்?
பதில் - “அம்பேத்கார் அவர்கள் பொதுவுடமையை ஏற்றுக்கொள்பவரல்ல. அவர் மதத்தை எதிர்ப்பவரும் அல்ல. ஆனால் அவர் சாதி ஒழிப்பை மனப்பூர்வமாக விரும்பினார். அதேவேளை சாதி ஒழிப்பு குறித்த அவரது அணுகுமுறையானது ஆரம்பம் முதல் இறுதிவரை எதிரிகளிடமே கெஞ்சிக் கேட்பதாகவே இருந்தது.”
“பெரியாரைப் பொறுத்தவரையில் எந்த மதத்தையும் எந்தக் கடவுளையும் ஏற்றுக்கொண்டதில்லை. அதே நேரத்தில் பலாத்கார அமைப்பையுடைய எதிர்ப்பை பலாத்கார அமைப்பு மூலம் மட்டுமே வீழ்த்த முடியும் என்ற நிலையை எடுத்தவருமல்ல” என்று கூறியுள்ளார் தோழர் தமிழரசன்.
அதுமட்டுமல்ல பெரியாரியமும் அம்பேத்காரியமும் சீர்திருத்தவாதம் என்றும் வரட்டுவாதம் போல் இதுவும் புரட்சிக்கு எதிரானது என்று தோழர் தமிழரசன் கூறியுள்ளார்.
கேள்வி – அப்படியென்றால் தோழர் தமிழரசன் குறித்தும் அவர் முன்வைத்த மீன்சுருட்டி அறிக்கை பற்றியும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா என்ன கூறுகிறார்?
பதில் - 2007 ம் ஆண்டு பெண்ணாடத்தில் நடந்த புலவர் கலியபெருமாள் அஞ்சலிக் கூட்டத்தில் திருமா ஆற்றிய உரை கீழ்வரும் இணைப்பில் தந்துள்ளேன். இதில் அவர் தோழர் தமிழரசன் குறித்தும் அவர் முன்வைத்த மீன்சுருட்டி அறிக்கை பற்றியும் கூறியிருப்பதை அறியலாம்.
No comments:
Post a Comment