ஒருவர் கனடாவின் பிரதமர்
இன்னொருவர் எல்லோரும் அறிந்த இந்திய பிரதமர்.
கனடா பிரதமர் வேட்டி அணியும்போது ஈழத்தமிழர் மகிழ்கிறார்கள்.
ஆனால் இந்திய பிரதமர் வேட்டி அணியும்போது அவர் தம்மை ஏமாற்றுவதாக உணர்கிறார்கள்.
இது ஏன்?
கனடாவில் அகதியாக சென்ற ஈழத் தமிழன் விரும்பியதை படிக்கலாம். உரிய வேலை பெறலாம். குடியுரிமையும் பெறலாம்.
ஆனால் 37 வருடமாக இந்தியாவில் அகதியாக இருக்கும் ஈழத் தமிழர் உயர்கல்வி பெற முடியாது. உரிய வேலை செய்ய முடியாது. குடியுரிமைகூட பெற முடியாது.
இந்திய பிரதமர் ஜ.நா வில் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற தமிழ் வரியை உச்சரிக்கிறார்.
ஆனால் நம்பி வந்த ஈழத் தமிழ் அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவெனில் இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவாத இந்திய பிரதமா,; இலங்கை வந்து இந்துத் தமிழருக்கு உதவப் போகிறார் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment