Sunday, March 29, 2020
கை குலுக்காதீர்கள் மாறாக கை எடுத்து கும்பிட்டுக்கொள்ளுங்கள்
கை குலுக்காதீர்கள் மாறாக கை எடுத்து கும்பிட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார் இளவரசர் சார்லஸ்.
அடிக்கடி நன்றாக கை கழுவுங்கள் என்றார் பிரதமர் போரிஸ் ஜோன்சன்
இப்ப என்னடாவென்றால் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள்.
ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இவர்கள் மக்களுக்கு கூறியதை தாங்கள் கடைப்பிடிக்கவில்லையா? அல்லது பயன் அற்ற வழிமுறைகளை இவர்கள் மக்களுக்கு கூறியிருக்கிறார்களா?
இவர்களுக்கு கொரோனா தொற்று என்பது உண்மையா அல்லது பொய்யா என்றுகூட தெரியவில்லை.
ஆனால் மக்களின் கோபத்தில் இருந்து தப்ப இவர்களுக்கு இது உதவியிருக்கிறது
.
ஏனெனில் இவ் கொரோனா தொற்று பற்றி பல மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தும் பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்காமல் அசட்டையாக இருந்துவிட்டது.
அருகில் இருக்கும் பிரான்ஸ் நாடுகூட பாடசாலைகளுக்கு விடுமுறை விட்டபோதும் பிரிட்டன் பிரதமர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்.
விமான நிலையத்தையாவது மூடுங்கள் என்று மருத்துவர்கள் கேட்டார்கள். ஆனால் பிரதமர் அதைக்கூட செய்யவில்லை.
இப்போது பிரித்தானிய மக்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சனே பொறுப்பாகும்.
அவர் மக்களுக்கு பதில் சொல்லியேயாக வேண்டும்.
Image may contain: 1 person, text
No comments:
Post a Comment