Sunday, March 29, 2020
•நான் நலம். நீங்கள் நலமா?
•நான் நலம். நீங்கள் நலமா?
நான் நலமாக இருக்கிறேன். அதுபோல் நீங்களும் நலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
அக்கறையுடன் நலம் விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் எதிர்பார்த்ததைவிட கொரோனோவின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இன்னும் இருக்கப் போகிறது.
ஆனாலும் இதை எல்லாம் எதிர் கொண்டு மனித இனம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தரும் செய்திகள் வந்தவண்ணமே இருக்கின்றன.
இதுவரை எந்த நாடுகள் பொருளாதார தடை விதித்து கொடுமைப்படுத்தினார்களோ அந்த நாடுகளுக்கு எல்லாம் சென்று கியூப மருத்துவர்கள் சேவை செய்கின்றனர்.
சில மனிதர்கள் சுயநலத்துடன் செயற்பட்டாலும் பலர் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவி புரிகின்றனர்.
இது “மனிதம்” குறித்து நம்பிக்கை தருகிறது.
சரி. நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?
குறிப்பு - பிளீஸ்! நள்ளிரவில் எல்லாம் எழுப்பி நலம் விசாரிக்காதீர்கள்.😀😀
No comments:
Post a Comment