Wednesday, April 29, 2020
கொரோனோவும் முகநூல் பதிவுகளும்!
•கொரோனோவும் முகநூல் பதிவுகளும்!
நேற்றையதினம் கரவெட்டியில் இருந்து ஒருவர் என்னுடன் முகநூலில் தொடர்பு கொண்டார்.
அவர் ஒரு பெயரைக் குறிப்பிட்டு அந்த நபரைத் தெரியுமா எனக் கேட்டார்.
நான் “தெரியவில்லை. ஏன் ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டேன்.
“நான் குடும்பத்துடன் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து இருக்கிறேன். அந்த நபர் எனக்கும் குடும்பத்தவர்களுக்கும் கரோனோ என்றும் நான் நல்லூரில் ஒளிந்திருப்பதாகவும் செய்தி பரப்பி வருகிறார்” என்றார்.
அந்த நபர் யாழ் மருத்துவ அதிகாரி, ராணுவ அதிகாரி, பொலிஸ் அதிகாரி எல்லோருக்கும் அறிவிக்கிறார். இதனால் அவர்கள் மாறிமாறி என்னுடன் தொடர்பு கொண்டு கரைச்சல் தருகிறார்கள் என்று வருத்தத்துடன் கூறினார்.
“அந்த நபர் யார் என்று தெரியவில்லை. ஏன் இப்படி செய்கிறார் என்றும் எனக்குப் புரியவில்லை” என்றும் அவர் கூறினார்.
இந்தப் பிரச்சனையை உற்று நோக்கும்போது சம்பந்தப்பட்ட நபர் ஏதோ தனிப்பட்ட கோபத்தில் இப்படி பழி வாங்கிறார் அல்லது வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்ற எரிச்சலில் செய்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
பல இளைஞர்கள் முகநூலை இந்த நேரத்தில் நல்லவிதமாக பயன் உள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது இவ்வாறு சிலர் இப்படி பேக் ஜடிகளில் குரூர சிந்தனைகளுடன் செயற்படுகின்றார்கள் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.
கடந்தவாரம் தமிழகத்தில் இருந்து “மள்ளர் பேரவை”யில் இருந்து ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார்.
கொரோனா பிரச்சனையால் கடைகளில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கிறார்கள். இதை கண்டித்து ஒரு பதிவு போடுங்கள் என்று அவர் என்னிடம் கேட்டார்.
இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் பொதுவாக தமிழகத்தில் அகதிமுகாம்களில் இருக்கும் எம் அகதிகளே இப்படி தமக்காக பதிவு போடும்படி என்னிடம் கேட்பார்கள்.
“உங்கள் பதிவுகள் இங்கு பலராலும் கவனிக்கப்படுகிறது. அதனால் நீங்கள் பதிவு போட்டால் நிச்சயம் பயன் அளிக்கும்” என்று அவர் என்னிடம் வலியுறுத்தினார்.
எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். அப்படியான பதிவுகள் செய்யவே ஆசை. ஆனால் இப்படியானவர்களின் வற்புறுத்தலால் தொடர்ந்து சீரியஸ்சான அரசியல் பதிவுகளையே செய்து வருகிறேன்.
என் விருப்பப்படி எழுதும் காலம் வருமா? அதற்காக காத்திருக்கிறேன்.
Image may contain: plant, outdoor and nature
No comments:
Post a Comment